இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு சூப்பரான பைக்கா? டிவிஎஸ் ரைடர் 125 பைக் வெறித்தனமா இருக்கு!

இந்தியாவில் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிவிஎஸ் ரைடர் 125 பைக் பற்றிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு சூப்பரான பைக்கா? டிவிஎஸ் ரைடர் 125 பைக் வெறித்தனமா இருக்கு!

இந்தியாவை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் புத்தம் புதிய பைக் ஒன்றை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கிற்கு ரைடர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது 125 சிசி பைக் ஆகும். பிரீமியம் கம்யூட்டர் ரக பைக்காக டிவிஎஸ் ரைடர் உருவாக்கப்பட்டுள்ளது. ரைடர் பைக் மூலம் இளைஞர்களை கவர்வதற்கு டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு சூப்பரான பைக்கா? டிவிஎஸ் ரைடர் 125 பைக் வெறித்தனமா இருக்கு!

அதற்கு ஏற்ற வகையில் டிவிஎஸ் ரைடர் பைக் கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் டிசைனை பார்க்கும் யாரும், இது 125 சிசி பைக் என்பதை நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு சிறப்பான வகையில் ரைடர் பைக்கை டிவிஎஸ் நிறுவனம் டிசைன் செய்துள்ளது. இந்த பைக் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு சூப்பரான பைக்கா? டிவிஎஸ் ரைடர் 125 பைக் வெறித்தனமா இருக்கு!

டிசைன்

டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் முக்கியமான அம்சமே அதன் டிசைன்தான். 160 மற்றும் 180 சிசி பைக்குகளை போன்று டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் டிசைன் இருக்கிறது. எனவே இளைஞர்களை கவர்வதில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் டிசைன்தான் முக்கிய பங்காற்றும். முரட்டுத்தனமான எரிபொருள் டேங்க்கை இந்த பைக் பெற்றுள்ளது.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு சூப்பரான பைக்கா? டிவிஎஸ் ரைடர் 125 பைக் வெறித்தனமா இருக்கு!

மேலும் இந்த பைக்கின் ஹெட்லேம்ப்களும் ஸ்டைலாக இருக்கின்றன. அத்துடன் ஸ்பிளிட் சீட் வசதியும் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ரைடர் 125 பைக்கை சாலையில் ஓட்டி சென்றால், அதன் டிசைன் நிச்சயமாக அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு சூப்பரான பைக்கா? டிவிஎஸ் ரைடர் 125 பைக் வெறித்தனமா இருக்கு!

வண்ண தேர்வுகள்

டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் மொத்தம் 4 வண்ண தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஃபியரி யெல்லோ, ஸ்ட்ரைக்கிங் ரெட், ப்ளாசிங் ப்ளூ மற்றும் விக்கெட் பிளாக் ஆகியவைதான் அந்த 4 வண்ண தேர்வுகள். இந்த வண்ணங்கள் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கிற்கு சிறப்பான லுக்கை வழங்குகின்றன. இதுவும் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு சூப்பரான பைக்கா? டிவிஎஸ் ரைடர் 125 பைக் வெறித்தனமா இருக்கு!

இன்ஜின் & கியர் பாக்ஸ்

டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில், 124.8 சிசி, மூன்று-வால்வு, ஏர் மற்றும் ஆயில் கூல்டு, ஃப்யூயல்-இன்ஜெக்டட், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 11.38 பிஎஸ் பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 11.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு சூப்பரான பைக்கா? டிவிஎஸ் ரைடர் 125 பைக் வெறித்தனமா இருக்கு!

வசதிகள்

டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் கியர்-ஷிஃப்ட் இன்டிகேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் நெகடிவ் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இருக்கைக்கு அடியில் இடவசதி, ஆப்ஷனல் யூஎஸ்பி சார்ஜர், ஆப்ஷனல் டிவிஎஸ் ஸ்மார்க்எக்ஸ்கனெக்ட் தொழில்நுட்ப வசதி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு சூப்பரான பைக்கா? டிவிஎஸ் ரைடர் 125 பைக் வெறித்தனமா இருக்கு!

மேலும் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லைட் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஈக்கோ மற்றும் பவர் ஆகிய ரைடிங் மோடுகளையும் டிவிஎஸ் ரைடர் 125 பைக் பெற்றுள்ளது. இதில், ஈக்கோ மோடு மைலேஜிற்கு உகந்தது. அதே சமயம் பவர் மோடு பிக்-அப் மற்றும் டாப் ஸ்பீடை அதிகரிக்கும்.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு சூப்பரான பைக்கா? டிவிஎஸ் ரைடர் 125 பைக் வெறித்தனமா இருக்கு!

போட்டியாளர்கள்

ஹீரோ கிளாமர், ஹோண்டா ஷைன் மற்றும் பஜாஜ் பல்சர் 125 உள்ளிட்ட பைக்குகள் உடன் டிவிஎஸ் ரைடர் 125 நேரடியாக போட்டியிடும். இந்த பைக்குகளுக்கு டிவிஎஸ் ரைடர் 125 விற்பனையில் கடும் சவால் அளிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக தென்படுகின்றன. அந்த அளவிற்கு டிவிஎஸ் ரைடர் 125 பைக் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு சூப்பரான பைக்கா? டிவிஎஸ் ரைடர் 125 பைக் வெறித்தனமா இருக்கு!

வேரியண்ட்கள் & விலை

தற்போதைய நிலையில் டிவிஎஸ் ரைடர் 125 பைக் மொத்தம் 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில், ட்ரம் பிரேக் வேரியண்ட் ஒன்றாகும். இதன் விலை 77,500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றொன்று முன் பகுதியில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட வேரியண்ட் ஆகும். இதன் விலை 85,469 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு சூப்பரான பைக்கா? டிவிஎஸ் ரைடர் 125 பைக் வெறித்தனமா இருக்கு!

இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு டிவிஎஸ் ரைடர் 125 மிக சிறப்பான பைக்காக பார்க்கப்படுகிறது. டிவிஎஸ் ரைடர் 125 பைக்கை நாங்கள் ஏற்கனவே ஓட்டி பார்த்து விட்டோம். அப்போது இந்த பைக் எங்களை வெகுவாக கவர்ந்தது. செயல்திறனும் கூட இது உண்மையில் 125 சிசி பைக்தானா? என்ற சந்தேகம் எழும் அளவிற்கு சிறப்பாக உள்ளது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Important details about tvs raider 125 premium commuter motorcycle
Story first published: Saturday, September 18, 2021, 20:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X