ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...

ஹோண்டா நிறுவனம் தயாரிக்க உள்ள மின்சார பைக்கின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இப்பைக் எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...

ஹோண்டா நிறுவனம் விரைவில் மின்சார இருசக்கர வாகன சந்தையில் இணைய இருக்கின்றது. இதற்காக இந்நிறுவனம் சிபி125ஆர் அடிப்படையிலான மோட்டார்சைக்கிளை தயார் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஹோண்டாவின் மின்சார ஸ்கூட்டர் எப்படி இருக்கும் என்கிற புதிய படங்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன.

ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...

இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் இப்போது பார்க்க இருக்கின்றோம். தற்போது வெளியாகியிருப்பது மின்சார மோட்டார்சைக்கிளின் முன் மாதிரி வரைபடங்கள் ஆகும். இதனடிப்படையிலேயே ஹோண்டா நிறுவனம் மின்சார மோட்டார்சைக்கிளை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றது. எனவேதான், தற்போது வெளியாகியிருக்கும் படங்கள் வாகன ஆர்வலர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...

வெளியாகியிருக்கும் படங்கள் என்ன கூறுகின்றன?

இப்போது வெளியாகியிருக்கும் படங்களை வைத்து பார்க்கையில் புதிய மின்சார பைக் நவீன ஸ்டைலில் உருவாக இருப்பதைத் தெளிவாகக் காண்பிக்கின்றது. தொடர்ந்து, சிபி125ஆர் பைக்கின் ஸ்டைலை லேசாகப் பெற இருப்பதையும் உறுதி செய்கின்றது. ஆனால், இந்த உருவம் சிபி125ஆர் பைக்கினுடையதுதான் என்பதை மிக உறுதியாக கூற முடியவில்லை.

ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...

சிக்கலான எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே இப்போது வெளியாகியிருக்கும் படங்கள் இருக்கின்றன. அதேசமயம், பேட்டரி இருக்கும் இடத்திற்கு அதிக காற்றோட்டத்தை வழங்குகின்ற வகையில் ஏர் இன்டேக்கர் அமைப்பு, ஹோண்டாவின் பாரம்பரியமிக்க டிசைன் தாத்பரியங்கள் சில அப்படியே பயன்படுத்தப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...

இதுதவிர வேறெந்த தகவலும் புதிய ஹோண்டா மின்சார மோட்டார்சைக்கிள் பற்றி உறுதியாக தெரியவில்லை. விரைவில் இப்பைக் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன. அப்போது, மின்சார பைக்கில் இடம்பெற இருக்கும் பேட்டரி மற்றும் அது வெளிப்படுத்தக்கூடிய ரேஞ்ஜ் விகிதம் உள்ளிட்டவை பற்றிய தகவல்கள் தெரிய வரும்.

ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...

ஹோண்டா நிறுவனத்தைப் போலவே கவாஸாகி நிறுவனமும் விரைவில் மின்சார மோட்டார்சைக்கிளை வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த நிஞ்சா 300 மாடல் மோட்டார்சைக்கிளைத் தழுவி மின்சார பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகின்றது.

குறிப்பு: முதல் மூன்று படங்களைத் தவிர பிற அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
Honda Electric Bike Patent Drawings Leaked In Online. Read In Tamil.
Story first published: Saturday, January 23, 2021, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X