மீண்டும் பிரச்சனையா? சிபி350 பைக்குகளை திரும்ப அழைக்கும் ஹோண்டா!! ஆக்டிவா ஸ்கூட்டர்களும் தான்...

கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக ஹோண்டா டூ வீலர்ஸ் நிறுவனம் அதன் விற்கப்பட்ட ஹைனெஸ் சிபி350 பைக்குகளை மீண்டும் அழைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

மீண்டும் பிரச்சனையா? சிபி350 பைக்குகளை திரும்ப அழைக்கும் ஹோண்டா!! ஆக்டிவா ஸ்கூட்டர்களும் தான்...

தயாரிப்பு வாகனங்களில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்தால் உடனே அவற்றை அழைத்து பழுது பார்க்கும் நடவடிக்கையை ஹோண்டா மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் தான் சில மாதங்களுக்கு முன்பு ஹைனெஸ் சிபி350 பைக்குகள் திரும்ப அழைக்கப்பட்டன.

மீண்டும் பிரச்சனையா? சிபி350 பைக்குகளை திரும்ப அழைக்கும் ஹோண்டா!! ஆக்டிவா ஸ்கூட்டர்களும் தான்...

தற்போது மீண்டும் அழைக்கப்பட்டுள்ளன. ஆனால் இம்முறை இந்த ரெட்ரோ-ஸ்டைல் ரோட்ஸ்டர் மட்டுமின்றி எக்ஸ்ப்ளேட், ஹார்னெட் 2.0, ஆக்டிவா 5ஜி, ஆக்டிவா 6ஜி, ஆக்டிவா 125 மற்றும் சிபி ஷைன் பைக் உள்பட சிபி300ஆர் பைக்குகளும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.

மீண்டும் பிரச்சனையா? சிபி350 பைக்குகளை திரும்ப அழைக்கும் ஹோண்டா!! ஆக்டிவா ஸ்கூட்டர்களும் தான்...

இந்த ஹோண்டா இருசக்கர வாகனங்களில் 2019 நவம்பரில் இருந்து 2021 ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டவை மட்டுமே திரும்ப அழைக்கப்படுகின்றன. இவற்றில் முன் ஃபோர்க்கில் பொருத்தப்படுகின்ற ஒளி பிரதிபலிபான்களில் பிரச்சனை இருப்பதை ஹோண்டா நிறுவனம் கண்டறிந்துள்ளது.

மீண்டும் பிரச்சனையா? சிபி350 பைக்குகளை திரும்ப அழைக்கும் ஹோண்டா!! ஆக்டிவா ஸ்கூட்டர்களும் தான்...

இதுகுறித்த இந்த ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தின் அறிக்கையில், இந்த பிரதிபலிப்பான்கள் தேவையான ஒளிமின்னழுத்த விதிகளில் இருந்து சற்று மாறுபடுகின்றன, இதன் விளைவாக போதிய ஒளி பிரதிபலிப்பு திறன் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் பிரச்சனையா? சிபி350 பைக்குகளை திரும்ப அழைக்கும் ஹோண்டா!! ஆக்டிவா ஸ்கூட்டர்களும் தான்...

இதனால் இந்த பழுதினை சரிசெய்ய வாகனத்தின் உட்புற இயந்திர பாகங்களில் கை வைக்க தேவை இருக்காது. பாதுகாப்பு ஒளி பிரதிப்பலிப்பானில் கண்டறியப்பட்டுள்ள இந்த குறையை இலவசமாக பழுது பார்த்து தரப்படும் எனவும் ஹோண்டா தெரிவித்துள்ளது.

மீண்டும் பிரச்சனையா? சிபி350 பைக்குகளை திரும்ப அழைக்கும் ஹோண்டா!! ஆக்டிவா ஸ்கூட்டர்களும் தான்...

இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கைகள் நடப்பு ஜூன் மாத துவக்கத்தில் இருந்தே ஆரம்பித்துவிட்டன. இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு அருகில் உள்ள ஹோண்டா டீலர்ஷிப் மையத்தினை அணுகவும்.

மீண்டும் பிரச்சனையா? சிபி350 பைக்குகளை திரும்ப அழைக்கும் ஹோண்டா!! ஆக்டிவா ஸ்கூட்டர்களும் தான்...

சிபி300ஆர் மற்றும் ஹைனெஸ் சிபி350 பைக்குகளை பிக்விங் அவுட்லெட்கள் மூலம் ஹோண்டா டூவீலர்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதனால் இந்த ஹோண்டா பைக்குகளின் உரிமையாளர்கள் தங்களது பைக்கும் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் உட்படுகிறதா என்பதை அறிய பிக்விங் அவுட்லெட்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

மீண்டும் பிரச்சனையா? சிபி350 பைக்குகளை திரும்ப அழைக்கும் ஹோண்டா!! ஆக்டிவா ஸ்கூட்டர்களும் தான்...

அல்லது, ஹோண்டா டூ வீலர்ஸின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தையும் தொடர்பு கொள்ளலாம். இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையை பொறுத்தவரையில் வாகனத்தின் உத்தரவாத காலத்தை பொருட்படுத்த வேண்டாம்.

மீண்டும் பிரச்சனையா? சிபி350 பைக்குகளை திரும்ப அழைக்கும் ஹோண்டா!! ஆக்டிவா ஸ்கூட்டர்களும் தான்...

சிபி350 மட்டுமின்றி சிபி350 ஆர்எஸ் மோட்டார்சைக்கிளும் இந்தியாவில் விற்பனையில் உள்ளது. இவை இரண்டிலும் ஒரே 348.36சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. ஆனால் இவற்றின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.1.89 லட்சம் மற்றும் ரூ.1.96 லட்சமாக உள்ளன.

Most Read Articles
English summary
Honda two wheelers second recall for cb350 & activa scooters.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X