125 கிமீ ரேஞ்ச்... ஹாப் நிறுவனத்தின் அசத்தலான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

ஹாப் நிறுவனத்தின் இரண்டு புதிய மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மின்சார ஸ்கூட்டர்களின் முக்கிய அம்சங்கள், விலை விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

125 கிமீ ரேஞ்ச்... அசத்தலான புதிய ஹாப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

ஹாப் லியோ மற்றும் லைஃப் ஆகிய பெயர்களில் இந்த புதிய மின்சார மாடல்கள் சந்தைக்கு வந்துள்ளன. இந்த இரண்டு மாடல்களும் பேஸிக், ஸ்டான்டர்டு மற்றும் எக்ஸ்டென்டட் என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். மேலும், லியோ என்பது விலை உயர்ந்த மாடலாகவும் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.65,000 எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கும்.

125 கிமீ ரேஞ்ச்... அசத்தலான புதிய ஹாப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

ஹாப் லியோ ஸ்கூட்டரில் 2.7kW மின்சார மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மணிக்கு 60 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. மறுபுறத்தில் லைஃப் ஸ்கூட்டரில் 2kW மின் மோட்டார் உள்ளது. இந்த மாடல் மணிக்கு 50 கிமீ வேகம் வரை செல்லும்.

125 கிமீ ரேஞ்ச்... அசத்தலான புதிய ஹாப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் 180 கிலோ எடை வரை சுமந்து செல்லும். இருக்கைக்கு கீழாக 19.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. லியோ பிரிமீயம் மாடலாக இருக்கும் நிலையில், எல்இடி பகல்நேர விளக்குகள், இரட்டை வண்ண கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

125 கிமீ ரேஞ்ச்... அசத்தலான புதிய ஹாப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டர்களில் சைடு ஸ்டான்டு சென்சார், ரிசர்வ் மோடுடன் கூடிய மூன்று விதமான ரைடிங் மோடுகள், எல்இடி மீட்டர் கன்சோல், யுஎஸ்பி சார்ஜர், ரிமோட் கீ, ஆன்ட்டி தெஃப்ட் அலாரம் மற்றும் ஆன்ட்டி தெஃப்ட் வீல் லாக் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் கியர் ஆப்ஷனும் உள்ளன.

125 கிமீ ரேஞ்ச்... அசத்தலான புதிய ஹாப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இரண்டு ஸ்கூட்டர்களிலும் டியூவல் லித்தியம் அயான் பேட்டரி தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, பேட்டரித் தொகுப்பில் முழுமையாக சார்ஜ் செய்தால் 125 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

125 கிமீ ரேஞ்ச்... அசத்தலான புதிய ஹாப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

கூடுதாக இன்டர்நெட் வசதி மற்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்ப வசதிகளையும் வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பெற முடியும். முதல்கட்டமாக ஜெய்ப்பூரில் ஹாப் நிறுவனம் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. அங்கு சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரிகளை வழங்கும் 5 மையங்களை அமைக்க உள்ளது. பிற மாநிலங்களில் விரைவில் வர்த்தகத்தை விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

125 கிமீ ரேஞ்ச்... அசத்தலான புதிய ஹாப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

பேட்டரி ஸ்வாப் தொழில்நுட்பத்தின் மூலமாக, தேவைப்படும்போது வாடிக்கையாளர்கள் இந்த பேட்டரி ஸ்வாப் மையங்களுக்கு சென்று சார்ஜ் தீர்ந்த பேட்டரிகளை ஸ்கூட்டரிலிருந்து கழற்றி கொடுத்து, சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரிகளை பெற்றுக் கொள்ள முடியும். நடப்பு நிதி ஆண்டுக்குள் 5 மின்சார மாடல்களை சந்தையில் விற்பனை செய்வதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.

125 கிமீ ரேஞ்ச்... அசத்தலான புதிய ஹாப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பட்டியலில் ஹாப் Oxo என்ற எலெக்ட்ரிக் பைக் மாடலும் உண்டு.இந்த பைக்கில் 7.2kW மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கும். மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

Most Read Articles
English summary
Jaipur based HOP Electric Mobility has launched the Leo & Lyf electric scooters in India. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X