ஸ்டைல் சும்மா அள்ளுது... பஜாஜ் சேத்தக் அடிப்படையில் உருவாகும் ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் கட்டமைப்புக் கொள்கையில் அட்டகாசமான டிசைன் அம்சங்களுடன் உருவாக்கப்படும் புதிய ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் கான்செப்ட் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக் அடிப்படையில் உருவாகும் புதிய ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு

பஜாஜ் - கேடிஎம் கூட்டணியின் அங்கமாக செயல்பட்டு வரும் ஹஸ்க்வர்னா நிறுவனம் ஆஃப்ரோடு பைக் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமானது. இந்த நிலையில், விரைவில் மின்சார இருசக்கர வாகனங்களை களமிறக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் இ -பிலின் என்ற பெயரில் முதல் எலெக்ட்ரிக் பைக் கான்செப்ட்டை வெளியிட்டது.

பஜாஜ் சேத்தக் அடிப்படையில் உருவாகும் புதிய ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு

இதைத்தொடர்ந்து, தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டையும் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு E-01 என்ற கான்செப்ட் மாடலை வெளியிட்டது. அதனை கிட்டத்தட்ட தயாரிப்பு நிலைக்கு நெருங்கிய கான்செப்ட் மாடலாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக் அடிப்படையில் உருவாகும் புதிய ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு

பஜாஜ் சேத்தக் அடிப்படையில்தான் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டு வருகிறது. ஹஸ்க்வர்னா வெக்டர் என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் வெளியிடப்பட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக் அடிப்படையில் உருவாகும் புதிய ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு

இது கான்செப்ட் மாடலாக சொல்லப்பட்டாலும், மிக விரைவில் தயாரிப்பு நிலைக்கு செல்வதற்கான அம்சங்களுடன் இருப்பது கவனிக்கத்தக்க விஷயம். ஹஸ்க்வர்னா பைக்குகளை போலவே மிகவும் தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் பார்ப்போரின் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வகையில் தோற்றமளிக்கிறது.

பஜாஜ் சேத்தக் அடிப்படையில் உருவாகும் புதிய ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் அதே 48V/6.3Ah பேட்டரி மற்றும் 4080W BLDC மின்மோட்டார்தான் இந்த ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்படும். மேலும், பல முக்கிய உதிரிபாகங்களை இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் பகிர்ந்து கொள்ளும்.

பஜாஜ் சேத்தக் அடிப்படையில் உருவாகும் புதிய ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு

டிசைனில் மட்டுமே முக்கிய வேறுபாடுகள் கொடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதனால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்குவதற்கான முதலீடு பெருமளவு குறையும் என்பதால், விலையும் சவாலாக நிர்ணயிக்க வாய்ப்பு கிடைக்கும்.

பஜாஜ் சேத்தக் அடிப்படையில் உருவாகும் புதிய ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பிரிமீயம் ரக இருசக்கர வாகனங்களுக்காக புதிதாக அமைத்து வரும் தொழிற்சாலையில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிகிறது. இங்குதான் கேடிஎம், ஹஸ்க்வர்னா இருசக்கர வாகனங்களின் உற்பத்தி மாற்றம் செய்யப்பட உள்ளது. அதேபோன்று, மூன்று பிராண்டுகளின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் இங்குதான் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

பஜாஜ் சேத்தக் அடிப்படையில் உருவாகும் புதிய ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு

அடுத்த ஆண்டு புதிய ஹஸ்க்வர்னா வெக்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் 450எக்ஸ், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகிய முன்னணி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
The Husqvarna Vektorr electric scooter has been unveiled. Husqvarna has taken the wraps off its Vektorr electric scooter concept based on the E-01 concept unveiled in 2020. The Vektorr will be based on the bajaj Chetak electric scooter and is likely to be powered by the same electric motor as well. The Husqvarna Vektorr will be built at Bajaj's factory near Pune.
Story first published: Saturday, May 8, 2021, 11:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X