ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இப்போது வாங்குவதுதான் சிறந்தது!! புதிய பணம் தள்ளுபடி சலுகை அறிவிப்பு

இந்திய சந்தையில் பிரபலமான ஸ்கூட்டர் என்றால் அதில் நிச்சயம் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் பெயரை கூறாமல் இருக்க முடியாது. நம் நாட்டில் ஸ்டாண்டர்ட் & டீலக்ஸ் என்ற இரு விதமான வேரியண்ட்களில் இந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இப்போது வாங்குவதுதான் சிறந்தது!! புதிய பணம் தள்ளுபடி சலுகை அறிவிப்பு

இவற்றின் விலைகள் ரூ.67,843ல் இருந்து ஆரம்பிக்கின்றன. அதேநேரத்தில் 20வது ஆண்டு நிறைவு எடிசனிலும் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்பெஷல் எடிசனின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.69,343 ஆக உள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இப்போது வாங்குவதுதான் சிறந்தது!! புதிய பணம் தள்ளுபடி சலுகை அறிவிப்பு

சரி செய்திக்குள் போவோம். ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டருக்கு 5 சதவீத பணம் தள்ளுபடி தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.3,500 வரையிலான பணத்தை ஸ்கூட்டரை வாங்குவோர் சேமிக்க முடியும்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இப்போது வாங்குவதுதான் சிறந்தது!! புதிய பணம் தள்ளுபடி சலுகை அறிவிப்பு

இந்த பணம் தள்ளுபடியை பெற சில விதிமுறைகள் உள்ளன. அதாவது ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டருக்கான விலையில் குறைந்தது ரூ.40,000-ஐ ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) க்ரெடிட் கார்ட் மூலம் மாதத்தவணையாக செலுத்தும் வாடிக்கையாளர்கள் மட்டுமே பெற முடியும்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இப்போது வாங்குவதுதான் சிறந்தது!! புதிய பணம் தள்ளுபடி சலுகை அறிவிப்பு

இந்த பணம் தள்ளுபடி சலுகையை வழங்குவதை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஏற்கனவே கடந்த மே 1ஆம் தேதியில் இருந்து ஆரம்பித்துவிட்டது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை அறிய அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்தினை அணுகவும்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இப்போது வாங்குவதுதான் சிறந்தது!! புதிய பணம் தள்ளுபடி சலுகை அறிவிப்பு

ஆறாம் தலைமுறை ஹோண்டா ஆக்டிவா பல புதிய வசதிகளுடனும், சில டிசைன் & காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி ரீடிசைனில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை தற்போதைய தலைமுறை ஆக்டிவா கொண்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இப்போது வாங்குவதுதான் சிறந்தது!! புதிய பணம் தள்ளுபடி சலுகை அறிவிப்பு

இதனுடன் என்ஜினை ஸ்டார்ட்/ஸ்டாப் செய்வதற்கு பொத்தான் மற்றும் பல-செயல்பாட்டு இக்னிஷன் ஸ்விட்ச் உள்ளிட்டவையும் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றன. டாப் வேரியண்ட்களில் எல்இடி ஹெட்லேம்ப்கள் சில காஸ்மெட்டிக் வேறுபாடுகளுடன் வழங்கப்படுகின்றன.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இப்போது வாங்குவதுதான் சிறந்தது!! புதிய பணம் தள்ளுபடி சலுகை அறிவிப்பு

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 110சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-இல் 7.7 பிஎச்பி மற்றும் 5,250 ஆர்பிஎம்-இல் 8.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இதன் என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இப்போது வாங்குவதுதான் சிறந்தது!! புதிய பணம் தள்ளுபடி சலுகை அறிவிப்பு

இந்த ஆக்டிவா ஸ்கூட்டருக்கு க்ளிட்டர் ப்ளூ மெட்டாலிக், பேர்ல் ஸ்பார்டன் சிவப்பு, டஸல் மஞ்சள் மெட்டாலிக், முத்தின் வெள்ளை, மேட் ஆக்ஸிஸ் க்ரே மெட்டாலிக் மற்றும் கருப்பு என பல்வேறு விதமான நிறத்தேர்வுகளை ஹோண்டா நிறுவனம் வழங்குகிறது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இப்போது வாங்குவதுதான் சிறந்தது!! புதிய பணம் தள்ளுபடி சலுகை அறிவிப்பு

சந்தையில் பிரபலமான ஸ்கூட்டர் மாடலாக ஆக்டிவா 6ஜி விளங்குவதால் பெரிய அளவில் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இன்றி இந்த சலுகை அறிவிப்பை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது. விற்பனையில் இந்த ஹோண்டா ஸ்கூட்டருக்கு டிவிஎஸ் ஜூபிட்டர் மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள் போட்டியாக உள்ளன.

Most Read Articles

English summary
Honda Has Announced A Cashback Offer On The Purchase Of An Activa 6G: Read More In Tamil.
Story first published: Friday, May 7, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X