ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் 40 லட்சம் வாடிக்கையாளர்கள்... Honda டூ-வீலர்கள் மட்டும்தான் இருக்கும் போலிருக்கே!

இந்தியாவின் ஒற்றை மாநிலத்தில் 40 லட்சத்திற்கும் அதிகமான இருசக்கர வாகன யூனிட்களை விற்பனைச் செய்து ஹோண்டா (Honda Motorcycle and Scooter India) நிறுவனம் கெத்து காட்டியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் 40 லட்சம் வாடிக்கையாளர்கள்... Honda டூ-வீலர்கள் மட்டும்தான் இருக்கும் போலிருக்கே!

ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இருப்பினும், குறிப்பிட்ட ஓர் மாநிலத்தில் மட்டும் மிக அபரீதமான வரவேற்பை நிறுவனத்தின் தயாரிப்புகள் பெற்று வருவதாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் 40 லட்சம் வாடிக்கையாளர்கள்... Honda டூ-வீலர்கள் மட்டும்தான் இருக்கும் போலிருக்கே!

சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை நிறுவனம் அந்த ஒற்றை மாநிலத்தில் மட்டும் பெற்றிருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவிலேயே இந்த மாபெரும் வரவேற்பை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பெற்றிருக்கின்றது.

ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் 40 லட்சம் வாடிக்கையாளர்கள்... Honda டூ-வீலர்கள் மட்டும்தான் இருக்கும் போலிருக்கே!

புதிய தயாரிப்புகள் மற்றும் விற்பனையகங்களை அதிகரிக்கச் செய்ததன் வாயிலாகவே இத்தகைய பிரமாண்ட வரவேற்பை கர்நாடகாவில் தங்கள் நிறுவனம் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது இந்தியர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் 40 லட்சம் வாடிக்கையாளர்கள்... Honda டூ-வீலர்கள் மட்டும்தான் இருக்கும் போலிருக்கே!

நீடித்து உழைக்கும் தன்மை, அதிக மைலேஜ் ஆகியவை நிறுவனத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இதன் விளைவாகவே ஹோண்டாவின் இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்பை நாட்டில் கிடைத்து வருகின்றது. நிறுவனம் சுமார் 380 தொடுபாயிண்டுகள், டீலர் மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களுடன் மாநிலத்தில் செயல்பட்டு வருகின்றது.

ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் 40 லட்சம் வாடிக்கையாளர்கள்... Honda டூ-வீலர்கள் மட்டும்தான் இருக்கும் போலிருக்கே!

இது, அம்மாநில வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, தென்னிந்தியாவிற்கு என சிறப்பு டீல்களையும் நிறுவனம் அறிவித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இத்துடன், வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் டிஜிட்டல் வாயிலாகவும் தனது தயாரிப்புகளை நிறுவனம் மார்க்கெட்டிங் செய்து வருவகின்றது.

ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் 40 லட்சம் வாடிக்கையாளர்கள்... Honda டூ-வீலர்கள் மட்டும்தான் இருக்கும் போலிருக்கே!

இதுபோன்ற பன்முக முயற்சிகளினாலேயே நிறுவனம் தற்போது கர்நாடகா வாகன உலகில் வரலாற்று சாதனையைப் படைத்திருக்கின்றது. குறிப்பாக, தனது ஸ்கூட்டர்கள் மாநிலத்தில் வலுவான 49 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும், அதே நேரத்தில் கர்நாடகாவின் ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனையில் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் 32 சதவீத சந்தைப் பங்கை எட்டியிருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் 40 லட்சம் வாடிக்கையாளர்கள்... Honda டூ-வீலர்கள் மட்டும்தான் இருக்கும் போலிருக்கே!

நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் ஓர் துருவ நிலையைப் பெற்றிருக்கின்றது என்றே கூறலாம். இத்தகைய இடத்தை நிறுவனம் பிடிப்பதற்கு ஆக்டிவா ஸ்கூட்டரே முக்கிய காரணியாக இருக்கின்றது. நிறுவனத்தின் பல தயாரிப்புகளுக்கு மத்தியில் பல ஆண்டுகளாக விற்பனையில் இது வெற்றி நடைப்போட்டு வருகின்றது.

ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் 40 லட்சம் வாடிக்கையாளர்கள்... Honda டூ-வீலர்கள் மட்டும்தான் இருக்கும் போலிருக்கே!

ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான இருசக்கர வாகன மாடல்களாக ஆக்டிவா 125, டியோ மற்றும் கிரேஸியா 125 ஆகிய மாடல்கள் இருக்கின்றன. இத்துடன், தினசரி இருசக்கர வாகன பயன்பாட்டை விரும்புவோர் மத்தியில் ஹோண்டாவின் சிடி110 ட்ரீம், லிவோ, எஸ்பி125, ஷைன், யுனிகார்ன், எக்ஸ்-பிளேட், ஹார்னெட் 2.0 மற்றும் சிபி200எக்ஸ் மாடல் மோட்டார்சைக்கிள்கள் மிகவும் பிரபலமானவையாக இருக்கின்றன.

ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் 40 லட்சம் வாடிக்கையாளர்கள்... Honda டூ-வீலர்கள் மட்டும்தான் இருக்கும் போலிருக்கே!

ஹோண்டா நிறுவனம் இதுபோன்று விற்பனையில் சாதனையைப் படைப்பது முதல் முறையல்ல. அண்மையில், நாடு முழுவதும் 5 கோடி (50 மில்லியன்) யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனை என்ற மாபெரும் சாதனை மைல் கல்லை அது எட்டியது. இது ஒட்டுமொத்த இருசக்கர வாகன உலகிற்குமே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

Most Read Articles
English summary
Honda two wheelers crosses 40 lakh customers milestone in karnataka
Story first published: Thursday, November 18, 2021, 10:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X