இப்போதான் ஜப்பானிலேயே அறிமுகமாகுதா இந்த ஹோண்டா பைக்?! ராயல்என்பீல்டு மீட்டியோருக்கு போட்டியாவந்திச்சே அதுதாங்க

ஹோண்டா நிறுவனம் அதன் ஜப்பானிய இருசக்கர வாகனங்களின் வரிசையை இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைனெஸ் சிபி350 பைக்கின் மூலமாக அப்டேட் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்போதான் ஜப்பானிலேயே அறிமுகமாகுதா இந்த ஹோண்டா பைக்?! ராயல்என்பீல்டு மீட்டியோருக்கு போட்டியாவந்திச்சே அதுதாங்க

இந்தியாவில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியாக கொண்டுவரப்பட்ட இந்த ஹோண்டா பைக் ராயல் என்பீல்டு பைக்குகளை போல் ரெட்ரோ தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இந்த 350சிசி பைக் ஹோண்டா ஜிபி350 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப்போதான் ஜப்பானிலேயே அறிமுகமாகுதா இந்த ஹோண்டா பைக்?! ராயல்என்பீல்டு மீட்டியோருக்கு போட்டியாவந்திச்சே அதுதாங்க

அங்கு இதன் விலை 268,000 யென்-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.1.89 லட்சமாகும். இந்தியாவில் ஹோண்டா சிபி350 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1,86,500 ஆக உள்ளது. இது இதன் டிஎல்எக்ஸ் வேரியண்ட்டின் விலையாகும்.

இப்போதான் ஜப்பானிலேயே அறிமுகமாகுதா இந்த ஹோண்டா பைக்?! ராயல்என்பீல்டு மீட்டியோருக்கு போட்டியாவந்திச்சே அதுதாங்க

மற்றொரு வேரியண்ட்டான டிஎல்எக்ஸ் ப்ரோவின் விலை ரூ.1,92,500ஆக நம் நாட்டில் உள்ளது. அதுவே ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,75,825 ஆக உள்ளது. இது ஹோண்டா ஹைனெஸ்350 பைக்கை காட்டிலும் ரூ.10,000 அளவில் குறைவு.

இப்போதான் ஜப்பானிலேயே அறிமுகமாகுதா இந்த ஹோண்டா பைக்?! ராயல்என்பீல்டு மீட்டியோருக்கு போட்டியாவந்திச்சே அதுதாங்க

இந்திய சந்தையில் ஹைனெஸ் சிபி350 பைக்கின் விலை சமீபத்தில்தான் அதிகரிக்கப்பட்டது இங்கு நினைவுக்கூரத்தக்கது. முழு எல்இடி தரத்தில் ஹெட்லைட் உடன் விற்பனை செய்யப்படும் இந்த பைக்கில் நாவிகேஷன் செயல்பாட்டுடன் ப்ளூடூத்தை ஏற்கக்கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுகிறது.

இப்போதான் ஜப்பானிலேயே அறிமுகமாகுதா இந்த ஹோண்டா பைக்?! ராயல்என்பீல்டு மீட்டியோருக்கு போட்டியாவந்திச்சே அதுதாங்க

ப்ளூடூத் இணைப்பு மொபைல்போனுக்கு வரும் அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் கண்ட்ரோல் செய்யவும் பயன்படுகிறது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த பைக்கில் 348சிசி, ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

இப்போதான் ஜப்பானிலேயே அறிமுகமாகுதா இந்த ஹோண்டா பைக்?! ராயல்என்பீல்டு மீட்டியோருக்கு போட்டியாவந்திச்சே அதுதாங்க

அதிகப்பட்சமாக இந்த என்ஜின் 21 பிஎச்பி மற்றும் 30 என்எம் டார்க் திறனை பைக்கிற்கு வழங்கும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்கு ஹோண்டாவின் தேர்ந்தெடுக்கக்கூடிய டார்க் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
Honda H'ness CB350 launched in Japan.
Story first published: Wednesday, January 20, 2021, 0:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X