2021 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!! ஆரம்ப விலை ரூ.37.20 லட்சம்

ஹோண்டா டூவீலர்ஸ் இந்தியா நிறுவனம் அதன் 2021 கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஹோண்டா பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

2021 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!! ஆரம்ப விலை ரூ.37.20 லட்சம்

2021 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் ட்யுல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் (டிசிடி) மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் என இரு விதமான வேரியண்ட்களில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

2021 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!! ஆரம்ப விலை ரூ.37.20 லட்சம்

இதில் டிசிடி வேரியண்ட்டில் மட்டும் ஓட்டுனருக்கான காற்றுப்பை வழங்கப்படும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. மேலும் புதிய கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சிபியு எனப்படும் முழுவதுமாக தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

2021 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!! ஆரம்ப விலை ரூ.37.20 லட்சம்

இதன் மூலம் இந்தியாவில் தொழிற்நுட்ப வசதிகள் மிகுந்த டூரிங் மோட்டார்சைக்கிளாக ஹோண்டா கோல்டு விங் டூர் விளங்கவுள்ளது. இந்த 2021 ஹோண்டா பைக்கின் மேனுவல் வேரியண்ட்டின் விலை ரூ.37,20,342 ஆகவும், டிசிடி+காற்றுப்பை வேரியண்ட்டின் விலை ரூ.39,16,055 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2021 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!! ஆரம்ப விலை ரூ.37.20 லட்சம்

இருப்பினும் இவை இரண்டிலும் ஒரே மாதிரியான 1,833சிசி, லிக்யுடு-கூல்டு 4-ஸ்ட்ரோக், 24-வால்வு எஸ்.ஒ.எச்.சி தட்டையான-6 என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-இல் 93 கிலோவாட்ஸ் பவரையும், 4,500 ஆர்பிஎம்-இல் 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

2021 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!! ஆரம்ப விலை ரூ.37.20 லட்சம்

இந்த 2021 ஹோண்டா பைக்கில் டூர், ஸ்போர்ட், எக்கனாமி & மழை என்ற நான்கு ரைடிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. த்ரோட்டல் பை வயர் மூலமாக இந்த ஒவ்வொரு ரைடிங் மோட்களிலும் ஒவ்வொரு விதமான பண்பினை மோட்டார்சைக்கிள் கொண்டிருக்கும் என ஹோண்டா கூறுகிறது.

2021 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!! ஆரம்ப விலை ரூ.37.20 லட்சம்

இதனுடன் இரட்டை இணைப்பு ப்ரேக் சிஸ்டம் (டி-சிபிஎஸ்), ஹோண்டா தேர்ந்தெடுக்கக்கூடிய டார்க் கண்ட்ரோல், ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டர், ஐடியலிங் ஸ்டாப் (டிசிடி வேரியண்ட்டில் மட்டும்), ஹில் ஸ்டார்ட் உதவி உள்ளிட்டவற்றையும் ஹோண்டா இந்த சூப்பர்பைக்கில் வழங்கியுள்ளது.

2021 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!! ஆரம்ப விலை ரூ.37.20 லட்சம்

இத்தகைய தொழிற்நுட்பங்களினால் எந்தவொரு பரப்பின் மீது இருந்தும் இந்த மோட்டார்சைக்கிளை எளிதாக எடுத்து செல்லலாம். ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்க 7 இன்ச்சில் முழு-வண்ண டிஎஃப்டி லிக்யுடு க்ரிஸ்டல் திரை வழங்கப்பட்டுள்ளது.

2021 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!! ஆரம்ப விலை ரூ.37.20 லட்சம்

இந்த கோல்டு விங் டூர் பைக்கானது ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி உடன் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனுடன் ப்ளூடூத் இணைப்பு மற்றும் இரு யுஎஸ்பி டைப்-சி துளைகளையும் ஹோண்டா வழங்கியுள்ளது.

2021 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!! ஆரம்ப விலை ரூ.37.20 லட்சம்

1975ல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கில் 2021ஆம் ஆண்டிற்கான வெர்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் பெரிமிதம் கொள்கிறோம் என ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார். அறிமுகத்துடன் 2021 ஹோண்டா கோல்டு விங் டூர் பைக்கிற்கான முன்பதிவுகளும் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Redefining the gold standard of luxury touring, Honda Motorcycle & Scooter India Pvt. Ltd. today launched the 2021 Gold Wing Tour in India. The new model will make its way to the Indian market through CBU* route from Japan
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X