Just In
- 1 hr ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவும் தொடங்கியாச்சு... முழு விபரம்!
ஹோண்டா நிறுவனத்தின் ட்வின் இருசக்கர வாகனங்களான ஆப்பிரிக்கா ட்வின் அட்வென்சர் ஸ்போர்ட் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹோண்டா நிறுவனம், தனது 2021 ஆப்பிரிக்கா ட்வின் அட்வென்சர் ஸ்போர்ட் பைக்கை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பைக்கிற்கு ஆரம்ப விலையாக ரூ. 15.96 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த பைக்கின் அறிமுகத்தைத் தொடர்ந்து புதிய பைக்கிற்கான புக்கிங்கையும் ஹோண்டா ஆரம்பித்துள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் (டீலர்கள்) வாயிலாக இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் புக்கிங் செய்தோர்களுக்கு 2021 ஆப்பிரிக்கா ட்வின் அட்வென்சர் ஸ்போர்ட் பைக்குகள் டெலிவரி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாதத்தின் இறுதி அல்லது அடுத்த வரும் மாதத்திற்கு டெலிவரி பணி தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டா நிறுவனம் இந்த பிரீமியம் பைக்கை ஸ்பெஷலாக தனது பிக்விங் எனும் ஷோரூம்கள் வாயிலாக மாட்டுமே விற்பனைச் செய்து வருகின்றது. ஆகையால், இதனை நம்முடைய ஏரியாக்களில் இருக்கும் வழக்கமான ஷோரூம்களில் காண்பது கடினமாக இருக்கின்றது.

பெரியளவில் இப்பைக்கில் மாற்றம் செய்யப்படவில்லை. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் 2021 பதிப்பு என்பதைத் தவிர வெறு எந்த சிறப்பும் இப்பைக்கில் செய்யப்படவில்லை. அதேசமயம், புதிய நிற தேர்வும் இப்பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய நிற தேர்வு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் கொண்டு இரு வேரியண்டுகளில் கிடைக்க இருக்கின்றது.

இதில், மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் டார்க்னஸ் பிளாக் மெட்டாலிக் நிறத்திலும், டிசிடி ஆட்டோமேட்டிக் வேரியண்ட் பியர்ல் கிளாரே வெள்ளி மூவண்ணத்திலும் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், சிறப்பு கருவிகளாக க்ரூஸ் கன்ட்ரோல், சூடான உணர்வை வழங்கக்கூடிய ஹேண்ட் க்ரிப்புகள், 5 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ள கூடிய விண்ட்ஸ்கிரீன் மற்றும் அட்ஜெஸ்டபிள் இருக்கைகள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றிருக்கின்றன.

இதுதவிர இப்பைக்கில் ட்யூவல் எல்இடி ஹெட்லேம்ப், பகல் நேரத்தில் எரிய கூடிய மின் விளக்குகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் பல்வேறு தகவல்களை வழங்கக்கூடிய 6.5 இன்ச் அளவுள்ள டிஎஃப்டி தொடுதிரை டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதியைக் கொண்டிருக்கின்றது.

இதன் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளின் எண்ணற்ற தகவல்களை செல்போன் திரையிலும், பைக்கில் வழங்கப்பட்டிருக்கும் திரையிலும் பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக, பைக் பற்றிய தகவலை செல்போனிலும், செல்போனுக்கு வரும் அழைப்பு, குறுஞ்செய்தி ஆகியவற்றை பைக்கின் திரையிலும் பெற முடியும்.

இவற்றுடன், வீலி கன்ட்ரோல், சிக் ஆக்சிஸ் ஐஎம்யூ சிஸ்டம், கார்னரிங் ஏபிஎஸ், ரியர் லிஃப்ட் கன்ட்ரோல் மற்றும் கார்னரிங் டிடெக்சன் உள்ளிட்ட சிறப்பு நவீன கருவிகளும் இப்பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற அம்சங்களினாலேயே இப்பைக் பிரீமியம் பைக்காகும், ஹோண்டா கோல்ட் விங் ஷோரூம்களில் மட்டுமே காட்சியளிக்கின்றது.

இப்பைக்கில், 1084ர சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 98 பிஎச்பி மற்றும் 103 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது, இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ், டுகாட்டி மல்டிஸ்ட்ரடா 950 எஸ் மற்றும் டிரையம்ப் டைகர் 900 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.