H’ness CB350 மாடலில் புதிய சிறப்பு பதிப்பு... நாளை அறிமுகம்! Royal Enfield-க்கு கூடுதல் நெருக்கடி!

ஹோண்டா (Honda Motorcycle and Scooter India) நிறுவனம் அதன் பிரபல இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றான ஹைனெஸ் சிபி350 (Highness CB350) மாடலில் சிறப்பு பதிப்பு ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

H’ness CB350 மாடலில் புதிய சிறப்பு பதிப்பு! நாளை அறிமுகம் செய்கிறது Honda... Royal Enfield-க்கு கூடுதல் நெருக்கடி!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle and Scooter India) நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்று ஹைனெஸ் சிபி350 (Highness CB350). ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் ரெட்ரோ கிளாசிக் ரக மோட்டார்சைக்கிள்களான கிளாசிக் 350 (Classic 350)-க்கு போட்டியாக இப்பைக் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.

H’ness CB350 மாடலில் புதிய சிறப்பு பதிப்பு! நாளை அறிமுகம் செய்கிறது Honda... Royal Enfield-க்கு கூடுதல் நெருக்கடி!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவுற்றிருக்கின்றது. இதை முன்னிட்டே ஹோண்டா நிறுவனம் ஹைனெஸ் சிபி350 இல் ஆண்டுவிழா பதிப்பு எனும் சிறப்பு பதிப்பை உருவாக்கியிருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பை நாளைய (நவம்பர் 4) தினம் இந்தியாவில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

H’ness CB350 மாடலில் புதிய சிறப்பு பதிப்பு! நாளை அறிமுகம் செய்கிறது Honda... Royal Enfield-க்கு கூடுதல் நெருக்கடி!

இந்த பைக்கில் என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் எல்லாம் இடம் பெற இருக்கின்றன என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. நாளையே தினமே இது (பைக்)குறித்த அனைத்து தகவல்களும் வெளியிடப்பட இருக்கின்றன. அதேநேரத்தில், இது ஓர் சிறப்பு பதிப்பாக இந்திய சந்தையை களம் காண இருப்பதால் மிகவும் தனித்துவமான அலங்கரிப்பில் எதிர்பார்க்கப்படுகின்றது.

H’ness CB350 மாடலில் புதிய சிறப்பு பதிப்பு! நாளை அறிமுகம் செய்கிறது Honda... Royal Enfield-க்கு கூடுதல் நெருக்கடி!

அதாவது, வழக்கமான ஹைனெஸ் சிபி350-யைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ஆண்டுவிழா பதிப்பு ஹைனெஸ் சிபி350 பைக் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரத்யேக நிறம், அணிகலன்கள் மற்றும் கிராஃபிக்குகள் ஆகியவை இதில் இடம் பெற இருக்கின்றன. எஞ்ஜினை பொருத்த வரை இந்த சிறப்பு பதிப்பு எந்த மாற்றமும் இன்றியே சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

H’ness CB350 மாடலில் புதிய சிறப்பு பதிப்பு! நாளை அறிமுகம் செய்கிறது Honda... Royal Enfield-க்கு கூடுதல் நெருக்கடி!

தற்போது விற்பனையில் இருக்கும் வழக்கமான மாடல் ஹைனெஸ் சிபி350 பைக்கில் 348.3 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, ப்யூவல் இன்ஜெக்டட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 20.7 எச்பி பவர் மற்றும் 30 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸில் இணைந்து இயங்குகின்றது. நாளை நடைபெற இருக்கும் இந்தியா பைக் வாரம் (India Bike Week) 2021-லேயே இப்பைக் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

H’ness CB350 மாடலில் புதிய சிறப்பு பதிப்பு! நாளை அறிமுகம் செய்கிறது Honda... Royal Enfield-க்கு கூடுதல் நெருக்கடி!

சிறப்பு பதிப்பு ஹைனெஸ் சிபி350 பைக்குடன் சேர்த்து சிபி300ஆர் (CB300R BS6) பைக்கையும் வெளியீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய சந்தைக்கு இப்பைக் மீண்டும் விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு தர கட்டுப்பாடு காரணமாக இந்த பைக் இந்திய சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

H’ness CB350 மாடலில் புதிய சிறப்பு பதிப்பு! நாளை அறிமுகம் செய்கிறது Honda... Royal Enfield-க்கு கூடுதல் நெருக்கடி!

இதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து இப்பைக் மீண்டும் இந்தியா திரும்பி வர இருக்கின்றது. இந்த பைக்கை ஹோண்டா நிறுவனம் முதன் முதலாக 2019 பிப்ரவரி மாதமே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ. 2.41 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைச் செய்யப்பட்டது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். சிகேடி வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதால் இந்த உச்சபட்ச விலையில் சிபி300ஆர் பைக் இந்தியாவில் விற்பனைச் செய்யப்பட்டது.

H’ness CB350 மாடலில் புதிய சிறப்பு பதிப்பு! நாளை அறிமுகம் செய்கிறது Honda... Royal Enfield-க்கு கூடுதல் நெருக்கடி!

இந்த நிலையிலேயே இப்பைக் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டது. தற்போது மீண்டும் இந்த நியோ-ரெட்ரோ மோட்டார்சைக்கிளை புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்துடன் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நாளை நடைபெற இருக்கும் 'இந்தியா பைக் வாரத்தில்' அப்பைக் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

H’ness CB350 மாடலில் புதிய சிறப்பு பதிப்பு! நாளை அறிமுகம் செய்கிறது Honda... Royal Enfield-க்கு கூடுதல் நெருக்கடி!

ஹோண்டா சிபி300ஆர் பைக்கின் பிஎஸ்4 பதிப்பில் 286 சிசி திறனை வெளியேற்றக் கூடிய சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 31 எச்பி மற்றும் 27.5 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. பிஎஸ்6 பதிப்பில் வர இருக்கும் சிபி300ஆர் பைக்கில் என்ன மாதிரியான திறனை வெளிப்படுத்தக் கூடிய எஞ்ஜின் பயன்படுத்தப்பட இருக்கின்றது என்பது தெரியவில்லை.

H’ness CB350 மாடலில் புதிய சிறப்பு பதிப்பு! நாளை அறிமுகம் செய்கிறது Honda... Royal Enfield-க்கு கூடுதல் நெருக்கடி!

நாளைய தினம் இந்த எதிர்பார்ப்பிற்கு பதில்கள் தெரிய வரவிருக்கின்றன. புதிய பிஎஸ்6 எஞ்ஜின் அதிக மாசுக்கட்டுப்பாடு மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரே நேரத்தில் ஹோண்டாவின் இரு பிரத்யேக தயாரிப்புகள் நாளை இந்திய இருசக்கர வாகன சந்தையை களம் காண இருப்பது இந்திய பைக் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Honda launching hness cb350 anniversary edition and cb300r bs6 tomorrow in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X