Just In
- 8 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 11 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 11 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 13 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Lifestyle
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹோண்டா சிபி350 அடிப்படையில் புதிய தேர்வு... நாளை வெளியீடு செய்கிறது ஹோண்டா... இதோ முழு விபரம்!!
தனது அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றான ஹைனெஸ் சிபி350 மாடலைத் தழுவி ஸ்கிராம்ப்ளர் ரக வாகனத்தை ஹோண்டா உருவாக்கியிருப்பதாகவும், இப்பைக்கை நாளை வெளியீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், மிக சமீபத்தில் ஹைனெஸ் சிபி350 எனும் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், இப்பைக்கின் அடிப்படையில் மீண்டும் ஓர் புதிய தேர்வை நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்க திட்டமட்டுள்ளது.

புதிய பைக்கை ஸ்கிராம்ப்ளர் ரக வாகனமாக களமிறக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதனையே தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி இந்த புதுமுக பைக்கின் வெளியீடு நாளை அரங்கேற இருப்பதாகவும் தற்போது வெளியாகியிருக்கும் புதிய தகவல்கள் தெரிவித்துள்ளன.

புதிய ஸ்கிராம்ப்ளர் ரக வாகனம் ஹோண்டா சிபி350 ஆர்எஸ் எனும் பெயரிலேயே நாளை அறிமுகமாக இருக்கின்றது. இதுபோன்று பல்வேறு முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவ்வாறு, பைக்குறித்து வெளியாகியிருக்கும் முக்கிய தகவல்களையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

சிபி350 ஆர்எஸ் எனும் பெயரில் நாளை வெளியீட்டைப் பெற இருக்கும் இப்பைக் ஓர் ஓர் பிரீமியம் ரக வாகனம் ஆகும். ஆகையால், இந்த வாகனத்தை ஹோண்டா பிக்விங் டீலர்கள் வாயிலாக விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹைனெஸ் சிபி350 பைக்கும் இதே சிறப்பு விற்பனையாளர்கள் வாயிலாகவே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

பெயரைப் போலவே இரு வாகனங்களுக்கும் இடையே சில அணிகலன் பொருத்தம் ஒரே மாதிரியானதாக இருக்கும் என இப்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையே பைக் குறித்து வெளியாகிய டீசர் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், டீசர் படங்கள் வாயிலாக நமக்கு கிடைத்த தகவல்கள் என்னவென்றால், இப்பைக்கில் இரு விதமான பயன்பாடுடைய டயர்கள் இடம்பெற இருப்பது தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி, வித்தியாசமான இருக்கை, குரோம் பூச்சு கொண்ட அணிகலன்களுக்கு மாற்றாக கருப்பு நிறத்திலான கூறுகள், உயர் தொழில்நுட்ப வசதிக் கொண்ட எக்சாஸ்ட் மற்றும் வித்தியாசமான ரைடிங் பொசிஷன் என பல்வேறு சிறப்புகளை இதுக் கொண்டிருக்கும்.

தொடர்ந்து, எல்இடி மின் விளக்கு, வட்ட வடிவ ஹெட்லேம்ப், அலாய் வீல், ட்யூப்லெஸ் டயர் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் என கவர்ச்சியான உரு வெளிப்பாட்டை வழங்கக் கூடிய கருவிகளும் இப்பைக்கில் இடம்பெற இருக்கின்றது. மேலும், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் கியர் பொசிஷன் இன்டிகேட்டர் உள்ளிட்ட ஸ்பெஷல் தொழில்நுட்ப வசதிகளும் இந்த வாகனத்தில் இடம்பெற இருக்கின்றன.

சிபி350 ஆர்எஸ் மாடல் 348.36 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதே திறன் கொண்ட எஞ்ஜின்தான் ஹைனெஸ் சிபி 350 பைக்கில் இடம் பெற்றிருக்கின்றது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட இந்த எஞ்ஜின் அதிக 20.8 பிஎச்பி மற்றும் 30 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.

இதன் விலை மற்றும் கூடுதல் சிறப்பு வசதிகள் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, விற்பனைக்கான அறிமுகம், நிற தேர்வு மற்றும் பிற முக்கியமான தகவல்கள் அடுத்து வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றன.