புதிய Honda CB200X அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.44 லட்சம்

புதிய Honda CB200X மோட்டார்சைக்கிள் இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 19) அறிவித்தப்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற அட்வென்ச்சர் பைக்குகளில் இருந்து இது எந்த அளவிற்கு புதுமையானது? எந்த பைக்கை நேரடியாக எதிர்கொள்ள Honda Motorcycles நிறுவனம் இந்த பைக்கை களமிறக்கியுள்ளது? என்பதற்கெல்லாம் பதிலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய Honda CB200X அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.44 லட்சம்

சந்தையில் வலுப்பெற்று வரும் போட்டியினை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறவும் புதிய CB200X பைக் தொடர்பான டீசர் வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த Honda தற்போது இறுதியாக மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்த அட்வென்ச்சர் பைக் NX200 என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல்லாருக்கும் ஆச்சிரியமளிக்கும் விதமாக CB200X என்ற பெயரில் இந்த புதிய பைக்கை Honda Motorcycles நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய Honda CB200X அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.44 லட்சம்

கொரோனா வைரஸ் பரவலின் அச்சத்தால் இணையம் வாயிலாக இந்த அறிமுக நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. ஹோண்டாவின் இந்திய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்கள் வரிசையில் CB500X பைக்கிற்கு கீழே CB200X நிலைநிறுத்தப்பட்டுள்ளது. புத்தம் புதிய Honda CB200X பைக்கின் ஆரம்ப இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,44,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய Honda CB200X அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.44 லட்சம்

மேலும், இந்த அட்வென்ச்சர் பைக்கிற்கான முன்பதிவுகள் இன்று முதல் நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப் மையங்களில் ஏற்று கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய CB200X பைக்கை Pearl Nightstar Black, Matte Selene Silver Metallic மற்றும் Sports Red என்ற மூன்று விதமான பெயிண்ட்களில் வாங்கலாம்.

புதிய Honda CB200X அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.44 லட்சம்

இந்தியாவில் அட்வென்ச்சர் பைக்குகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், CB200X பைக்கிற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய CB200X மோட்டார்சைக்கிளுக்கு Hero XPulse மற்றும் Royal Enfield Himalayan முக்கிய போட்டி மாடல்களாக விளங்கவுள்ளன.

புதிய Honda CB200X அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.44 லட்சம்

இந்த புதிய அட்வென்ச்சர் பைக் பெரும்பான்மையான பாகங்களை Honda Hornet 2.0 பைக்கில் இருந்து தான் பெற்றுள்ளதை இதன் தோற்றத்தை பார்க்கும்போது தெரிய வருகிறது. முன்பக்கத்தில் கருப்பு நிற விஸர், இரட்டை-பயன்பாட்டு டயர்கள் மற்றும் என்ஜின் கௌல் உள்ளிட்டவற்றுடன் பக்கா அட்வென்ச்சர் பைக்காக CB200X உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய Honda CB200X அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.44 லட்சம்

ஹோண்டா இதுவரையில் வெளியிட்டு வந்த டீசர் வீடியோக்களின் மூலமாக பைக்கின் தோற்றத்தை ஓரளவிற்கு கண்டிருந்தோம். அப்போது இந்த புதிய Honda அட்வென்ச்சர் பைக் Hornet-இல் உள்ளதை போன்றதான எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பை தான் பெற்றுவரும் என கூறியிருந்தோம். நாம் எதிர்பார்த்ததை போன்று தான் இதன் முன்பக்கம் உள்ளது.

புதிய Honda CB200X அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.44 லட்சம்

ஆனால் ஹெட்லைட்டை சுற்றிய பேனல்களின் வடிவம் சற்று வித்தியாசப்படுகிறது. அதேபோல் இந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் ஸ்போக்டு சக்கரங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அட்வென்ச்சர் பைக்குகளில் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுவது ஒன்றும் புதியது அல்ல.

ஏற்கனவே BMW G310 GS மற்றும் KTM 250 அட்வென்ச்சர் பைக்குகள் அலாய் சக்கரங்களுடனே விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுடன் அட்வென்ச்சர் பைக்கிற்கு உண்டான அத்தனை அம்சங்களையும் CB200X-இல் Honda Motorcycles நிறுவனம் வழங்கியுள்ளது.

புதிய Honda CB200X அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.44 லட்சம்

புதிய CB200X-இல் Hornet 2.0 பைக்கில் வழங்கப்படும் அதே 184.44சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் CB200X பைக்கில் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 17 எச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 16.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய Honda CB200X அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.44 லட்சம்

சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் கோல்டன் நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட தலைக்கீழான ஃபோர்க்குகளையும், பின்பக்கத்தில் மோனோஷாக்கையும் பெற்றுவந்துள்ள இந்த அட்வென்ச்சர் பைக்கில் ப்ரேக்கிங் பணிக்கு முன் சக்கரத்தில் 276மிமீ-லும் பின் சக்கரத்தில் 220மிமீ-லும் டிஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய Honda CB200X அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.44 லட்சம்

இதனுடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்-ஐயும் பெற்றுள்ள புதிய CB200X இருக்கை அமைப்பை பிளவுப்பட்ட இருக்கைகள் & கைப்பிடிகளுடன் கொண்டுள்ளது. இதனால் நீண்ட தூர பயணத்தின்போதும் பின் இருக்கை பயணிக்கு எந்தவொரு சவுகரியமும் ஏற்படாது. ஓட்டுனர், தேவையான தகவல்களை பெற 5-நிலைகளில் ஒளியினை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக்கூடிய எல்சிடி திரை வழங்கப்பட்டுள்ளது.

புதிய Honda CB200X அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.44 லட்சம்

ஹேண்டில்பாரின் இரு முனைகளிலும் கை விரல் பாதுகாப்பான், டர்ன் இண்டிகேட்டர்களுடன் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்கள் X-வடிவில் வழங்கப்பட்டுள்ளன. 12 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்கை பெற்றுள்ள CB200X பைக்கின் மொத்த கெர்ப் எடை 147 கிலோ ஆகும்.

Most Read Articles

English summary
Honda CB200X Unveiled.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X