2021 இந்தியா பைக் வாரம்: ஹோண்டா சிபி300ஆர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் வெளியீடு!! ஜனவரியில் விற்பனை துவக்கம்

ஹோண்டா சிபி300ஆர் மோட்டார்சைக்கிள் நடைபெற்றுவரும் 2021 இந்தியன் மோட்டார் கண்காட்சியில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஹோண்டா பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

இந்தியா பைக் வாரம்: ஹோண்டா சிபி300ஆர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் வெளியீடு!! ஜனவரியில் விற்பனை துவக்கம்

ஹோண்டாவின் அளவில் சிறிய ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிளாக விளங்கும் சிபி300ஆர்-இன் விற்பனை போட்டி மாடல்கள் ஏற்கனவே பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானதாகவும், தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ற விதத்திலும் அப்டேட் செய்யப்பட்டுவிட்டன. சிபி300ஆர் இப்போதுதான் மாடர்ன் தோற்றத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா பைக் வாரம்: ஹோண்டா சிபி300ஆர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் வெளியீடு!! ஜனவரியில் விற்பனை துவக்கம்

தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ள அப்டேட் செய்யப்பட்ட சிபி300ஆர் பைக்கை வருகிற 2022 ஜனவரி 22ஆம் தேதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர ஹோண்டா திட்டமிட்டுள்ளது. மேலும் அதே தேதியில் தான் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா பைக் வாரம்: ஹோண்டா சிபி300ஆர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் வெளியீடு!! ஜனவரியில் விற்பனை துவக்கம்

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கில் மிக முக்கியமான அப்டேட்டாக இதன் 286சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் பிஎஸ்6க்கு இணக்கமானதாக கொண்டுவரப்பட்டுள்ளது. பிஎஸ்6-க்கு அப்கிரேட் செய்யப்பட்ட என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகள் இன்னும் வெளியீடு செய்யப்படவில்லை. இந்த என்ஜின் முன்பு பைக்கிற்கு வழங்கிய ஆற்றல் அளவுகளில் சற்று கூடுதலோ அல்லது குறைத்தலோ கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

இந்தியா பைக் வாரம்: ஹோண்டா சிபி300ஆர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் வெளியீடு!! ஜனவரியில் விற்பனை துவக்கம்

சிபி300ஆர்-இன் என்ஜின் முன்பு அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-இல் 30.4 பிஎஸ் மற்றும் 6500 ஆர்பிஎம்-இல் 27.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. மிக முக்கியமாக டிரான்ஸ்மிஷன் அமைப்பில் ஸ்லிப்பர் க்ளட்ச் யூனிட் சேர்க்கப்பட்டுள்ளது. என்ஜின் அப்கிரேடை தவிர்த்து புதிய சிபி300ஆர் பைக்கில் மற்றவை அனைத்தும் முந்தைய தலைமுரையில் இருந்து அப்படியே தொடரப்பட்டுள்ளன.

இந்தியா பைக் வாரம்: ஹோண்டா சிபி300ஆர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் வெளியீடு!! ஜனவரியில் விற்பனை துவக்கம்

இந்த வகையில் அதே ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பிஎஸ்6 ஹோண்டா சிபி300ஆர் பைக்கில் சஸ்பென்ஷனுக்கு வழக்கம்போல் முன்பக்கத்தில் 41மிமீ-இல் ஷோவா யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக் செட்அப் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை முன்பக்க ஃபோர்க் ஜோடி சில்வர் நிறத்திற்கு பதிலாக தங்க நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா பைக் வாரம்: ஹோண்டா சிபி300ஆர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் வெளியீடு!! ஜனவரியில் விற்பனை துவக்கம்

இது பைக்கிற்கு கூடுதல் பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. இவ்வளவு ஏன், புதிய சிபி300ஆர் பைக்கில் முன்பக்க & பின்பக்க டிஸ்க் ப்ரேக்குகளில் கூட எந்த மாற்றமும் இல்லை. அதேபோல் ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு உண்டான நியோ-ரெட்ரோ தோற்றத்திலும் எந்த மாற்றமும் இல்லை. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பகுதியில் வழங்கப்படும் எல்சிடி திரையிலும் ஹோண்டா கை வைக்கவில்லை.

