ஆகஸ்ட் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ஹோண்டா என்எக்ஸ்200!! ஹார்னெட்டின் அட்வென்ச்சர் வெர்சன்

விரைவில் இந்திய சந்தைக்கு வரவுள்ள அட்வென்ச்சர் பைக்கின் டீசர் வீடியோவினை ஹோண்டா 2வீலர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஹோண்டா பைக்கை பற்றி தெரியவந்துள்ள விஷயங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆகஸ்ட் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ஹோண்டா என்எக்ஸ்200!! ஹார்னெட்டின் அட்வென்ச்சர் வெர்சன்

ஹோண்டாவின் இந்த புதிய அட்வென்ச்சர் பைக் என்எக்ஸ்200 என்கிற பெயரில் வருகிற ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக வெளிவரும் செய்திகள் கூறுகின்றன.

ஆகஸ்ட் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ஹோண்டா என்எக்ஸ்200!! ஹார்னெட்டின் அட்வென்ச்சர் வெர்சன்

ஆனால் ஹோண்டா 2வீலர்ஸ் நிறுவனம் இந்த அட்வென்ச்சர் பைக்கின் பெயரை கூட தற்போதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இத்தகைய பெயரை ஹோண்டா பதிவு செய்துள்ளதாக ஆவண படம் ஒன்றுடன் செய்திகள் மட்டுமே வெளிவந்தன.

ஆகஸ்ட் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ஹோண்டா என்எக்ஸ்200!! ஹார்னெட்டின் அட்வென்ச்சர் வெர்சன்

இந்த ஆவண படத்தில் என்எக்ஸ்200 பெயரை கடந்த மார்ச் மாதத்தில் ஹோண்டா பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகஸ்ட்டில் இரு புதிய மோட்டார்சைக்கிள் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள ஹோண்டா 2 வீல்ர்ஸ் இந்தியா நிறுவனம் கூறியிருந்தது.

ஆகஸ்ட் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ஹோண்டா என்எக்ஸ்200!! ஹார்னெட்டின் அட்வென்ச்சர் வெர்சன்

அதில் ஒன்றாக இது இருக்கலாம் என நம்பிக்கையாக உள்ளோம். இந்த நிலையில் தான் தற்போது இந்த அட்வென்ச்சர் பைக் தொடர்பான டீசர் வீடியோ ஒன்று ஹோண்டா 2 வீலர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோவில் பைக்கின் முன்பகுதியும், சைடு ஸ்டாண்ட் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. விற்பனையில் இருக்கும் ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிளை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய அட்வென்ச்சர் பைக், இதனால் ஹார்னெட் 2.0 பைக்கின் என்ஜின் & ப்ளாட்ஃபாரத்தில் தான் தயாரிக்கப்படும்.

ஆகஸ்ட் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ஹோண்டா என்எக்ஸ்200!! ஹார்னெட்டின் அட்வென்ச்சர் வெர்சன்

ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிளில் பொருத்தப்படும் 184.5சிசி, 2-வால்வு, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 17.26 பிஎச்பி மற்றும் 16.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ஆகஸ்ட் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ஹோண்டா என்எக்ஸ்200!! ஹார்னெட்டின் அட்வென்ச்சர் வெர்சன்

ஆனால் ஹார்னெட் மாடலில் இருந்து வேறுபடும் விதமாக, அட்வென்ச்சர் ரக பைக் என்பதால் என்எக்ஸ்200 பைக்கில் நீண்ட-டிராவல் கம்பியுடன் சஸ்பென்ஷன், அதிக க்ரவுண்ட் க்ளியரென்ஸ், உயரமான ஓட்டுனர் இருக்கை, அகலமான ஹேண்டில்பார் வழங்கப்படும்.

ஆகஸ்ட் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ஹோண்டா என்எக்ஸ்200!! ஹார்னெட்டின் அட்வென்ச்சர் வெர்சன்

க்னாபி டயர்கள் ஆஃப்-ரோடு பயணங்களுக்காக பொருத்தப்படலாம். இத்தகைய அம்சங்களுடன் எல்இடி விளக்குகள், பாதுகாப்பிற்கு ஒற்றை-சேனல் ஏபிஎஸ், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் உள்ளிட்டவையும் என்எக்ஸ்200 மோட்டார்சைக்கிளில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ஹோண்டா என்எக்ஸ்200!! ஹார்னெட்டின் அட்வென்ச்சர் வெர்சன்

இந்த புதிய ஹோண்டா பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை எங்களுக்கு தெரிந்தவரையில், ரூ.1.30 லட்சத்தில் இருந்து ரூ.1.80 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம். ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கின் விலை தற்சமயம் ரூ.1.31 லட்சமாக உள்ளது.

ஆகஸ்ட் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ஹோண்டா என்எக்ஸ்200!! ஹார்னெட்டின் அட்வென்ச்சர் வெர்சன்

ஹார்னெட் 2.0 மாடலில் வாகனத்தின் எரிபொருள் திறனை மேம்படுத்தும் விதமாக ஹோண்டாவின் ஈக்கோ தொழிற்நுட்பத்துடன் ஃப்யுல்-இன்ஜெக்‌ஷன் பொருத்தப்படுகிறது. இந்த தொழிற்நுட்பம் எரிபொருள் மற்றும் காற்றை சரியான கலவையில் என்ஜினிற்கு வழங்க உதவுகிறது.

ஆகஸ்ட் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ஹோண்டா என்எக்ஸ்200!! ஹார்னெட்டின் அட்வென்ச்சர் வெர்சன்

என்ஜின் மட்டுமின்றி இந்த ஹார்னெட் பைக்கின் 17 இன்ச் அலாய் சக்கரங்களும் இந்த புதிய என்எக்ஸ்200 அட்வென்ச்சர் பைக்கில் தொடரப்படலாம். சஸ்பென்ஷனுக்கு ஹார்னெட் பைக்கில் முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
Honda 'NX200' adventure bike teaser video is now out, launch likely on August 19.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X