விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!

கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான வாகன விற்பனை எண்ணிக்கை உடன் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் 31 சதவீத வளர்ச்சியை விற்பனையில் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!

இந்தியாவில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஹோண்டா தொடர்ந்து 7வது முறையாக ஒரு மாதத்தில் விற்பனையில் வளர்ச்சியை கண்டுள்ளது.

விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!

கடந்த பிப்ரவரி மாதத்தில் 411,578 இருசக்கர வாகனங்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 315,285 ஹோண்டா மோட்டார்சைக்கிள்கள் விற்பனையான 2020 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் சுமார் 31 சதவீதம் அதிகமாகும்.

விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!

அதேபோல் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் 31,118 ஹோண்டா இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!

இந்த வகையில் மொத்தமாக 442,696 (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) வாகனங்களை 2021 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் இருந்து உலகளவில் ஹோண்டா விற்றுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 342,021 ஆகவே இருந்துள்ளது.இந்த வகையில் விற்பனையில் ஹோண்டா கண்ட வளர்ச்சி 29 சதவீதமாகும்.

விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இரண்டிற்கும் இடையே சுமார் 1 லட்சம் யூனிட்கள் வித்தியாசம் உள்ளது. கடந்த மாதத்தில் ஹோண்டா மேற்கொண்ட நடவடிக்கைகள் என்று பார்த்தோமேயானால், ப்ரீமியம் மோட்டார்சைக்கிள்களின் வணிகத்தை புதிய சிபி350ஆர்எஸ் பைக்கின் மூலம் இந்த ஜப்பானிய நிறுவனம் விரிவுப்படுத்தியுள்ளது.

விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!

ரூ.1,96,000 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் உதவி & ஸ்லிப்பர் க்ளட்ச், அட்வான்ஸான டிஜிட்டல்-அனலாக் மீட்டர் மற்றும் ஹோண்டா தேர்ந்தெடுக்கப்பட்ட டார்க் கண்ட்ரோல் (HSTC) உள்ளிட்ட பிரிவில் எந்த மோட்டார்சைக்கிளும் கொண்டில்லாத வசதிகளுடன் புதிய சிபி350ஆர்எஸ் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது.

விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!

அதேநேரம் 2021 ஆப்பிரிக்கா இரட்டை அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் டெலிவிரிகளை ஆரம்பித்து வைத்த ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் மேலும் 3 புதிய பிக்விங் ஷோரூம்களை திறந்தது. இதற்கு முன் சிபி வரிசையில் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சிபி350 பைக்கின் விற்பனை 10 ஆயிரத்தை கடந்தது.

விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!

2020 அக்டோபர் 21ஆம் தேதி சிபி350 பைக்கின் டெலிவிரி பணிகள் துவங்கப்பட்ட நிலையில் 10,000 என்ற விற்பனை எண்ணிக்கையை வெறும் 3 மாதங்களில் ஹோண்டா எட்டியுள்ளது. மேலும் தென்னிந்தியாவில் மட்டுமே 1.5 கோடி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கடந்துள்ளதாக இந்த நிறுவனத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியானது.

Most Read Articles
English summary
Honda posts robust 31% growth with 4 lac+ domestic sales in Feb’21
Story first published: Monday, March 1, 2021, 23:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X