டெலிவரி துறைக்கான மின்சார ஸ்கூட்டர்! இதுவே இந்தியாவின் முதல் ஹை-ஸ்பீடு வர்த்தக இ-ஸ்கூட்டர்.. மிரட்டும் ரேஞ்ஜ்!

இந்தியாவிற்கான முதல் அதி-வேக வர்த்தக மின்சார இரு சக்கர வாகனத்தை கபிரா மொபிலிட்டி நிறுவனமும் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டெலிவரி துறைக்கான மின்சார ஸ்கூட்டர்! இதுவே இந்தியாவின் முதல் ஹை-ஸ்பீடு வர்த்தக இ-ஸ்கூட்டர்... இதோட ரேஞ்ஜும் மிரட்டுது!

கபிரா மொபிலிட்டி நிறுவனம் ஹெர்மெஸ் 75 எனும் புதுமுக மின்சார இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. வர்த்தக துறையில் பயன்படும் நோக்கில் இவ்வாகனத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஓர் அதி-வேக திறன் கொண்ட மின்சார வாகனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டெலிவரி துறைக்கான மின்சார ஸ்கூட்டர்! இதுவே இந்தியாவின் முதல் ஹை-ஸ்பீடு வர்த்தக இ-ஸ்கூட்டர்... இதோட ரேஞ்ஜும் மிரட்டுது!

ஆகையால், நாட்டின் முதல் அதி-வேக வர்த்தக மின்சார வாகனமாக என்ற பட்டத்தை இது சூடியுள்ளது. ஹெர்மெஸ் 75 மின்சார ஸ்கூட்டருக்கு ரூ. 89,600 என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது கோவா எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த விலையிலேயே வர்த்தக வாகன சந்தையை ஒரு கை பார்க்க ஹெர்மெஸ் 75 நாட்டில் களமிறங்கியிருக்கின்றது.

டெலிவரி துறைக்கான மின்சார ஸ்கூட்டர்! இதுவே இந்தியாவின் முதல் ஹை-ஸ்பீடு வர்த்தக இ-ஸ்கூட்டர்... இதோட ரேஞ்ஜும் மிரட்டுது!

இந்த மின்சார வாகனத்தை மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 100கிமீ , 120 கிமீ மற்றும் 80கிமீ ஆகிய ரேஞ்ஜ் தேர்வுகளிலேயே ஹெர்மெஸ் 75 விற்பனைக்குக் கிடைக்க உள்ளது. அதேசமயம், இந்த வாகனத்தை வர்த்தக ரீதியாக இயங்கக் கூடிய நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

டெலிவரி துறைக்கான மின்சார ஸ்கூட்டர்! இதுவே இந்தியாவின் முதல் ஹை-ஸ்பீடு வர்த்தக இ-ஸ்கூட்டர்... இதோட ரேஞ்ஜும் மிரட்டுது!

குறிப்பாக, அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளன. இதற்கேற்ப பிரத்யேக உருவ அமைப்பே இவ்வாகனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் பெட்டி போன்ற அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது அத்தியாவசிய பொருட்களை பத்திரமாக ஏற்றி செல்ல உதவும்.

டெலிவரி துறைக்கான மின்சார ஸ்கூட்டர்! இதுவே இந்தியாவின் முதல் ஹை-ஸ்பீடு வர்த்தக இ-ஸ்கூட்டர்... இதோட ரேஞ்ஜும் மிரட்டுது!

இத்துடன், இப்பெட்டியில் ஓட்டுநர் சாய்ந்து ஓட்டும் வகையில் குஷன் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது ஓட்டுநருக்கு நிறுவனம் வழங்கியிருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து, ரைடருக்கான பயன்படும் வகையில் பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் இவ்வாகனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

டெலிவரி துறைக்கான மின்சார ஸ்கூட்டர்! இதுவே இந்தியாவின் முதல் ஹை-ஸ்பீடு வர்த்தக இ-ஸ்கூட்டர்... இதோட ரேஞ்ஜும் மிரட்டுது!

ஹெர்மெஸ் 75 மின்சார வாகனத்தில் 60V40AH லித்தியம் அயன் பேட்டரியே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் தேவைப்படும். அவ்வாறு இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 120கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்துடன், 4000வாட் திறனை வெளிப்படுத்தக்கூடிய 2,500 வாட் டெல்டா இவி மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

டெலிவரி துறைக்கான மின்சார ஸ்கூட்டர்! இதுவே இந்தியாவின் முதல் ஹை-ஸ்பீடு வர்த்தக இ-ஸ்கூட்டர்... இதோட ரேஞ்ஜும் மிரட்டுது!

இது அதிகபட்சமாக மணிக்கு 80கிமீ பயணிக்க உதவும். இந்த வேகத்தில் இயங்கக் கூடிய வர்த்தக மின்சார வாகன இருசக்கர வாகனம் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் இந்தியாவின் அதி-வேக மின்சார ஸ்கூட்டராக இது பார்க்கப்படுகின்றது.

டெலிவரி துறைக்கான மின்சார ஸ்கூட்டர்! இதுவே இந்தியாவின் முதல் ஹை-ஸ்பீடு வர்த்தக இ-ஸ்கூட்டர்... இதோட ரேஞ்ஜும் மிரட்டுது!

இந்தியாவில் அதி வேகமாக இ-வர்த்தக பிரிவில் பங்களிப்பை வழங்கும் வகையில் டெலிவரி துறைக்கான வாகனத்தை கபிரா களமிறக்கியிருக்கின்றது. இது ரைடர்களுக்கும், டெலிவரி நிறுவனங்களுக்கும் அதிக லாபத்தை ஈட்டிக் கொடுக்க உதவும் என நிறுவனம் அதிக நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Kabira Launched Hermes 75 Electric Scooter In India With 120KM Range. Read In Tamil.
Story first published: Tuesday, April 13, 2021, 12:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X