கவாஸாகி பைக்குகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்கிறது... பழைய மற்றும் புதிய விலைகளின் பட்டியல் இங்கே...

கவாஸாகி பைக்குகளின் விலை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கவாஸாகி பைக்குகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்கிறது... பழைய மற்றும் புதிய விலைகளின் பட்டியல் இங்கே...

வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக கவாஸாகி இந்தியா நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. அத்துடன் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள தனது மோட்டார்சைக்கிள்களின் புதிய விலைகளையும் கவாஸாகி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கவாஸாகி பைக்குகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்கிறது... பழைய மற்றும் புதிய விலைகளின் பட்டியல் இங்கே...

ஆனால் கவாஸாகி நிறுவனத்தின் அனைத்து மோட்டார்சைக்கிள்களின் விலையும் உயரப்போவதில்லை. சில மோட்டார்சைக்கிள்களின் விலை உயரும் நிலையில், ஒரு சில மோட்டார்சைக்கிள்களின் விலை உயராமல் அப்படியே இருக்கப்போகிறது. இதன்படி சமீபத்தில் விற்பனைக்கு வந்த புதிய நின்ஜா 300 பைக், விலை உயர்வால் பாதிக்கப்படப்போவதில்லை.

கவாஸாகி பைக்குகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்கிறது... பழைய மற்றும் புதிய விலைகளின் பட்டியல் இங்கே...

அதேபோல் நின்ஜா இஸட்எக்ஸ்-10ஆர், இஸட் ஹெச்2, இஸட் ஹெச்2 எஸ்இ, கேஎல்எக்ஸ்110, கேஎல்எக்ஸ்140ஜி ஆகிய பைக்குகளின் விலையும் உயரப்போவதில்லை. ஆனால் மற்ற பைக்குகளின் விலை உயரவுள்ளது. கவாஸாகி மோட்டார்சைக்கிள்களின் பழைய விலையையும், புதிய விலையையும் பின்வரும் ஸ்லைடர்களில் பார்க்கலாம்.

கவாஸாகி பைக்குகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்கிறது... பழைய மற்றும் புதிய விலைகளின் பட்டியல் இங்கே...

நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல் கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் விலை உயராது. 3.18 லட்ச ரூபாய் என்ற பழைய விலையிலேயே தொடரும். ஆனால் கவாஸாகி நின்ஜா 650 பைக்கின் விலை 6.39 லட்ச ரூபாயில் இருந்து 6.54 லட்ச ரூபாயாக உயரவுள்ளது. அதேபோல் கவாஸாகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் பைக்கின் விலை 11.04 லட்ச ரூபாயில் இருந்து 11.29 லட்ச ரூபாயாக உயர்கிறது.

கவாஸாகி பைக்குகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்கிறது... பழைய மற்றும் புதிய விலைகளின் பட்டியல் இங்கே...

ஆனால் கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்-10ஆர் பைக்கின் விலை உயராமல், 14.99 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே தொடரும். எனினும் கவாஸாகி இஸட் 650 பைக்கின் விலை 6.04 லட்ச ரூபாயில் இருந்து 6.18 லட்ச ரூபாயாக உயர்கிறது. மேலும் கவாஸாகி இஸட் 900 பைக்கின் விலையும் 8.19 லட்ச ரூபாயில் இருந்து 8.34 லட்ச ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது.

கவாஸாகி பைக்குகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்கிறது... பழைய மற்றும் புதிய விலைகளின் பட்டியல் இங்கே...

எனினும் கவாஸாகி இஸட் ஹெச்2 பைக்கின் விலை மாற்றப்படாமல், 21.90 லட்ச ரூபாய் என்ற பழைய விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்படும். அதேபோல் கவாஸாகி இஸட் ஹெச்2 எஸ்இ பைக்கின் விலையும் உயராமல், 25.90 லட்ச ரூபாய் என்ற பழைய விலையே தொடரும். எனினும் கவாஸாகி வெர்ஸிஸ் 650 பைக்கின் விலை 6.94 லட்ச ரூபாயில் இருந்து 7.08 லட்ச ரூபாயாக உயரவுள்ளது.

கவாஸாகி பைக்குகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்கிறது... பழைய மற்றும் புதிய விலைகளின் பட்டியல் இங்கே...

அதேபோல் கவாஸாகி வெர்ஸிஸ் 1000 பைக்கின் விலையும் 11.19 லட்ச ரூபாயில் இருந்து 11.44 லட்ச ரூபாயாக உயர்கிறது. இந்த வரிசையில் கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் விலை 5.94 லட்ச ரூபாயில் இருந்து 6.04 லட்ச ரூபாயாக உயரவுள்ளது. மேலும் கவாஸாகி டபிள்யூ800 பைக்கின் விலை 7.09 லட்ச ரூபாயில் இருந்து 7.19 லட்ச ரூபாயாக உயர்கிறது.

கவாஸாகி பைக்குகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்கிறது... பழைய மற்றும் புதிய விலைகளின் பட்டியல் இங்கே...

எனினும் கவாஸாகி கேஎல்எக்ஸ்110 பைக்கின் விலை மாற்றம் செய்யப்படாமல், 2.99 லட்ச ரூபாய் என்ற பழைய விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்படும். இந்த வரிசையில் கவாஸாகி கேஎல்எக்ஸ்140ஜி பைக்கின் விலையும் உயரப்போவதில்லை. 4.06 லட்ச ரூபாய் என்ற பழைய விலையிலேயே இந்த பைக் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.

கவாஸாகி பைக்குகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்கிறது... பழைய மற்றும் புதிய விலைகளின் பட்டியல் இங்கே...

ஆனால் இந்த விலை உயர்விற்கு என்ன காரணம் என்பது தொடர்பாக கவாஸாகி நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த விலை உயர்வு கவாஸாகி பைக் வாங்க திட்டமிட்டுள்ளவர்களை கவலையடைய செய்துள்ளது. முன்னதாக மாருதி சுஸுகி போன்ற நிறுவனங்களும் வரும் ஏப்ரல் முதல் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki India To Hike Prices From 1 April, 2021: New vs Old Price List. Read in Tamil
Story first published: Thursday, March 25, 2021, 18:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X