மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?

கவாஸாகியின் சமீபத்திய அறிமுகமான நிஞ்சா 300 பைக் வெவ்வேறான நிறங்களில் இந்திய டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றை வந்தடைந்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?

இந்தியா மட்டுமின்றி உலகளவில் கவாஸாகியின் நிஞ்சா பைக்குகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதன் காரணமாக மிகுந்த நம்பிக்கை உடன் நிஞ்சா 300 பைக்கை ரூ.3.18 லட்சம் என்ற விலையில் கவாஸாகி நிறுவனம் சமீபத்தில் நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியது.

மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?

இது இதன் முந்தைய பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.20,000 அதிகமாகும். இந்த நிலையில் தற்போது பேபி நிஞ்சா என அழைக்கப்படும் புதிய நிஞ்சா 300 பைக் இந்திய டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது.

அவ்வாறான டீலர்ஷிப் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிஞ்சா 300 பைக்குகளை தான் மேலே உள்ள, வினோத் நரேஷன் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கிறீர்கள். மொத்த தோற்றத்தில் முந்தைய பிஎஸ்4 வெர்சனுக்கும் புதிய பிஎஸ்6 நிஞ்சா 300 பைக்கிற்கும் பெரிய அளவில் வித்தியாசமில்லை.

மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?

சில பகுதிகளில் சிறிய சிறிய காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளன. கவாஸாகி நிஞ்சா பைக்கில் இரட்டை-பேட் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், பருமனான பெட்ரோல் டேங்க், பிளவுப்பட்ட வடிவில் இருக்கைகள், மேல் நோக்கி வளைக்கப்பட்ட சைலன்சரின் சூட்டில் இருந்து காக்க க்ரோம் பாதுகாப்பான் மற்றும் டூம்-இன் கீழ் பகுதியில் துணை விளக்குகள் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?

முன் சக்கரத்திற்கு பின்பகுதியில் கவாஸாகியின் பிரபலமான இசட்எக்ஸ்-14ஆர் பைக்கில் வழங்கப்படுவதை போன்று காற்று செல்வதற்கு பெரிய அளவில் துளைகள் நிஞ்சா 300 பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வீடியோவின் மூலம் இந்த பிஎஸ்6 நிஞ்சா பைக் லைம் க்ரீன், கேண்டி லைம் க்ரீன் மற்றும் எபோனி என்ற மூன்று விதமான நிறங்களில் விற்பனை செய்யப்படவுள்ளதை உறுதிப்படுத்த முடிகிறது.

மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?

இதில் மற்ற இரு பெயிண்ட் தேர்வுகளில் கவாஸாகி பைக்குகளுக்கே உரிதான பச்சை மற்றும் கருப்பு நிறங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தாலும், லைம் க்ரீன் பெயிண்ட் தேர்வில் என்ஜின் பகுதியில் வெள்ளை நிற பேனல்கள் மற்றும் ஆங்காங்கே சிவப்பு நிறங்களையும் பார்க்க முடிகிறது.

மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?

ட்யுப் டைமண்ட் ஸ்டீல் ஃப்ரேமில் தயாரிக்கப்பட்டுள்ள நிஞ்சா 300 ஒரு முழு ஸ்போர்ட்ஸ் பைக் என்பதால் பைக்கின் மொத்த கவர்ச்சியின் முன்பக்கத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் பேனல்கள் அவ்வளவாக இல்லை. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு பிஎஸ்6-க்கு இணக்கமான 296சிசி, இணையான-இரட்டை, லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?

அதிகப்பட்சமாக 11,000 ஆர்பிஎம்-ல் 38.4 பிஎச்பி மற்றும் 10,000 ஆர்பிஎம்-ல் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மென்மையான மற்றும் விரைவான கியர் மாற்றத்திற்காக ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Ninja 300 Arrives At Dealer Showroom, Here First Look Walkaround.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X