3 இருக்கைகள் உடைய ஸ்டியரிங் வீல் இல்லா கார்... இந்த காரின் உட்பகுதியை பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது!!

எதிர்கால டிசைன் தாத்பரியம் மற்றும் ஸ்டியரிங் வீல் இல்லாத காரினை சீனாவைச் சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கார்குறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

3 இருக்கைகள் உடைய ஸ்டியரிங் வீல் இல்லா கார்... இந்த காரின் உட்பகுதியை பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது!!

சீனாவை மையமாகக் கொண்டு வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் ஹாங்க்யி (Hongqi). இந்நிறுவனம் தற்போது ஷாங்காய் நகரத்தில் நடைபெற்று வரும் 2021 ஷாங்காய் வாகன கண்காட்சியில் அதன் கான்செப்ட் (முன்மாதிரி) மாடல் ஒன்றை காட்சிப்படுத்தியிருக்கின்றது.

3 இருக்கைகள் உடைய ஸ்டியரிங் வீல் இல்லா கார்... இந்த காரின் உட்பகுதியை பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது!!

மூன்று இருக்கைகள் வசதிக் கொண்ட இக்காரில் ஸ்டியரிங் வீல் இடம்பெறவில்லை என்பது ஆச்சரியமிகு தகவல். இதுமாதிரியான இன்னும் பல வியப்பை ஏற்படுத்தும் தகவல்களை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால் ஆட்டோ ஷோவில் பங்கேற்ற பெரும்பாலானோரை அது கவர்ந்திழுத்தது.

3 இருக்கைகள் உடைய ஸ்டியரிங் வீல் இல்லா கார்... இந்த காரின் உட்பகுதியை பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது!!

1958ம் ஆண்டில் சீனாவை மையமாகக் கொண்டு வாகன உற்பத்தியை தொடங்கிய நிறுவனமே ஹாங்க்யி. மிகவும் பழமையான இந்த நிறுவனம் ஆடம்பர மற்றும் பிரீமியம் தர வாகன தயாரிப்பை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையிலேயே தனது எதிர்காலப்பு தயாரிப்பு ஒன்றை வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.

3 இருக்கைகள் உடைய ஸ்டியரிங் வீல் இல்லா கார்... இந்த காரின் உட்பகுதியை பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது!!

எல்-கான்செப்ட் எனும் பெயரில் அக்கார் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வெறும் காட்சிப்படுத்தலை நிறுவனமே செய்திருக்கின்றது. ஆகையால், எல்-கான்செப்ட் பற்றிய முக்கிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாகக் கிடைக்கவில்லை. அதேசமயம், சில குறிப்பிட்ட முக்கிய தகவல்கள் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளன.

3 இருக்கைகள் உடைய ஸ்டியரிங் வீல் இல்லா கார்... இந்த காரின் உட்பகுதியை பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது!!

ஹாங்க்யி நிறுவனம் எல்-கான்செப்ட் காரை வரும் 2023ம் ஆண்டில் உற்பத்தி செய்ய இருப்பதாகவும், இதற்கு முன்னதாக விற்பனைக்கான உற்பத்தி மாடலை நிறுவனம் அறிமுகம் செய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செடான் ரகத்திலான இக்கார் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சொகுசு கார்களைப் போன்ற வெளிப்புறத்தைப் பெற்றிருக்கின்றது.

3 இருக்கைகள் உடைய ஸ்டியரிங் வீல் இல்லா கார்... இந்த காரின் உட்பகுதியை பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது!!

இதன் க்ரில் மற்றும் ஹெட்லேம்ப்புகள் ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் இருப்பதைப் போன்றிருப்பதை நம்மால் காண முடிகின்றது. அதேசமயம், இக்காரின் உடல் தோற்றமும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களைப் போன்ற இருக்கின்றது. ஆனால், எதிர்கால டிசைன் தாத்பரியங்களை இது பெற்றிருக்கின்றது.

3 இருக்கைகள் உடைய ஸ்டியரிங் வீல் இல்லா கார்... இந்த காரின் உட்பகுதியை பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது!!

குறிப்பாக, மின் விளக்கு மற்றும் பம்பர் ஆகியவை இதுவரை நாம் கண்டிராத ஸ்டைலில் இருக்கின்றன. இதேபோன்று, இக்காரின் வீலும் எதிர்கால டிசைன் தாத்பரியத்தைப் பெற்றிருக்கின்றது. இவற்றைக் காட்டிலும் காரின் கேபின் பகுதியே அதிக கவர்ச்சியான சிறப்பு வசதிகளைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது.

3 இருக்கைகள் உடைய ஸ்டியரிங் வீல் இல்லா கார்... இந்த காரின் உட்பகுதியை பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது!!

ஒட்டுமொத்தமாக மூன்று இருக்கைகள் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. முன் பக்கத்தில் ஒன்றும், பின்பக்கத்தில் இரண்டும் உள்ளன. பின்பக்கத்தில் அமைந்திருக்கும் இரு இருக்கைகளில் ஒன்று அதிக லெக் ரூம் வசதியைக் கொண்டதாக இருக்கின்றது.

3 இருக்கைகள் உடைய ஸ்டியரிங் வீல் இல்லா கார்... இந்த காரின் உட்பகுதியை பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது!!

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் கால்களை நான்றாக நீட்டிக் கொண்டு அமரும் வகையில் அமைப்பை இவ்விருக்கைக் கொண்டிருக்கின்றது. இதேபோன்று, பிற இருக்கைகளும் அதிக சொகுசு வசதிகளைக் கொண்டதாகவே இருக்கின்றன.

3 இருக்கைகள் உடைய ஸ்டியரிங் வீல் இல்லா கார்... இந்த காரின் உட்பகுதியை பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது!!

அதாவது மசாஜ், ஹீட் சிஸ்டம் மற்றும் அதிக காற்றோட்டத்தை வழங்குவது என பல்வேறு சொகுசு வசதிகளை இவ்விருக்கைகள் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இக்காரில் முக்கிய அம்சம் ஒன்று இடம்பெறவில்லை. அதாவது, கார்களின் திசை திருப்புவதைக் கட்டுப்படுத்தக்கூடிய ஸ்டியரிங் வீல் இடம்பெறவில்லை.

3 இருக்கைகள் உடைய ஸ்டியரிங் வீல் இல்லா கார்... இந்த காரின் உட்பகுதியை பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது!!

இது இல்லாததை வைத்து பார்க்கையில் எல்-கான்செப்ட் ஓர் சுய இயக்கம் கொண்ட தானியங்கி சொகுசு கார் என்பது தெரிய வருகின்றது. ரோபோ போன்று செயல்படும் என்பதால் இந்த வசதி வழங்கப்படவில்லை. அதேசமயம், இலக்கு குறித்த தகவலை வாய்ஸ் கமெண்ட் அல்லது ஸ்மார்ட்போன் வாயிலாக வழங்கும் வசதியை நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுபோன்ற பிரம்மிப்பை ஏற்படுத்தும் வசதிகளுடனே விரைவில் உற்பத்தி பணிக்கு இக்கார் செல்ல இருக்கின்றது. இதுமாதிரியான சிறப்பு வசதிகள் கொண்ட வாகன தயாரிப்பில் பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே களமிறங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Hongqi Reveals Three-Seat Limo With No Steering Wheel L-Concept Car 2021 Shanghai Auto Show. Read In Tamil.
Story first published: Wednesday, April 21, 2021, 18:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X