இந்தோனிஷியாவில் சிபிஆர் பைக்குகளை மெருக்கேற்றியுள்ள ஹோண்டா!! நமக்கெல்லாம் கனவாவே முடிஞ்சிருமோ...

ஹோண்டாவின் சிபிஆர்150ஆர் மற்றும் சிபிஆர்250ஆர்ஆர் பைக்குகளுக்கு நேர்த்தியான டிசைனில் எச்ஆர்சி (ஹோண்டா ரேசிங் கார்பிரேஷன்) பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரேசிங் பைக்குகளுக்கு உண்டான பெயிண்ட்டில் அசத்தலான தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த இரு ஹோண்டா பைக்குகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தோனிஷியாவில் சிபிஆர் பைக்குகளை மெருக்கேற்றியுள்ள ஹோண்டா!! நமக்கெல்லாம் கனவாவே முடிஞ்சிருமோ...

ஹோண்டா சிபிஆர்150ஆர் மற்றும் சிபிஆர்250ஆர்ஆர் மோட்டார்சைக்கிள்கள் ஏற்கனவே அவற்றின் உயர்தரத்திலான தோற்றம் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களினால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமானதாக உள்ளன.

இந்தோனிஷியாவில் சிபிஆர் பைக்குகளை மெருக்கேற்றியுள்ள ஹோண்டா!! நமக்கெல்லாம் கனவாவே முடிஞ்சிருமோ...

இருப்பினும் இவற்றின் தோற்றத்தை மெருக்கேற்றும் விதமாக எச்ஆர்சி பெயிண்ட்டில் இந்தோனிஷியாவில் ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹோண்டாவின் ரேசிங் பைக்குகளின் அடையாளமே அவற்றின் சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்கள் தான்.

இந்தோனிஷியாவில் சிபிஆர் பைக்குகளை மெருக்கேற்றியுள்ள ஹோண்டா!! நமக்கெல்லாம் கனவாவே முடிஞ்சிருமோ...

இதன்படி சிபிஆர்150ஆர் மற்றும் சிபிஆர்250ஆர்ஆர் பைக்குகள் இந்த பெயிண்ட்டில் இந்த மூன்று நிறங்களையும் ஏற்றுள்ளன. இந்த புதிய ஹோண்டா ரேசிங் கார்ப்பிரேஷன் பெயிண்ட்டை தவிர்த்து இந்த இரு பைக்குகளில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

இந்தோனிஷியாவில் சிபிஆர் பைக்குகளை மெருக்கேற்றியுள்ள ஹோண்டா!! நமக்கெல்லாம் கனவாவே முடிஞ்சிருமோ...

ஹோண்டா சிபிஆர்150ஆர் மற்றும் சிபிஆர்250ஆர்ஆர் பைக்குகளில் ஒரே விதமான டிசைனை கொண்ட இரட்டை எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி இண்டிகேட்டர்கள், அலாய் சக்கரங்கள், பருமனான தோற்றம் மற்றும் பிளவுப்பட்ட இருக்கைகள் தான் வழங்கப்படுகின்றன.

இந்தோனிஷியாவில் சிபிஆர் பைக்குகளை மெருக்கேற்றியுள்ள ஹோண்டா!! நமக்கெல்லாம் கனவாவே முடிஞ்சிருமோ...

இவற்றுடன் முழு டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் இந்த இரு பைக்குகள் பெறுகின்றன. சிபிஆர்250ஆர்ஆர் பைக்கில் பெரிய திரை உடன் மூன்று ரைடர் மோட்கள், ரைட்-பை-வயர் மற்றும் குயிக்‌ஷிஃப்டரை ஹோண்டா நிறுவனம் வழங்குகிறது.

இந்தோனிஷியாவில் சிபிஆர் பைக்குகளை மெருக்கேற்றியுள்ள ஹோண்டா!! நமக்கெல்லாம் கனவாவே முடிஞ்சிருமோ...

ஆனால் சஸ்பென்ஷனை பணியினை கவனிக்க இரண்டிலும் ஒரே யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனோஷாக் செட்அப் தான் பொருத்தப்படுகிறது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு சிபிஆர்150ஆர் பைக்கில் 149சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜினும் சிபிஆர்250ஆர்ஆர் பைக்கில் 249சிசி இரட்டை-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகின்றன.

இந்தோனிஷியாவில் சிபிஆர் பைக்குகளை மெருக்கேற்றியுள்ள ஹோண்டா!! நமக்கெல்லாம் கனவாவே முடிஞ்சிருமோ...

ட்ரான்ஸ்மிஷனுக்கு ஸ்லிப்பர்-அசிஸ்ட் க்ளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸை ஏற்கும் இந்த ஹோண்டா பைக்குகள் இந்தியாவிற்கு எப்போது வரும் என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது. இந்தோனிஷியாவில் சிபிஆர்150ஆர் எச்ஆர்சி பைக்கின் விலை 40,600,000 இந்தோனிஷன் ரூபியா (ரூ.2.10 லட்சம்) ஆகவும், சிபிஆர்250ஆர்ஆர் எச்ஆர்சி பைக்கின் விலை 77,300,000 IDR (ரூ.4.01 லட்சம்) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
The Honda CBR150R and CBR250RR Look Exquisite In The HRC Livery. Read In Tamil.
Story first published: Wednesday, February 17, 2021, 23:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X