ஹோண்டா கோல்டு விங் பைக்கிற்கு புதியதாக இப்படிப்பட்ட நிறத்தேர்வுகளா!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

ஹோண்டாவின் சூப்பர் லக்சரி, தொலைத்தூர பயணத்திற்கான மோட்டார்சைக்கிளான கோல்டு விங்-கிற்கு 2022ஆம் ஆண்டிற்காக புதிய நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஹோண்டா கோல்டு விங் பைக்கிற்கு புதியதாக இப்படிப்பட்ட நிறத்தேர்வுகளா!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

ஜப்பானிய இருசக்கர வாகன பிராண்டான ஹோண்டா 2022ஆம் ஆண்டிற்காக அதன் ஜிஎல்1800 கோல்டு விங் மற்றும் ஜிஎல்1800 கோல்டு விங் டூர் என்ற இரு கோல்டு விங் மாடல்களையும் அப்டேட் செய்ய உள்ளது. இதில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் விற்பனை செய்யப்படும் கோல்டு விங் டூர் பைக்கிற்கு புதியதாக கன்மெட்டல் கருப்பு மெட்டாலிக் என்ற நிறத்தேர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா கோல்டு விங் பைக்கிற்கு புதியதாக இப்படிப்பட்ட நிறத்தேர்வுகளா!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

இதில் என்ஜின் உள்பட பைக் மொத்தம் அடர் கருப்பு நிறத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த கருப்பு நிற பெயிண்ட் தேர்வு நிச்சயமாக ஹோண்டா கோல்டு விங் டூர் போன்ற லக்சரி பைக்கின் தோற்றத்தை மேலும் மெருக்கேற்றும். ஜிஎல்1800 கோல்டு விங் டூர் பைக்கின் டிசிடி வேரியண்ட்டிற்கு பளபளப்பான நீலம் மெட்டாலிக் மற்றும் முத்தின் கண்ணைக்கூசக்கூடிய வெள்ளை என்ற இரு நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஹோண்டா கோல்டு விங் பைக்கிற்கு புதியதாக இப்படிப்பட்ட நிறத்தேர்வுகளா!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

அதுவே ஜிஎல்1800 கோல்டு விங் பைக்கின் டிசிடி வேரியண்ட்டிற்கு மேட் ஜீன்ஸ் நீலம் மெட்டாலிக் நிறத்தேர்வு புதியதாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பெயிண்ட் தேர்வுகள் அனைத்தும் இந்த தொலைத்தூர மோட்டார்சைக்கிளின் பண்பிற்கு இணக்கமானவைகளாக வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இவற்றை வழங்குவதன் மூலம் உலகளவில் பிரபலமான கோல்டு விங் மாடலுக்கு ஹோண்டா அப்டேட்டை வழங்கவுள்ளது.

ஹோண்டா கோல்டு விங் பைக்கிற்கு புதியதாக இப்படிப்பட்ட நிறத்தேர்வுகளா!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

ஹோண்டா கோல்டு விங் அதன் அசாத்தியமான சவுகரியம், அட்டகாசமான செயல்திறன் மற்றும் அதிநவீன தொழிற்நுட்பங்களுக்கு பெயர் பெற்றதாக விளங்குகிறது. இருப்பினும் இவற்றையும் தாண்டி சில வாடிக்கையாளர்கள் பைக்கின் பெயிண்ட்டை கவனிக்க மறப்பதில்லை. அத்தகையவர்களுக்காகவே அடுத்த ஆண்டில் கோல்டு விங் பைக்கிற்கு சர்வதேச சந்தைகளில் புதிய நிறத்தேர்வுகளை வழங்க இந்த ஜப்பானிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹோண்டா கோல்டு விங் பைக்கிற்கு புதியதாக இப்படிப்பட்ட நிறத்தேர்வுகளா!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

உலகளவிலான வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹோண்டா தயாரிப்பாக வலிமையாக நிலைநிறுத்தப்பட்டுள்ள கோல்டு விங் மாடலின் ஆயுட்காலத்தை சற்று அதிகரிக்க இந்த புதிய நிறத்தேர்வுகள் நிச்சயம் பேருதவியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் கோல்டு விங் விற்பனையில் உள்ளதால், இந்த புதிய நிறத்தேர்வுகள் அடுத்த ஆண்டில் நம் நாட்டு சந்தைக்கும் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது.

