இந்தியாவில் தொடர்ச்சியாக விலை உயர்ந்த பைக்குகளை களமிறக்கும் Kawasaki... புதியதாக Ninja 1000SX அறிமுகம்!

கவாஸாகி (Kawasaki) நிறுவனம் இசட்650ஆர்எஸ் (Z650RS) மற்றும் வெர்சிஸ் 1000 (Versys 1000) ஆகிய இரு மிக விலையுயர்ந்த பைக்குகளைத் தொடர்ந்து தற்போது மற்றுமொரு அதிக விலைக் கொண்ட பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. புதியதாக விற்பனைக்கு வந்திருக்கும் நிஞ்ஜா 1000எஸ்எக்ஸ் (Kawasaki Ninja 1000SX) பைக் பற்றிய முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் தொடர்ச்சியாக விலை உயர்ந்த பைக்குகளை களமிறக்கும் Kawasaki... புதியதாக Ninja 1000SX அறிமுகம்!

பிரீமியம் மற்றும் உயர் ரக இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வரும் கவாஸாகி (Kawasaki) நிறுவனம், அதன் நிஞ்ஜா 1000எஸ்எக்ஸ் (Kawasaki Ninja 1000SX) மாடல் சூப்பர் பைக்கை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இப்பைக் இரு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் தொடர்ச்சியாக விலை உயர்ந்த பைக்குகளை களமிறக்கும் Kawasaki... புதியதாக Ninja 1000SX அறிமுகம்!

எமரால்ட் பிளேஸ்ட் கிரீன் மற்றும் மெட்டாலிக் மேட் கிராஃபென் ஸ்டீல் கிரே என இரு விதமான நிற தேர்வுகளில் நிஞ்ஜா 1000எஸ்எக்ஸ் விற்பனைக்குக் கிடைக்கும். இரு நிற தேர்வுகளும் ரூ. 11.40 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றன.

இந்தியாவில் தொடர்ச்சியாக விலை உயர்ந்த பைக்குகளை களமிறக்கும் Kawasaki... புதியதாக Ninja 1000SX அறிமுகம்!

விற்பனைக்கான அறிமுகத்தை முன்னிட்டு இருசக்கர வாகனத்திற்கான புக்கிங் பணிகள் தற்போது நாட்டில் தொடங்கியுள்ளன. இதனை இப்போது புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் அதாவது, டிசம்பர் மாதத்திற்குள் இருசக்கர வாகனங்களை டெலிவரி கொடுக்க கவாஸாகி திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ச்சியாக விலை உயர்ந்த பைக்குகளை களமிறக்கும் Kawasaki... புதியதாக Ninja 1000SX அறிமுகம்!

முந்தைய மாடலைக் காட்டிலும் இப்போதைய புதிய நிஞ்ஜா 1000எஸ்எக்ஸ் மாடலில் கணிசமான மாற்றங்களைப் பெற்றிருக்கின்றது. புதிய நிற தேர்வு மற்றும் அணிகலன்கள் சேர்ப்பு உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன. இதன் மெக்கானிக்கள் அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் தொடர்ச்சியாக விலை உயர்ந்த பைக்குகளை களமிறக்கும் Kawasaki... புதியதாக Ninja 1000SX அறிமுகம்!

2022 நிஞ்ஜா 1000எஸ்எக்ஸ் பைக்கில் அதே பழைய எல்இடி லைட்டிங் அமைப்பே பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 4.3 அளவிலான டிஎஃப்டி வண்ண திரை ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த கருவியின் வாயிலாக பன்முக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தியாவில் தொடர்ச்சியாக விலை உயர்ந்த பைக்குகளை களமிறக்கும் Kawasaki... புதியதாக Ninja 1000SX அறிமுகம்!

உதாரணமாக, செல்போனுக்கு வரும் அழைப்பு தொடங்கி குறுஞ்செய்தி உள்ளிட்ட முக்கிய தகவல்களை டிஎஃப்டி திரையிலும், பைக் பற்றிய சில முக்கிய தகவல்களை செல்போன் திரையிலும் அறிந்து கொள்ள முடியும். இத்துடன், கியர் லெவல் மற்றும் பெட்ரோல் அளவு போன்ற முக்கிய தகவல்களையும் இந்த டிஎஃப்டி திரை நமக்கு வழங்கும்.

இந்தியாவில் தொடர்ச்சியாக விலை உயர்ந்த பைக்குகளை களமிறக்கும் Kawasaki... புதியதாக Ninja 1000SX அறிமுகம்!

இதுமட்டுமின்றி, ஏபிஎஸ், க்ரூஸ் கன்ட்ரோல், பன்முக ரைடிங் மோட்கள் (ஸ்போர்ட், சாலை, மழை, ரைடர்) மூன்று லெவல் டிராக்சன் கன்ட்ரோல், பவர் மோட்கள் (ஃபுல், லோவ்), குயிக் ஷிஃப்டர் மற்றும் கவாஸாகி கார்னரிங் மேனேஜ்மென்ட் ஃபங்க்ஷன் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தொடர்ச்சியாக விலை உயர்ந்த பைக்குகளை களமிறக்கும் Kawasaki... புதியதாக Ninja 1000SX அறிமுகம்!

கவாஸாகி நிறுவனம் புதிய நிஞ்ஜா 1000எஸ்எக்ஸ் பைக்கில் 1,043 சிசி, இன்லைன் 4 சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்ஜினை பயன்படுத்தியுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரை 10,000 ஆயிரம் ஆர்பிஎம்மிலும், 111 என்எம் டார்க்கை 8,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் தொடர்ச்சியாக விலை உயர்ந்த பைக்குகளை களமிறக்கும் Kawasaki... புதியதாக Ninja 1000SX அறிமுகம்!

இதன் மோட்டார் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. சிறந்த பயண அனுபவத்திற்காக அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், ரியர் மோனோஷாக், ட்வின் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் சிங்கிள் ரோட்டார் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பன்முக அம்சங்களைக் கொண்டிருக்கும் கவாஸாகி நிஞ்ஜா 1000எஸ்எக்ஸ் பைக்கே தற்போது நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இந்தியாவில் தொடர்ச்சியாக விலை உயர்ந்த பைக்குகளை களமிறக்கும் Kawasaki... புதியதாக Ninja 1000SX அறிமுகம்!

கவாஸாகி நிறுவனம் மிக சமீபத்தில் இசட்650ஆர்எஸ் (Z650RS) மற்றும் வெர்சிஸ் 1000 (Versys 1000) எனும் இரண்டு மிக மிக அதிக விலைக் கொண்ட இருசக்கர வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இவை இரண்டும் தற்போது விற்பனையில் இருக்கும் பட்ஜெட் விலைக் கார்களைக் காட்டிலும் பன் மடங்கு அதிக விலைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், இசட்650ஆர்எஸ் பைக்கிற்கு 6 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் என்ற விலையும், வெர்சிஸ் 1000 பைக் மாடலிற்கு ரூ. 11 லட்சத்து 55 ஆயிரம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கம் டாடா பஞ்ச், ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் ஆகிய பட்ஜெட் விலைக் கார்களைக் காட்டிலும் பல மடங்கு அதிக விலைக் கொண்டவை ஆகும். இவற்றைத் தொடர்ந்து, மிக குறுகிய கால இடை வெளியில் தற்போது புதிதாக நிஞ்ஜா 1000எஸ்எக்ஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki launches 2022 ninja 1000sx bike in india here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X