இந்தியா பைக் வாரம்: ஹோண்டா சிபி300ஆர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் வெளியீடு!! ஜனவரியில் விற்பனை துவக்கம்

நாங்கள் டிஎஃப்டி வண்ணத்திரை வழங்கப்படும் என எதிர்பார்த்தோம். அல்லது குறைந்தப்பட்சம் ப்ளூடூத் இணைப்பையாவது இந்த ஹோண்டா பைக் பெற்றிருக்கலாம். ஏனெனில் இவற்றை எல்லாம் இதன் விற்பனை போட்டி பைக்குகள் ஏற்கனவே கொண்டுள்ளன. இவை ஓட்டுனரின் பயண அனுபவத்தையே மொத்தமாக மாற்றியமைக்கக்கூடியவை. அத்தகையவற்றை ஹோண்டா கொடுக்காமல் தவிர்த்திருப்பது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியா பைக் வாரம்: ஹோண்டா சிபி300ஆர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் வெளியீடு!! ஜனவரியில் விற்பனை துவக்கம்

பெட்ரோல் டேங்க் நீட்டிப்புகள் க்ரே நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. ஆனால் பிஎஸ்4 சிபி300ஆர் பைக்கில் சில்வர் நிறத்தில் இவை வழங்கப்பட்டன. ஒரு வழியாக சிபி300ஆர் ஹோண்டாவின் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களின் குழுவில் இணைந்துள்ளது. ஆனால் உண்மையில் இதன் தோற்றம் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இல்லை என்பது கசப்பான உண்மையே.

இந்தியா பைக் வாரம்: ஹோண்டா சிபி300ஆர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் வெளியீடு!! ஜனவரியில் விற்பனை துவக்கம்

அதுமட்டுமின்றி விலையும் மற்றவைகளை காட்டிலும் சற்று அதிகமானதாக சிபி300ஆர் பைக்கிற்கு ஹோண்டா நிர்ணயிக்கிறது. இதுவும் இந்த 'சிபிஆர்' பைக் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகாததற்கு காரணங்களுள் ஒன்றாகும். பார்ப்போம், புதிய பிஎஸ்6 சிபி300ஆர்-இன் விலையை ஆவது ஹோண்டா மற்ற போட்டி மாடல்களுக்கு சவாலானதாக நிர்ணயித்து, அதிக வாடிக்கையாளர்களை பெறுமா என்று.

இந்தியா பைக் வாரம்: ஹோண்டா சிபி300ஆர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் வெளியீடு!! ஜனவரியில் விற்பனை துவக்கம்

அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து விற்பனையை துவங்கவுள்ள புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.2.75 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம். விற்பனையில் ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு கேடிஎம் 390 ட்யூக் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

இந்தியா பைக் வாரம்: ஹோண்டா சிபி300ஆர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் வெளியீடு!! ஜனவரியில் விற்பனை துவக்கம்

தோற்றத்தை வைத்து ஒப்பிட்டு பார்த்தோமேயானால், பஜாஜ் ஆட்டோவின் டோமினார் 400 கூட சிபி300ஆர் பைக்கிற்கு போட்டி எனலாம். ஆனால் டோமினார் 400-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.06 லட்சத்தில் இருந்தே துவங்குகின்றன. கேடிஎம் 390 ட்யூக்கின் ஆரம்ப விலை தற்சமயம் ரூ.2.87 லட்சமாகவும், பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கின் விலை ரூ.2.50 லட்சமாகவும் உள்ளது.

Most Read Articles
English summary
Honda CB300R BS6 Launched.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X