ஆப்பிரிக்கா ட்வின் அடிப்படையிலான ஹோண்டாவின் புதிய 200சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டிற்கு இல்லைங்க

ஆஃப்-ரோடு பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளிற்கான தேவை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதிலும் புதிய ரைடர்கள், மலிவான அட்வென்ச்சர் பைக்கையே வாங்க விரும்புகின்றனர்.

ஆப்பிரிக்கா ட்வின் அடிப்படையிலான ஹோண்டாவின் புதிய 200சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டிற்கு இல்லைங்க

ஏனெனில் அவை தான் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றவைகளாக இருப்பது மட்டுமின்றி, அவ்வப்போது ஆஃப்-ரோடு பயணங்களுக்கு கொண்டு செல்லவும் பயன்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டே ஹோண்டா நிறுவனம் அதன் சிஆர்எஃப்190எல் மோட்டார்சைக்கிளை சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஆப்பிரிக்கா ட்வின் அடிப்படையிலான ஹோண்டாவின் புதிய 200சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டிற்கு இல்லைங்க

ஹோண்டா சிஆர்எஃப்190எல் பைக்கின் ஸ்டைல் மற்றும் ரைடிங் பொசிஷன் உள்ளிட்டவை நமக்கு ஆப்பிரிக்கா ட்வின் பைக்குகளை ஞாபகப்படுத்துகின்றன. குறிப்பாக பக்கவாட்டு பேனல்கள், ஆப்பிரிக்கா ட்வின் பைக்குகளில் இருந்து அப்படியே பெறப்பட்டது போன்று உள்ளன.

ஆப்பிரிக்கா ட்வின் அடிப்படையிலான ஹோண்டாவின் புதிய 200சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டிற்கு இல்லைங்க

முன்பக்கத்தில் ஹோண்டாவின் இந்த சிறிய ரக அட்வென்ச்சர் பைக்கில் தட்டையான-தோற்றத்திலான ஹெட்லேம்ப் கௌல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே மற்ற ஹோண்டா பைக்குகளில் இருந்து இந்த அட்வென்ச்சர் பைக் முன்பக்க தோற்றத்தில் வேறுப்படுவதற்கு முக்கிய காரணமாகும். சிஆர்எஃப்190எல் பைக்கின் முன்பக்கத்தில் நன்கு பெரியதாகவே விண்ட்ஸ்க்ரீன் வழங்கப்பட உள்ளன.

ஆப்பிரிக்கா ட்வின் அடிப்படையிலான ஹோண்டாவின் புதிய 200சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டிற்கு இல்லைங்க

பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் இந்த பைக்கில் வட்ட வடிவில் உள்ளன. இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்குடன் ஒப்பிடுகையில், சிஆர்எஃப்190எல் மோட்டார்சைக்கிள் ஆனது தனித்துவமான ஸ்டைலையும், வசதிகளையும் கொண்டுள்ளது.

ஆப்பிரிக்கா ட்வின் அடிப்படையிலான ஹோண்டாவின் புதிய 200சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டிற்கு இல்லைங்க

அதாவது சிபி200எக்ஸ்-ஐ காட்டிலும் சீனாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த அட்வென்ச்சர் பைக் பக்கா ஆஃப்-ரோடிற்கு ஏற்ற உடலமைப்பை பெற்றுள்ளது. சிபி200எக்ஸ் பைக்கை அனைவரும் பார்த்திருப்பீர்கள். இதனை சற்று அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ப ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதனால் அட்வென்ச்சர் பயண அனுபவம் சீன மாடலிலேயே சிறப்பானதாக இருக்கும்.

ஆப்பிரிக்கா ட்வின் அடிப்படையிலான ஹோண்டாவின் புதிய 200சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டிற்கு இல்லைங்க

அதுமட்டுமில்லாமல், சிஆர்எஃப்190எல் பைக்கில் முன்பக்கத்தில் நீண்ட டிராவல் உடன் சஸ்பென்ஷன், வயர் ஸ்போக் சக்கரங்கள் மற்றும் இரட்டை பயன்பாட்டு டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனுக்கு இந்த பைக்கில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், நமது சிபி200எக்ஸ் பைக்கில் தங்க நிறத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்கா ட்வின் அடிப்படையிலான ஹோண்டாவின் புதிய 200சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டிற்கு இல்லைங்க

அகலமான மற்றும் காற்று இயக்கவியலுக்கு இணக்கமான ஹேண்டில்பார் மற்றும் வளைவான இருக்கை அமைப்பை கொண்டுள்ளதால் ஹோண்டா சிஆர்எஃப்190எல் பைக்கில் சவுகரியமான பயண அனுபவத்தை சீன வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த அட்வென்ச்சர் பைக்கின் பின்பக்கத்தில் பொருட்களை வைப்பதற்கான அலமாரியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா ட்வின் அடிப்படையிலான ஹோண்டாவின் புதிய 200சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டிற்கு இல்லைங்க

இந்த படங்களில், இரட்டை நிறங்களில் ஹோண்டாவின் இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கை காணலாம். இருப்பினும் அதிகாரப்பூர்வ சீன அறிமுகத்தின் போது இதனை காட்டிலும் கூடுதல் நிறத்தேர்வுகள் அறிவிக்கப்படும். பைக்கின் பெரும்பாலான பாகங்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட, கிராஃபிக்ஸ் தான் சிஆர்எஃப்190எல் பைக்கின் கவர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஆப்பிரிக்கா ட்வின் அடிப்படையிலான ஹோண்டாவின் புதிய 200சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டிற்கு இல்லைங்க

சிஆர்எஃப்190எல் அட்வென்ச்சர் பைக்கை பற்றிய வேறெந்த விபரத்தையும் ஹோண்டா நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. சீனாவில் விரைவில் விற்பனைக்கு செல்லவுள்ள இந்த பைக்கில், சிபி200எக்ஸ்-இன் அதே 184.4சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் தான் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிரிக்கா ட்வின் அடிப்படையிலான ஹோண்டாவின் புதிய 200சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டிற்கு இல்லைங்க

அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-இல் 17 பிஎச்பி மற்றும் 6000 ஆர்பிஎம்-இல் 16.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மேலும் இதே என்ஜின் தான் இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கிலும் பொருத்தப்படுகிறது.

ஆப்பிரிக்கா ட்வின் அடிப்படையிலான ஹோண்டாவின் புதிய 200சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டிற்கு இல்லைங்க

சிஆர்எஃப்190எல் பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதி கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதில் ப்ரேக்கிங் பணிக்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. சீனாவில் இந்த பைக் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிரிக்கா ட்வின் அடிப்படையிலான ஹோண்டாவின் புதிய 200சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டிற்கு இல்லைங்க

சீனாவில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்தோனிஷியா போன்ற அட்வென்ச்சர் பைக்குகளுக்கு நல்ல சந்தையாக உள்ள நாடுகளுக்கு சிஆர்எஃப்190எல் பைக்கை கொண்டு செல்ல ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் சிபி200எக்ஸ் பைக்கை சில மாதங்களுக்கு முன்பு தான் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியதால், இந்த அட்வென்ச்சர் பைக் நம் நாட்டில் விற்பனைக்கு வர வாய்ப்புகள் மிக குறைவு.

Most Read Articles
English summary
Honda will soon introduce CRF190L in China market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X