Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காஸ்ட்லியான பைக்காக உருமாறியது ஹோண்டாவின் முதல் ரெட்ரோ கிளாசிக் பைக்... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரியுமா?
ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் விலை உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வளவு விலையுயர்வை இப்பைக் பெற்றிருக்கின்றது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

ஹோண்டா நிறுவனத்தின் புதுமுக இருசக்கர வாகனமாக ஹைனெஸ் சிபி350 இருக்கின்றது. இப்பைக்கின் விலையையே ஹோண்டா உயர்த்த இருப்பதாக அண்மையில் தகவல் வெளியிட்டது. இந்த நிலையில், பைக்கின் விலை கடந்த 4ம் தேதி அன்றே உயர்த்தப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து எச்டி ஆட்டோ தளம் வெளியிட்டுள்ள செய்தியில், ரூ. 2,500 வரை ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் உயர்ந்திருப்பதாக கூறியிருக்கின்றது. ஹோண்டா இருசக்கர வாகன விற்பனையாளர் ஒருவர் கூறியதன் அடிப்படையில் இத்தகை வெளியிட்டிருப்பதாகவும் அது தெரிவித்திருக்கின்றது.

ஆகையால், ஹோண்டா சிபி350 பைக்கின் விலை ரூ. 2500 வரை உயர்ந்திருப்பது தெரியவந்திருக்கின்றது. இப்பைக் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதில், உயர்நிலை தேர்வில் கிடைக்கும் டிஎல்எக்ஸ் ப்ரோ வேரியண்டின் விலை ரூ. 2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று ஆரம்ப நிலை வேரியண்டான டிஎல்எக்ஸ் தேர்வின் விலை ரூ. 1,500 வரை உயர்த்தப்பட்டிருப்பது டீலர் கூறியதன் அடிப்படையில் தெரியவந்திருக்கின்றது. உற்பத்தி செலவு உயர்ந்ததைக் காரணம் காட்டி வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலையுயர்வைச் செய்து வருகின்றது.

இந்த நிலையிலேயே இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டாவும் அண்மையில் இதுகுறித்த தகவலை வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஹோண்டாவின் புதுமுக பைக் சிபி350யின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கின்றது என்கிற தகவல் வெளியாகியிருக்கின்றது.

இப்பைக்கை கடந்த வருடம் அக்டோபர் மாத்திலேயே ஹோண்டா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தது. அப்போது இதன் ஆரம்ப விலை ரூ. 1.85 லட்சமாக இருந்தது. ஆனால், தற்போது இதன் விலை அதிகரிக்கச் செய்யப்பட்டுள்ளது. இதனால் சற்று காஸ்ட்லியான பைக்காக இது உருமாறியிருக்கின்றது. மேற்கூறிய விலை வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் முதல் ரெட்ரோ கிளாசிக் ரகத்திலான பைக்கே இந்த ஹைனெஸ் சிபி350. இப்பைக்கை ராயல் என்ஃபீல்டின் இடத்தைப் பிடிக்கும் நோக்கில் ஹோண்டா இந்தியாவில் களமிறக்கியிருக்கின்றது.

இதில், 350 சிசி திறன் கொண்ட 4 ஸ்ட்ரோக், ஓஎச்சி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை பிஜிஎம்-எஃப்ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 21 பிஎஸ் பவரையும், 30 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடியது.