தமிழகத்தில் இருந்து பறந்த நிதியுதவி! கெத்தாக போஸ் கொடுத்து வாங்கிய கர்நாடகா முதலமைச்சர்... செம்ம மாஸ் சம்பவம்!

தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு பெரும் தொகையை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

தமிழகத்தில் இருந்து பறந்த நிதியுதவி... கெத்தாக போஸ் கொடுத்து வாங்கிய கர்நாடகா முதலமைச்சர்... செம்ம மாஸ் சம்பவம்!!

கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மிகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை மிக அதிகளவில் தென்படுகின்றது. அதிலும், இறப்போரின் எண்ணிக்கை மிகக் கடுமையாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது.

தமிழகத்தில் இருந்து பறந்த நிதியுதவி... கெத்தாக போஸ் கொடுத்து வாங்கிய கர்நாடகா முதலமைச்சர்... செம்ம மாஸ் சம்பவம்!!

எனவே, நாட்டின் எந்த பக்கம் திரும்பினாலும் மரண ஓலங்கள் ஒளித்த வண்ணம் இருக்கின்றது. தொற்று பரவலின் வேகம் குறைந்து காணப்பட்டாலும், இறப்புகள் முன்பைக் காட்டிலும் அதிக அளவில் ஏற்படுவதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இத்தகைய அவல நிலையில் இருந்து மீள வேண்டும் என்பதில் இருந்து மத்திய, மாநில அரசுகள் மிக உறுதியாக இருக்கின்றன.

தமிழகத்தில் இருந்து பறந்த நிதியுதவி... கெத்தாக போஸ் கொடுத்து வாங்கிய கர்நாடகா முதலமைச்சர்... செம்ம மாஸ் சம்பவம்!!

இந்த மாதிரியான சூழ்நிலையில் அரசுகளுக்கு உதவியளிக்கும் விதமாக பொதுமக்கள் தொடங்கி பல முக்கிய பிரபலங்கள் வரை நிதியுதவியை வழங்கி வருகின்றனர். தொடர்ந்து, வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன.

தமிழகத்தில் இருந்து பறந்த நிதியுதவி... கெத்தாக போஸ் கொடுத்து வாங்கிய கர்நாடகா முதலமைச்சர்... செம்ம மாஸ் சம்பவம்!!

அந்தவகையில், பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார், நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு கோடி ரூபாய் நிதியுதவி மற்றும் மருத்துவ உபகரணங்களை உதவியாக வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் இருந்து பறந்த நிதியுதவி... கெத்தாக போஸ் கொடுத்து வாங்கிய கர்நாடகா முதலமைச்சர்... செம்ம மாஸ் சம்பவம்!!

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ரூ. 1 கோடி மதிப்பிலான காசோலையை கொரோனா நிவாரண நிதியாக கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் பிஎஸ். எடியூரப்பாவிடம் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து பறந்த நிதியுதவி... கெத்தாக போஸ் கொடுத்து வாங்கிய கர்நாடகா முதலமைச்சர்... செம்ம மாஸ் சம்பவம்!!

இதுதவிர, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 300 ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகள் ஆகியவற்றையும் டிவிஎஸ் மோட்டார்ஸ் வழங்கியிருப்பதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து பறந்த நிதியுதவி... கெத்தாக போஸ் கொடுத்து வாங்கிய கர்நாடகா முதலமைச்சர்... செம்ம மாஸ் சம்பவம்!!

இந்த கொரோனா நிவாரண நிதி மற்றும் மருத்துவ உபகரணங்களை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் ரிலேசன்ஷிப் பிரிவின் துணைத் தலைவர் விஆர் கருணாகர ரெட்டி மற்றும் நிறுவனத்தின் இணை துணைத் தலைவர் சேதுராமன் ஆகியோர் கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பாவை நேரில் சந்தித்து வழங்கினர்.

தமிழகத்தில் இருந்து பறந்த நிதியுதவி... கெத்தாக போஸ் கொடுத்து வாங்கிய கர்நாடகா முதலமைச்சர்... செம்ம மாஸ் சம்பவம்!!

தமிழகத்தின் ஓசூரை தலைமையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம், டிவிஎஸ். இந்நிறுவனம் கொரோனா கால பேரிடரில் லேசான உதவிகளை அரசுகளுக்கு வழங்கும் விதமாக இந்த நிவாரண நிதியை அளித்துள்ளது. கடந்த ஆண்டும் இதேபோன்று கணிசமான உதவி நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொண்டது குறிப்பிடத்தகுந்தது.

தமிழகத்தில் இருந்து பறந்த நிதியுதவி... கெத்தாக போஸ் கொடுத்து வாங்கிய கர்நாடகா முதலமைச்சர்... செம்ம மாஸ் சம்பவம்!!

மிக சமீபத்தில்தான் இந்நிறுவனம் 40 கோடி ரூபாய் மதிப்பிலான கொரோனா வைரஸ் நிவாரண நிதியை தனது அறக்கட்டளை பிரிவின் வாயிலாக வழங்க இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது. இந்த தொகையைக் கொண்டு ஆக்சிஜன் சப்ளை, பிபிஇ கருவிகள், மருத்துவ உபகரணம் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை நாடு முழுவதிற்கும் வழங்க இருப்பதாகவும் கூறியிருந்தது.

தமிழகத்தில் இருந்து பறந்த நிதியுதவி... கெத்தாக போஸ் கொடுத்து வாங்கிய கர்நாடகா முதலமைச்சர்... செம்ம மாஸ் சம்பவம்!!

மேலே கூறியது குறித்த கூடுதல் தகவலை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும். இம்மாதிரியான சூழ்நிலையிலேயே ரூ. 1 கோடி நிவாரண தொகை மற்றும் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அண்டை மாநிலம் கர்நாடகாவிற்கு டிவிஎஸ் மோட்டார் வழங்கியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Karnataka CM BS Yediyurappa Receives COVID-19 Relief Fund From TVS Motor Company. Read In Tamil.
Story first published: Friday, May 21, 2021, 16:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X