எகிறும் எதிர்பார்ப்பு... அக்டோபர் 21ம் தேதி தரமான சம்பவத்தை செய்யப்போகும் ஹோண்டா... என்னனு தெரியுமா?

ஹோண்டா நிறுவனம் வரும் அக்டோபர் 21ம் தேதி சர்வதேச சந்தைக்கு புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எகிறும் எதிர்பார்ப்பு... அக்டோபர் 21ம் தேதி தரமான சம்பவத்தை செய்யப்போகும் ஹோண்டா... என்னனு தெரியுமா?

ஹோண்டா நிறுவனம் சர்வதேச சந்தைகளுக்கு புதிய டூரிங் மோட்டார்சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. வரும் அக்டோபர் 21ம் தேதி இந்த புதிய டூரிங் மோட்டார்சைக்கிளின் அறிமுக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் ஹோண்டா என்டி1100 (Honda NT1100) என்ற பெயரில் அழைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எகிறும் எதிர்பார்ப்பு... அக்டோபர் 21ம் தேதி தரமான சம்பவத்தை செய்யப்போகும் ஹோண்டா... என்னனு தெரியுமா?

ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மோட்டார்சைக்கிள்களில் ஒன்று ஆஃப்ரிக்கா ட்வின் (Honda Africa Twin). இந்த மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள அதே 1,082 சிசி இன்ஜின்தான், புதிய ஹோண்டா என்டி1100 மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 97 பிஹெச்பி பவரையும் மற்றும் 103 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்தது.

எகிறும் எதிர்பார்ப்பு... அக்டோபர் 21ம் தேதி தரமான சம்பவத்தை செய்யப்போகும் ஹோண்டா... என்னனு தெரியுமா?

புதிய ஹோண்டா என்டி1100 மோட்டார்சைக்கிளில், ட்யூயல் டிஸ்ப்ளேக்கள் உடன் டச்ஸ்க்ரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெரிய விண்டுஸ்க்ரீனையும் இந்த மோட்டார்சைக்கிள் பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எகிறும் எதிர்பார்ப்பு... அக்டோபர் 21ம் தேதி தரமான சம்பவத்தை செய்யப்போகும் ஹோண்டா... என்னனு தெரியுமா?

மேலும் ஆக்ஸலரி லைட்கள், முழு எல்இடி லைட்கள் ஆகிய அம்சங்களும் புதிய ஹோண்டா என்டி1100 மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டாவின் புதிய என்டி1100 மோட்டார்சைக்கிளானது, கவாஸாகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் (Kawasaki Ninja 1000SX) உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுடன் விற்பனையில் போட்டியிடும்.

எகிறும் எதிர்பார்ப்பு... அக்டோபர் 21ம் தேதி தரமான சம்பவத்தை செய்யப்போகும் ஹோண்டா... என்னனு தெரியுமா?

ஆனால் ஹோண்டா நிறுவனம் புதிய என்டி1100 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருமா? இல்லையா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஹோண்டா என்டி1100 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், டூரிங் பைக் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எகிறும் எதிர்பார்ப்பு... அக்டோபர் 21ம் தேதி தரமான சம்பவத்தை செய்யப்போகும் ஹோண்டா... என்னனு தெரியுமா?

ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. இதில், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 (Honda Hness CB350) மோட்டார்சைக்கிள் முக்கியமானது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) மற்றும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) ஆகிய மாடல்களுக்கு போட்டியாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் வந்துள்ளது.

எகிறும் எதிர்பார்ப்பு... அக்டோபர் 21ம் தேதி தரமான சம்பவத்தை செய்யப்போகும் ஹோண்டா... என்னனு தெரியுமா?

முழுக்க முழுக்க ராயல் என்பீல்டு நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியாவின் 350 சிசி செக்மெண்ட்டில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் தற்போது முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு சிறந்த மாற்றாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளை இந்திய வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.

எகிறும் எதிர்பார்ப்பு... அக்டோபர் 21ம் தேதி தரமான சம்பவத்தை செய்யப்போகும் ஹோண்டா... என்னனு தெரியுமா?

இதுதவிர சிபி200எக்ஸ் (Honda CB200X) மோட்டார்சைக்கிளையும் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. வெகு சமீபத்தில்தான் இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் களமிறக்கப்பட்டது. இந்திய இளைஞர்களை புதிய ஹோண்டா சிபி200எக்ஸ் மோட்டார்சைக்கிள் கவர்ந்துள்ளது.

எகிறும் எதிர்பார்ப்பு... அக்டோபர் 21ம் தேதி தரமான சம்பவத்தை செய்யப்போகும் ஹோண்டா... என்னனு தெரியுமா?

புதிய ஹோண்டா சிபி200எக்ஸ் மோட்டார்சைக்கிளில், 184 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 17 பிஹெச்பி பவரையும், 16.1 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா சிபி200எக்ஸ் மோட்டார்சைக்கிள் தினசரி நகர பயன்பாடுகளுக்கு ஏற்றது.

எகிறும் எதிர்பார்ப்பு... அக்டோபர் 21ம் தேதி தரமான சம்பவத்தை செய்யப்போகும் ஹோண்டா... என்னனு தெரியுமா?

அத்துடன் நகர எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வீக் எண்ட் டிரிப்களுக்கும் ஹோண்டா சிபி200எக்ஸ் மோட்டார்சைக்கிள் உகந்ததாக உள்ளது. இந்த 2 அம்சங்களின் கலவையும், வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஹோண்டா சிபி200எக்ஸ் மோட்டார்சைக்கிளில் முழு எல்இடி ஹெட்லேம்ப் வசதி வழங்கப்பட்டுள்ளது.

எகிறும் எதிர்பார்ப்பு... அக்டோபர் 21ம் தேதி தரமான சம்பவத்தை செய்யப்போகும் ஹோண்டா... என்னனு தெரியுமா?

ஹெட்லேம்ப், டெயில்லேம்ப் என அனைத்திலுமே எல்இடி பல்புகள்தான் பொருத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு சந்தையில் ஹோண்டா சிபி200எக்ஸ் மோட்டார்சைக்கிளின் டெலிவரி பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. இந்த வரிசையில் என்டி1100 மோட்டார்சைக்கிளையும் ஹோண்டா நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Honda to unveil nt1100 motorcycle on october 21 here are all the details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X