மணிக்கு 150கிமீ வேகத்தில் இயங்கும் எலக்ட்ரிக் பைக்கை நீங்களே உருவாக்கலாம்- எப்படினு தெரியனுமா?. வீடியோ!!

யுடியூப் வீடியோக்கள் நம் வாழ்வின் ஓர் அங்கமாக மாறி வருகின்றன. எது தெரியாவிட்டாலும் உடனே யுடியுப்பில் தேடி பார்த்தால் அதனை பற்றி தெரிந்துவிடும் என்கிற எண்ணம் கிட்டத்தட்ட நமது அனைவரிடத்திலும் உள்ளது.

Image Courtsy: James Biggar

மணிக்கு 150கிமீ வேகத்தில் இயங்கும் எலக்ட்ரிக் பைக்கை நீங்களே உருவாக்கலாம்- எப்படினு தெரியனுமா?. வீடியோ!!

குறிப்பாக, நமக்கு கற்றுத்தரும் வகையில் பதிவிடப்படப்படும் வீடியோக்கள் ஏராளம். இருப்பினும் அவற்றில் சில வீடியோக்களை நம்பலாமா வேண்டாமா என்கிற சந்தேகம் ஏற்படுவது உண்டு. அவ்வாறான வீடியோ ஒன்றினை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

இந்த வீடியோவில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒன்றை நாமே சொந்தமாக தயாரிப்பது எவ்வாறு என்பதை காட்டியுள்ளனர். இதனால் நீங்கள் கல்லூரி மாணவராக இருந்து ப்ரோஜெக்ட்டிற்கான வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறீர்கள் என்றாலோ, அல்லது இவி ஸ்டார்ட்அப் ஒன்றை நிறுவ திட்டமிட்டு வருகிறீர்கள் என்றாலோ இந்த வீடியோவை தாராளமாக பார்க்கலாம்.

மணிக்கு 150கிமீ வேகத்தில் இயங்கும் எலக்ட்ரிக் பைக்கை நீங்களே உருவாக்கலாம்- எப்படினு தெரியனுமா?. வீடியோ!!

இவி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தான் ஆட்டோமொபைலின் எதிர்காலம் என கூறப்பட்டு வருகிறது. இந்த வீடியோவுடன் சில CAD எனப்படும் கணினியில் வரையப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் டிசைன் படங்களும் உள்ளன.

மணிக்கு 150கிமீ வேகத்தில் இயங்கும் எலக்ட்ரிக் பைக்கை நீங்களே உருவாக்கலாம்- எப்படினு தெரியனுமா?. வீடியோ!!

இந்த வீடியோவிற்கு மாற்றாக, மோட்டார்சைக்கிளை சொந்தமாக உருவாக்குவது எவ்வாறு என்பது தொடர்பான புத்தகங்கள் முன்பு இருந்தன. இப்போதும் இருக்கின்றன. ஆனால் அவற்றை பெரும்பான்மையானோர் சீண்டுவதே இல்லை.

மணிக்கு 150கிமீ வேகத்தில் இயங்கும் எலக்ட்ரிக் பைக்கை நீங்களே உருவாக்கலாம்- எப்படினு தெரியனுமா?. வீடியோ!!

எல்லாவற்றிற்கும் தொழிற்நுட்ப வளர்ச்சி தான் காரணம். நாம் உருவாக்கும் பொருள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கணினியிலேயே வரைந்து பார்த்து கொள்கின்றனர். புத்தகங்களை போல் சிஏடி கோப்புகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

மணிக்கு 150கிமீ வேகத்தில் இயங்கும் எலக்ட்ரிக் பைக்கை நீங்களே உருவாக்கலாம்- எப்படினு தெரியனுமா?. வீடியோ!!

இதை ஏன் நான் இங்கு கூற வருகிறேன் என்றால், அதிகப்பட்சமாக மணிக்கு 150கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை உருவாக்குவது எப்படி என்பது தொடர்பான விரிவான சிஏடி கோப்புகளை புதுப்பிக்கத்தக்க அமைப்புகள் என்ற தொழிற்நுட்ப நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

மணிக்கு 150கிமீ வேகத்தில் இயங்கும் எலக்ட்ரிக் பைக்கை நீங்களே உருவாக்கலாம்- எப்படினு தெரியனுமா?. வீடியோ!!

இந்த கோப்புகளுக்கான தொகையாக 10 டாலர்கள் (ரூ.724) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் குறித்து இந்த தொழிற்நுட்ப நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தில் ஆராய்ந்து பார்த்ததில், இந்த இவி பைக்கை உருவாக்குவதற்கு எப்படியிருந்தாலும் 5,000 அமெரிக்க டாலர்கள் தேவைப்படுமாம்.

மணிக்கு 150கிமீ வேகத்தில் இயங்கும் எலக்ட்ரிக் பைக்கை நீங்களே உருவாக்கலாம்- எப்படினு தெரியனுமா?. வீடியோ!!

இந்திய ரூபாயில் சொல்ல வேண்டுமென்றால், ரூ.3.62 லட்சம். 32 நிமிடங்கள் ஓடக்கூடிய மேலுள்ள யுடியூப் வீடியோவில் இதற்கான செயல்முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால், இந்த பைக்கை உருவாக்குவதற்கு உங்களுக்கு நிறைய பாகங்கள் தேவைப்படும்.

மணிக்கு 150கிமீ வேகத்தில் இயங்கும் எலக்ட்ரிக் பைக்கை நீங்களே உருவாக்கலாம்- எப்படினு தெரியனுமா?. வீடியோ!!

இவர்கள் உருவாக்கியுள்ள எலக்ட்ரிக் பைக்கில் 72 வோல்ட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் முன்பக்கத்தில் சுஸுகி ஜி.எஸ்.எக்ஸ்-ஆர்750 பைக்கின் ஹெட்லைட் உள்பட முன்பகுதியை அப்படியே பொருத்தியுள்ளனர்.

மணிக்கு 150கிமீ வேகத்தில் இயங்கும் எலக்ட்ரிக் பைக்கை நீங்களே உருவாக்கலாம்- எப்படினு தெரியனுமா?. வீடியோ!!

இந்த வீடியோவையும் சிஏடி கோப்புகளையும் வைத்து எலக்ட்ரிக் பைக்கின் தயாரிப்பு பணிகளில் இறங்கினால் அது எந்த அளவிற்கு சரிப்பட்டு வரும் என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இந்த யுடியூப் வீடியோவின் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles

English summary
How to build your own 150 kmph electric motorcycle DIY instructions for Rs 724.
Story first published: Wednesday, June 2, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X