புதிய டீசரை வெளியிட்ட ஹஸ்க்வர்னா!! புதிய பைக்கை பார்க்க தயாராகுங்கள்... பிப்.3ல் அறிமுகமாகிறது!

வித்தியாசமான முறையில் வெறும் சாலையை மட்டுமே காட்டும் டீசர் படம் ஒன்றை ஹஸ்க்வர்னா நிறுவனம் அதன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் கூறவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய டீசரை வெளியிட்ட ஹஸ்க்வர்னா!! புதிய பைக்கை பார்க்க தயாராகுங்கள்... பிப்.3ல் அறிமுகமாகிறது!

ஹஸ்க்வர்னா வெளியிட்டுள்ள டீசரில், சாலைக்கு பின்னால் கட்டங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. இதன் மூலம் இதனை நகரத்தில் இருந்து வெளியே செல்லும் சாலை என்பதை தயாரிப்பு நிறுவனம் கூற வருவது தெரிய வருகிறது.

புதிய டீசரை வெளியிட்ட ஹஸ்க்வர்னா!! புதிய பைக்கை பார்க்க தயாராகுங்கள்... பிப்.3ல் அறிமுகமாகிறது!

ஹஸ்க்வர்னா பிராண்டின் லோகோ படத்திற்கு மேற்புறத்திலும், அதற்கு கீழே தடிமனான எழுத்துகளுடன் ‘Ride your own road'- உங்களுக்கு விருப்பப்பட்ட சாலையில் பயணம் செய்யுங்கள் என்ற வாக்கியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

புதிய டீசரை வெளியிட்ட ஹஸ்க்வர்னா!! புதிய பைக்கை பார்க்க தயாராகுங்கள்... பிப்.3ல் அறிமுகமாகிறது!

அதற்கு மேலே நேரம் குறைந்து கொண்டே இருப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது. டீசரில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தை வைத்து பார்த்தோமேயானால், புதிய மோட்டார்சைக்கிள் பிப்ரவரி 3ல் அறிமுகப்படுத்தப்படும் என்பதை ஹஸ்க்வர்னா நிறுவனம் மறைமுகமாக தெரிவித்துள்ளது.

புதிய டீசரை வெளியிட்ட ஹஸ்க்வர்னா!! புதிய பைக்கை பார்க்க தயாராகுங்கள்... பிப்.3ல் அறிமுகமாகிறது!

இதேபோன்று கேடிஎம் நிறுவனம் சமீபத்தில் 1290 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் பைக்கிற்கான டீசர் படத்தை வெளியிட்டிருந்தது. சென்ற குடியரசு தினத்தில் உலகளவில் அறிமுகப்படுத்த இந்த 1290சிசி கேடிஎம் பைக்கின் டீசரில் அட்வென்ச்சர் பைக் என்பதால் காட்டு பகுதியில் அமைந்த நெடுஞ்சாலை காட்டப்பட்டிருந்தது.

புதிய டீசரை வெளியிட்ட ஹஸ்க்வர்னா!! புதிய பைக்கை பார்க்க தயாராகுங்கள்... பிப்.3ல் அறிமுகமாகிறது!

சரி மீண்டும் ஹஸ்க்வர்னா பைக்கின் டீசருக்கு வருவோம். நமக்கு தெரிந்தவரை இந்த டீசர் படம் கேடிஎம் 125 ட்யூக்கிற்கு இணையான சிறிய என்ஜினை கொண்ட ஹஸ்க்வர்னா பைக்கை குறிக்கலாம். அதற்காக ஸ்வார்ட்பிளேன் 201 அல்லது விட்பிளேன் 201 பைக்காக இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள்.

புதிய டீசரை வெளியிட்ட ஹஸ்க்வர்னா!! புதிய பைக்கை பார்க்க தயாராகுங்கள்... பிப்.3ல் அறிமுகமாகிறது!

ஏனெனில் டீசரில் குறிப்பிடப்பட்டுள்ள ‘உங்களுக்கு விருப்பப்பட்ட சாலையில் பயணம் செய்யுங்கள்' என்ற வாக்கியத்தை நாம் மறந்துவிட கூடாது. ஏனென்றால் இந்த வாக்கியங்கள் தொலைத்தூர பயணங்களுக்கான நெஞ்சாலைகளையும் குறிக்கின்றன.

புதிய டீசரை வெளியிட்ட ஹஸ்க்வர்னா!! புதிய பைக்கை பார்க்க தயாராகுங்கள்... பிப்.3ல் அறிமுகமாகிறது!

ஸ்வார்ட்பிளேன் 201 மற்றும் விட்பிளேன் 201 மோட்டார்சைக்கிள்கள் சிறிய அளவு என்ஜினால் தொலைத்தூர பயணங்களுக்கு அவ்வளவு ஏற்றதாக இருக்காது. இதனால் அனைத்து விதமான சாலைகளுக்கு ஏற்ற நார்டன் 901 பைக் ஹஸ்க்வர்னா பிராண்டில் இருந்து அறிமுகமாகும் என எதிர்பார்க்கிறோம்.

புதிய டீசரை வெளியிட்ட ஹஸ்க்வர்னா!! புதிய பைக்கை பார்க்க தயாராகுங்கள்... பிப்.3ல் அறிமுகமாகிறது!

நார்டன் 901 பைக்காக இருக்கும் என நாம் யூகிப்பதற்கு சில காரணங்களுள் உள்ளன. அதாவது, சமீபத்தில் நார்டன் 901 பைக்கின் தயாரிப்பு வெர்சனின் படம் இணையத்தில் கசிந்திருந்தது. அதேபோல் கடந்த டிசம்பர் மாதத்தில் கேடிஎம் 890 அட்வென்ச்சர் பைக்கை அடிப்படையாக கொண்ட பைக் ஒன்று சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

புதிய டீசரை வெளியிட்ட ஹஸ்க்வர்னா!! புதிய பைக்கை பார்க்க தயாராகுங்கள்... பிப்.3ல் அறிமுகமாகிறது!

கிட்டத்தட்ட வடிவமைப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்த நிலையில் இருந்த இந்த சோதனை பைக்கில் உலோக பேஷ் தட்டு, ஹெட்லைட் உள்ளிட்டவற்றை பார்க்க முடிந்தது. நம் இந்திய சந்தையை பொறுத்தவரையில், நாம் இன்னும் ஸ்வார்ட்பிளேன் 401 மற்றும் விட்பிளேன் 401 பைக்குகளைதான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

Most Read Articles

English summary
What’s With Husqvarna’s New Teaser
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X