டக்கார் ராலியில் இளம் இந்திய பைக் பந்தய வீரர் ஹரீத் நோவா அசத்தல்!

கடந்த இரண்டு வாரங்களாக சவூதி அரேபியாவில் நடந்து வந்த டக்கார் ராலி இன்று நிறைவு பெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பைக் பிரிவில் இளம் இந்திய வீரர் ஹரீத் நோவா சிறப்பாக நிறைவு செய்ததுடன், தர வரிசை பட்டியலிலும் முக்கிய இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார்.

டக்கார் ராலியில் இளம் இந்திய பைக் பந்தய வீரர் ஹரீத் நோவா அசத்தல்!

இன்று டக்கார் ராலியின் 12வது மற்றும் கடைசி ஸ்டேஜ் பந்தயம் நடந்தது. இதில், ஹரீத் நோவா 19வது இடத்தை பிடித்து வியக்க வைத்தார். மேலும், டக்கார் ராலியில் முதல் 20 இடங்களுக்குள் வந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ஹரீத் நோவா பெற்றிருக்கிறார்.

மேலும், ஒட்டுமொத்த பைக் பிரிவில் 20வது இடத்தை பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது. டிவிஎஸ் அணி ஸ்பான்சர் செய்த ஷெர்கோ அணி சார்பில் ஹரீத் நோவா பங்கேற்றார்.

டக்கார் ராலியில் இளம் இந்திய பைக் பந்தய வீரர் ஹரீத் நோவா அசத்தல்!

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முன்னணி ராலி பைக் பந்தய வீரர்கள் சி.எஸ்.சந்தோஷ் விபத்தில் காயமடைந்து விலகிய நிலையில், ஹரீத் நோவா சிறப்பான இடத்தை பிடித்து நாட்டிற்கு பெருமை தேடி தந்துள்ளார். உலகின் மிகவும் கடினமானது, சவால் நிறைந்ததுமாக கருதப்படும் டக்கார் ராலியில் குறிப்பிடத்தக்க இடத்தை ஹரீத் நோவா பெற்றிருப்பது இந்திய மோட்டார் பந்தய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டக்கார் ராலியில் இளம் இந்திய பைக் பந்தய வீரர் ஹரீத் நோவா அசத்தல்!

தனிநபர் பைக் பிரிவில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய வீரர் ஆசிஷ் ராவ்ரேன் விபத்தில் சிக்கி இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், மீண்டும் டக்கார் ராலியில் பங்கேற்றார். அவர் எக்ஸ்பீரியன்ஸ் பிரிவில் கலந்து கொண்டு நிறைவு செய்தார்.

டக்கார் ராலியில் இளம் இந்திய பைக் பந்தய வீரர் ஹரீத் நோவா அசத்தல்!

இந்த நிலையில், டக்கார் ராலியின் பைக் பிரிவில் மான்ஸ்ட்டர் எனெர்ஜி ஹோண்டா அணி வீரர் கெவின் பெனவிட்ஸ் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அர்ஜென்டினாவை சேர்ந்த கெவின் 5வது முறையாக டக்கார் ராலியில் பங்கேற்ற நிலையில், அவர் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.

டக்கார் ராலியில் இளம் இந்திய பைக் பந்தய வீரர் ஹரீத் நோவா அசத்தல்!

அதே அணியை சேர்ந்த மற்றொரு வீரர் ரிக் பிராபெக் இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்த ஆண்டு டக்கார் ராலி பைக் பந்தய பிரிவில் பெரும்பான்மையான ஸ்டேஜ்களில் ஹோண்டா அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். மூன்றாவது இடத்தை கேடிஎம் ஃபேக்டரி டீம் வீரர் சாம் சுந்தர்லேண்ட் பிடித்தார்.

டக்கார் ராலியில் இளம் இந்திய பைக் பந்தய வீரர் ஹரீத் நோவா அசத்தல்!

இந்தியாவின் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்களும் பைக் பிரிவில் முதல் 15 இடங்களுக்குள் வந்து அசத்தி உள்ளனர். டக்கார் ராலியை வெற்றிகரமாக நிறைவு செய்த பெருமையையும் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி பெற்றுள்ளது. ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்கள் ஜாக்கியம் ரோட்ரிக்கஸ் 11வது இடத்தையும், செபாஸ்டியன் பஹ்லர் 14வது இடத்தையும் பிடித்தனர்.

டக்கார் ராலியில் இளம் இந்திய பைக் பந்தய வீரர் ஹரீத் நோவா அசத்தல்!

டக்கார் ராலியில் துயர சம்பவமும் நிகழ்ந்தது. டக்கார் ராலியின் 7வது ஸ்டேஜ் பந்தயத்தின்போது விபத்தில் சிக்கி படுகாயமைடந்த பிரான்ஸ் நாட்டு வீரர் பியரி செர்பின் இன்று மரணமடைந்தார். கடந்த 5 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், விமானம் மூலமாக சவூதி அரேபியாவிலிருந்து பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவர் மரணமடைந்ததாகவும், அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் டக்கார் ராலி அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Indian rider Harith Noah has finished 20th In The 2021 Dakar Rally.
Story first published: Friday, January 15, 2021, 20:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X