இன்னும் ஒரு அதிக விலை பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்த Kawasaki! பட்ஜெட் விலை கார்களை விட அதிக விலை!

கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் மற்றுமொரு அதிக விலைக் கொண்ட பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அறிமுகமாகி இருக்கும் கவாஸாகி இசட்650ஆர்எஸ் பைக்கின் விலை மற்றும் பிற முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம், வாங்க.

இன்னும் ஒரு அதிக விலை பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்த Kawasaki! பட்ஜெட் விலை கார்களை விட அதிக விலை!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கவாஸாகி (Kawasaki) இந்திய இருசக்கர வாகன சந்தையை புதுமுக வாகனங்களால் அலங்கரித்து வருகின்றது. இசட்650ஆர்எஸ் (Z650RS) எனும் புதிய மாடலை நிறுவனம் இன்று (அக்டோபர் 30) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இன்னும் ஒரு அதிக விலை பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்த Kawasaki! பட்ஜெட் விலை கார்களை விட அதிக விலை!

நேற்றைய தினம் (அக்டோபர் 29) இந்நிறுவனம் கவாஸாகி வெர்சிஸ் 1000 (Kawasaki Versys 1000) எனும் புதிய மோட்டார்சைக்கிள் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த நிலையிலேயே புதிதாக கவாஸாகி இசட்650ஆர்எஸ் மாடலை நிறுவனம் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது.

இன்னும் ஒரு அதிக விலை பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்த Kawasaki! பட்ஜெட் விலை கார்களை விட அதிக விலை!

கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கிற்கு நிறுவனம் ரூ. 11.55 லட்சம் என்ற உச்சபட்ச விலையை நிர்ணயித்திருக்கின்றது. இது மிக சமீபத்தில் விற்பனைக்கு வந்த டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி ரக காரை விட பல மடங்கு அதிக விலையாகும். ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் கொண்ட இக்காருக்கு ரூ. 5.49 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இன்னும் ஒரு அதிக விலை பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்த Kawasaki! பட்ஜெட் விலை கார்களை விட அதிக விலை!

இதைவிட உச்சபட்ச விலையிலேயே வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த பைக்கைப் போலவே தற்போது விற்பனைக்கு அறிமுகமாகியிருக்கும் இசட்650ஆர்எஸ் பைக்கும் டாடா பஞ்ச் காரை விட மிக அதிக விலையைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது.

இன்னும் ஒரு அதிக விலை பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்த Kawasaki! பட்ஜெட் விலை கார்களை விட அதிக விலை!

கவாஸாகி நிறுவனம் இசட்650ஆர்எஸ் பைக்கிற்கு ரூ. 6.65 லட்சம் என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். தற்போது கிடைத்து வரும் டாடா பஞ்ச் காரை விட 1.16 லட்சம் ரூபாய் அதிக விலையில் இப்பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. கவாஸாகி இசட்650ஆர்எஸ் ஓர் நடுத்தர எடைக் கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும்.

இன்னும் ஒரு அதிக விலை பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்த Kawasaki! பட்ஜெட் விலை கார்களை விட அதிக விலை!

இந்த பைக் கேன்டீ எமரால்ட் பச்சை மற்றும் மெட்டாலிக் மூன் லைட் கிரே ஆகிய நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இப்பைக் ரெட்ரோ ஸ்டைலில் காட்சியளித்தாலும் நவீன கால அம்சங்களைக் கொண்டே இது அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில், வட்ட வடிவ எல்இடி மின் விளக்குகள் மற்றும் ட்வின் டயல் இன்ட்ரூமென்ட் எல்சிடி திரை உடன் வழங்கப்பட்டிருக்கின்றது.

இன்னும் ஒரு அதிக விலை பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்த Kawasaki! பட்ஜெட் விலை கார்களை விட அதிக விலை!

தொடர்ந்து, இருசக்கர வாகனத்தின் அதிக உறுதித் தன்மைக்காக ஸ்டீர் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் இப்பைக்கிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன் ஒட்டுமொத்த எடையே 13.5 கிலோவாகும். இது ஃபேரமின் எடை மட்டுமே ஆகும். பைக்கின் ஒட்டுமொத்த எடை அனைத்தையும் சேர்த்து 192 கிலோவாக இருக்கின்றது.

இன்னும் ஒரு அதிக விலை பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்த Kawasaki! பட்ஜெட் விலை கார்களை விட அதிக விலை!

கவாஸாகி நிறுவனம் இசட்650ஆர்எஸ் பைக்கில் 649சிசி திறன் கொண்ட பேரல்லல் ட்வின் மோட்டாரை பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 68 பிஎஸ் பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 64 என்எம் டார்க்கை 6,700 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. இத்துடன், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் ஆகிய அம்சங்களும் இந்த எஞ்ஜினில் வழங்கப்பட்டுள்ளன.

இன்னும் ஒரு அதிக விலை பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்த Kawasaki! பட்ஜெட் விலை கார்களை விட அதிக விலை!

சிறந்த இயக்க அனுபவத்திற்காக இப்பைக்கின் இரு முனைகளிலும் 17 இன்ச் வீல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், 120/70 அளவுள்ள டயர் முன்பக்கத்திலும் மற்றும் 160/60 அளவுள்ள டயர் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது அனைத்து சாலைகளும் சமாளிக்க ஏதுவான அமைப்பைக் கொண்ட டயர் ஆகும்.

இன்னும் ஒரு அதிக விலை பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்த Kawasaki! பட்ஜெட் விலை கார்களை விட அதிக விலை!

இதைத்தொடர்ந்து, மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை இப்பைக் வழங்க வேண்டும் என்பதற்காக 4 மிமீ அளவுள்ள டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், ப்ரீ லோட் அட்ஜெஸ்டபிள் ஷாக் அப்சார்பர் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றினால் இப்பைக்கின் கிரவுண்ட் 125 மிமீட்டராக காட்சியளிக்கின்றது.

இன்னும் ஒரு அதிக விலை பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்த Kawasaki! பட்ஜெட் விலை கார்களை விட அதிக விலை!

மேலும், அதிக பாதுகாப்பான பயணத்தை வழங்கும் பொருட்டு இரட்டை செமி-ஃப்ளோட்டிங் 300 மிமீ டிஸ்க் இரட்டை பிஸ்டனுன் காலிபர்களுடன் முன் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பைக்கின் பின் பக்கத்தில் 220 மிமீ பெடல் டிஸ்க் ஒற்றை பிஸ்டன் காலிபருடன் பொருத்தப்பட்டுள்ளது. இவையனைத்தும் மிக சிறந்த பிரேக்கிங்கை வழங்கும்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki launched z650rs bike in india at rs 6 65 lakhs
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X