இந்த மாதிரியான பைக்குகள் ஏன் இந்தியாவிற்கு வருவதில்லை?! ஹோண்டாவின் 2021 சிபி150ஆர்...

முன்னணி ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா அப்கிரேட் செய்யப்பட்ட 2021 சிபி150ஆர் பைக்கை முதலாவதாக இந்தோனிஷிய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மாதிரியான பைக்குகள் ஏன் இந்தியாவிற்கு வருவதில்லை?! ஹோண்டாவின் 2021 சிபி150ஆர்...

ஹோண்டாவின் சிபி150ஆர் மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் விற்பனையில் இல்லை. இத்தகைய ப்ரீமியம் தரத்திலான பைக் இந்தோனிஷியா போன்ற நாட்டிற்கும் தான் சரியாக இருக்கும் என்று இன்னமும் ஹோண்டா நம்பி கொண்டிருக்கிறது.

இந்த மாதிரியான பைக்குகள் ஏன் இந்தியாவிற்கு வருவதில்லை?! ஹோண்டாவின் 2021 சிபி150ஆர்...

இந்தோனிஷிய சந்தையில் 2021 சிபி150ஆர் பைக், ஸ்ட்ரீட் ஃபையர் என்ற ஸ்பெஷல் எடிசனிலும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பைக்கில் விளக்குகள் அனைத்தும் எல்இடியாக பொருத்தப்பட்டுள்ளன.

இந்த மாதிரியான பைக்குகள் ஏன் இந்தியாவிற்கு வருவதில்லை?! ஹோண்டாவின் 2021 சிபி150ஆர்...

இதன்படி ஹெட்லேம்ப், டெயில்லேம்ப் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளிட்டவை எல்இடி தரத்தில் உள்ளன. இவற்றுடன் சற்று உயரமாக பொருத்தப்பட்டுள்ள ஹேண்டில்பார் நிச்சயம் ஓட்டுனருக்கு கூடுதல் சவுகரியத்தை வழங்கும்.

இந்த மாதிரியான பைக்குகள் ஏன் இந்தியாவிற்கு வருவதில்லை?! ஹோண்டாவின் 2021 சிபி150ஆர்...

இவை மட்டுமின்றி பைக்கின் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலையும் ஹோண்டா நிறுவனம் அப்கிரேட் செய்துள்ளது. இதன் காரணமாக கியர் பொசிஷன், பைக்கின் வேகம், ஓடோ மீட்டர், எரிபொருள் அளவு உள்ளிட்ட விபரங்கள் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலில் காட்டப்படுவது சற்று வேறுப்பட்டுள்ளது.

இந்த மாதிரியான பைக்குகள் ஏன் இந்தியாவிற்கு வருவதில்லை?! ஹோண்டாவின் 2021 சிபி150ஆர்...

12 லிட்டர் கொள்ளளவுடன் உள்ள பெட்ரோல் டேங்கின் வடிவம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. என்ஜின் பகுதிக்கு கீழே பாதுகாப்பானையும் 2021 ஹோண்டா சிபி150ஆர் ஸ்ட்ரீட்ஃபையர் எடிசனில் பார்க்க முடிகிறது.

இந்த மாதிரியான பைக்குகள் ஏன் இந்தியாவிற்கு வருவதில்லை?! ஹோண்டாவின் 2021 சிபி150ஆர்...

ஆனால் அதே 149சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் தொடரப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 16.3 பிஎஸ் மற்றும் 13.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இந்த மாதிரியான பைக்குகள் ஏன் இந்தியாவிற்கு வருவதில்லை?! ஹோண்டாவின் 2021 சிபி150ஆர்...

சஸ்பென்ஷனுக்கு 2021 ஹோண்டா சிபி150ஆர் பைக்கின் முன்பக்கத்தில் புதிய தலைக்கீழான 37மிமீ ஷோவா ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ப்ரோ-லிங்க் மோனோஷாக்கும் உள்ளன. ப்ரேக்கிங் பணிக்கு இருசக்கரங்களிலும் டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த மாதிரியான பைக்குகள் ஏன் இந்தியாவிற்கு வருவதில்லை?! ஹோண்டாவின் 2021 சிபி150ஆர்...

ஸ்பெஷல் ஸ்ட்ரீட்ஃபையர் எடிசனுக்கு சிவப்பு, ராப்டர் கருப்பு மற்றும் க்ரே என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளும், வழக்கமான மாடலுக்கு ஸ்டிங்கர் சிவப்பு மற்றும் மாச்சோ கருப்பு என்ற இரு நிறங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரியான பைக்குகள் ஏன் இந்தியாவிற்கு வருவதில்லை?! ஹோண்டாவின் 2021 சிபி150ஆர்...

2021 ஹோண்டா சிபி150ஆர் பைக்கின் விலை இந்தோனிஷியாவில் 2,97,00,000 IDR ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1.51 லட்சமாகும். அதுவே ஸ்ட்ரீட்ஃபையர் ஸ்பெஷல் எடிசனின் விலை ரூ.1.56 லட்சம் என்ற அளவில் கொண்டுவரப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
2021 Honda CB150R Unveiled – Top Changes, Specs (2021 Honda CB150R Streetfire).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X