ஹோண்டா கோல்டு விங் பைக்கிற்கு புதியதாக இப்படிப்பட்ட நிறத்தேர்வுகளா!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

ஒரு வாகனத்திற்கு அப்டேட் வழங்கப்படுகிறது என்றாலே, அதன் விலை உயர்த்தப்பட உள்ளது என்பதும் அர்த்தமாகும். ஆதலால் இந்த புதிய பெயிண்ட் அப்டேட்களுடன் அறிமுகப்படுத்தப்படும் 2022 கோல்டு விங் பைக்குகளின் விலைகளும் உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது. தற்சமயம் இந்த ஹோண்டா லக்சரி தொலைத்தூர-பயண மோட்டார்சைக்கிளின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.37.75 லட்சமாக உள்ளது.

ஹோண்டா கோல்டு விங் பைக்கிற்கு புதியதாக இப்படிப்பட்ட நிறத்தேர்வுகளா!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

இந்தியாவிலும் மேனுவல் & ஆட்டோமேட்டிக் தேர்வில் கோல்டு விங் மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.37.75 லட்சம் என்பது மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடனான கோல்டு விங்கின் விலையாகும். இரட்டை க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் உடன் ஹோண்டா கோல்டு விங் மோட்டார்சைக்கிளின் விலை கிட்டத்தட்ட ரூ.40 லட்சத்திற்கு அருகில் உள்ளது.

ஹோண்டா கோல்டு விங் பைக்கிற்கு புதியதாக இப்படிப்பட்ட நிறத்தேர்வுகளா!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

சிறிய இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் கோல்டு விங் மோட்டார்சைக்கிளை ஹோண்டா நிறுவனம் கடந்த ஜூன் மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. அப்போது இந்த பைக்கிற்கான அறிமுக விலையாக ரூ.37.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த லக்சரி ஹோண்டா பைக்கை முன்பதிவு செய்தவர்களுக்கு பைக் டெலிவிரி கொடுக்கும் பணிகள் கடந்த ஜூலை மாத இறுதியில் துவங்கப்பட்டன.

ஹோண்டா கோல்டு விங் பைக்கிற்கு புதியதாக இப்படிப்பட்ட நிறத்தேர்வுகளா!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் இந்த பைக்கை அதன் பிக்விங் ஷோரூம்களின் மூலமாக விற்பனை செய்து வருகிறது. மிகவும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே செயல்பட்டு வருகின்ற பிக்விங் ஷோரூம்களில் இத்தகைய ப்ரீமியம் தர பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு விலையில் யாராவது மோட்டார்சைக்கிளை வாங்குவார்களா? என நீங்கள் கேட்கலாம்.

ஹோண்டா கோல்டு விங் பைக்கிற்கு புதியதாக இப்படிப்பட்ட நிறத்தேர்வுகளா!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

ஆனால் கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போது, மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோல்டு விங் பைக்குகளுக்கு மட்டுமே ஹோண்டா முன்பதிவுகளை துவங்கியது. இந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட முன்பதிவுகள் அனைத்தும் அடுத்த 24 மணிநேரத்திற்குள்ளாக நிறைவு பெற்றன. அதாவது ஒரு நாளுக்குள்ளாகவே முதற்கட்ட கோல்டு விங் பைக்குகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

ஹோண்டா கோல்டு விங் பைக்கிற்கு புதியதாக இப்படிப்பட்ட நிறத்தேர்வுகளா!! அடுத்த ஆண்டில் அறிமுகம்!

கோல்டு விங் மோட்டார்சைக்கிளில் அளவில் பெரிய 1,833சிசி ஃப்ளாட்-சிக்ஸ், லிக்யுடு-கூல்டு பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 124.7 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ஆடியோ சிஸ்டம், 7-இன்ச் டிஎஃப்டி வண்ண திரை, நாவிகேஷன் வசதி, ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ தொழிற்நுட்பம், பொத்தான் வாயிலாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்க்ரீன் உள்ளிட்டவற்றையும் ஹோண்டா வழங்குகிறது.

Most Read Articles

English summary
Honda Gold Wing gets new colours for 2022
Story first published: Tuesday, November 23, 2021, 22:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X