இந்தியாவில் பென்லி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதித்து பார்க்கும் ஹோண்டா!! விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறதா?

பென்லி என்ற ஹோண்டாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று இந்தியாவில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் பென்லி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதித்து பார்க்கும் ஹோண்டா!! விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறதா?

தினந்தோறும் பெட்ரோல் & டீசலின் விலைகள் அதிகரித்து வருவதால் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் & ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாடு முழுவதுமே குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் பென்லி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதித்து பார்க்கும் ஹோண்டா!! விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறதா?

அதுமட்டுமின்றி இந்திய வாடிக்கையாளர்களும் தூய்மையான மற்றும் பசுமையான போக்குவரத்தையே விரும்ப துவங்கியுள்ளனர். இந்திய சந்தையில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு இப்போது தான் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது, ஆனால் சில வெளிநாட்டு சந்தைகள் ஏற்கனவே அந்த நிலையை அடைந்துவிட்டன.

இந்தியாவில் பென்லி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதித்து பார்க்கும் ஹோண்டா!! விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறதா?

இதனால் கிட்டத்தட்ட உலகின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் பல்வேறு விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்தி வருகின்றன. இந்த வகையில் ஹோண்டா விற்பனை செய்துவரும் இ-ஸ்கூட்டர் தான் பென்லி.

இந்தியாவில் பென்லி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதித்து பார்க்கும் ஹோண்டா!! விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறதா?

இப்படியிருக்க தற்போது ஜப்பானிய பிராண்டான ஹோண்டாவின் பென்லி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கத்தின் சார்பில் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை மோட்டார்பீம் செய்திதளத்தின் மூலமாக கிடைத்துள்ளன.

ஹோண்டா டூவீலர்ஸ் நிறுவனம் பென்லி வரிசை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை 2019ல் வெளியிட்டது. ஹோண்டா பென்லி வரிசையில் பென்லி இ 1, பென்லி இ 1 ப்ரோ, பென்லி இ 2 மற்றும் பென்லி இ 2 ப்ரோ என்ற நான்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் அடங்குகின்றன.

இந்தியாவில் பென்லி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதித்து பார்க்கும் ஹோண்டா!! விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறதா?

இதில் பென்லி இ 1 மற்றும் இ 2 ஸ்கூட்டர்களின் அடிப்படையில் தான் பென்லி இ 1 ப்ரோ மற்றும் இ 2 ப்ரோ ஸ்கூட்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பிக்அப் & டெலிவிரி சேவைக்களுக்காக முன்பக்கத்தில் பெரிய கூடை, பின்பக்கத்தில் கேரியர், க்னக்கிள் பாதுகாப்பான்கள் மற்றும் கால் ப்ரேக் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் பென்லி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதித்து பார்க்கும் ஹோண்டா!! விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறதா?

இந்த கமர்ஷியல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று தான் தற்போது இந்திய சாலையில் சோதிக்கப்பட்டுள்ளது. ஆனால் படங்களில் ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் கூடையை பார்க்க முடியாது. ஏனெனில் தற்காலிகமாக அது பொருத்தப்படவில்லை. பின்பக்கத்தில் கேரியரில் சில பொருட்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம்.

இந்தியாவில் பென்லி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதித்து பார்க்கும் ஹோண்டா!! விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறதா?

கேரியரின் தரத்தை சோதிப்பதற்காக இது இருக்கலாம். இந்த கேரியரில் அதிகப்பட்சமாக 60 கிலோ வரையிலான பொருட்களை ஏற்றலாம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ரிவர்ஸ் உதவி செயல்பாட்டையும் ஹோண்டா வழங்குகிறது. இதனால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சந்துகளிலும் எளிமையாக பின்னோக்கி கொண்டு செல்ல முடியும்.

இந்தியாவில் பென்லி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதித்து பார்க்கும் ஹோண்டா!! விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறதா?

பயணிகளின் பாதுகாப்பிற்கு ஒருங்கிணைந்த ப்ரேக்கிங் சிஸ்டத்தை பெறும் இந்த பென்லி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கலில் பென்லி இ 1 மற்றும் 1 ப்ரோ மாடலில் 2.8 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரும், பென்லி இ 2 மற்றும் 2 ப்ரோ மாடலில் 4.2 கி.வா எலக்ட்ரிக் மோட்டாரும் வழங்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Honda Benly e Scooter Spied. Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X