முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் கபிரா எலக்ட்ரிக் பைக்குகள்!! பிப்ரவரியில் அறிமுகம்

கபிரா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அடுத்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் கபிரா எலக்ட்ரிக் பைக்குகள்!! பிப்ரவரியில் அறிமுகம்

எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான கபிரா மொபைலிட்டி கேஎம்3000 மற்றும் கேஎம் 4000 என்ற இரு மோட்டார்சைக்கிள்களை வருகிற 2021 பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் கபிரா எலக்ட்ரிக் பைக்குகள்!! பிப்ரவரியில் அறிமுகம்

அதற்கு முன்னதாக தற்போது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த இரு மோட்டார்சைக்கிள்கள் ரேஞ்சில் சிறந்தவையாக காம்பி-ப்ரேக்குகள் மற்றும் விரைவு சார்ஜர் உடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக கபிரா நிறுவனம் தெரிவிக்கிறது.

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் கபிரா எலக்ட்ரிக் பைக்குகள்!! பிப்ரவரியில் அறிமுகம்

வழக்கமான எரிபொருள் என்ஜின் பைக்குகளுக்கு எந்த விதத்திலும் இவை ஸ்டைலில் சளைத்தது இல்லை என்பதும் காற்று இயக்கவியலுக்கு ஏற்றவாறு இந்த எலக்ட்ரிக் பைக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதையும் படங்களை பார்க்கும்போது தெரிய வருகிறது.

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் கபிரா எலக்ட்ரிக் பைக்குகள்!! பிப்ரவரியில் அறிமுகம்

இவை இரண்டிற்கும் சாலையோர உதவிகளையும் (Roadside Assistance - RSA) வழங்க கபிரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இவற்றில் பொருத்தப்படும் பேட்டரி நெருப்பில் பாதிப்படையாது என்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் கபிரா எலக்ட்ரிக் பைக்குகள்!! பிப்ரவரியில் அறிமுகம்

இந்த பைக்குகளில் டெல்டாஇவி பிஎல்டிசி மோட்டாரில் அவற்றின் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் பைக்கை இயக்க முடியும்.

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் கபிரா எலக்ட்ரிக் பைக்குகள்!! பிப்ரவரியில் அறிமுகம்

பேட்டரியை சிங்கிள்-முழு சார்ஜில் 150கிமீ தூரம் வரையில் இயக்க முடியும் என கபீரா நிறுவனம் கூறுகிறது. கேஎம்3000, எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்காகும். அதுவே கேஎம்4000, இ-ஸ்ட்ரீட் பைக்காக விற்பனை செய்யப்படவுள்ளது.

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் கபிரா எலக்ட்ரிக் பைக்குகள்!! பிப்ரவரியில் அறிமுகம்

கோவாவை சேர்ந்த கபிரா மொபைலிட்டி நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் மொத்தம் 6 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்சிப்படுத்தி இருந்தது. இவை அனைத்தும் முழுக்க இளம் தலைமுறையினருக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு இருந்தன. ஏற்கனவே விற்பனையை துவங்கிவிட்ட இவை இரண்டிற்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Kabira Electric Motorcycles India Launch Next Month, Bookings Open.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X