பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?

கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் பிஎஸ்-6 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான புதிய கவாஸாகி நின்ஜா 300 இந்திய சந்தையில் இன்று (மார்ச் 2) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடலின் விலை 3.18 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் பிஎஸ்-4 மாடல் 2.98 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டது.

பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?

எனவே பிஎஸ்-4 வெர்ஷனுடன் ஒப்பிடும்போது, பிஎஸ்-6 மாடலின் விலை 20 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. நின்ஜா 300 பைக்கின் பிஎஸ்-4 மாடல், இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கவாஸாகி நிறுவனத்தின் தயாரிப்புகளில் முதன்மையானதாக இருந்தது. பிஎஸ்-6 வெர்ஷனும் அதேபோன்ற சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என கவாஸாகி நிறுவனம் நம்புகிறது.

பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?

ஸ்போர்ட்டியான டிசைன் மற்றும் சிறப்பான செயல்திறன் ஆகிய காரணங்களால்தான் கவாஸாகி நின்ஜா 300 பைக் இந்திய இளைஞர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. டிசைனை பொறுத்தவரை கிட்டத்தட்ட முந்தைய மாடலை போலவேதான், புதிய நின்ஜா 300 பைக் உள்ளது. பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?

அதேபோல் ட்யூயல் ஹெட்லேம்ப், ஸ்பிளிட் இருக்கைகள் போன்ற பல்வேறு வசதிகளும் பழைய மாடலில் இருந்து அப்படியே புதிய மாடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி டெயில்லேம்ப் உள்ளிட்ட வசதிகளையும் புதிய கவாஸாகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது.

பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?

இந்த புதிய மாடலில் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஸனை பொறுத்தவரை 37 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், மோனோஷாக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் இந்த பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதியும் உள்ளது.

பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?

அதேபோல் முந்தைய பிஎஸ்-4 மாடலில் இருந்த அதே இன்ஜின்தான் புதிய நின்ஜா 300 மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. பிஎஸ்-4 மாடலில் 296 சிசி, பேரலல்-ட்வின், லிக்யூட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டிருந்தது.

பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 11,000 ஆர்பிஎம்மில் 38.4 பிஎச்பி பவரையும், 10,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பிஎஸ்-6 மாடலிலும் இந்த இன்ஜின் இதே பவர் மற்றும் டார்க் திறனைதான் வழங்கும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 மற்றும் கேடிஎம் ஆர்சி 390 உள்ளிட்ட பைக்குகளுடன், புதிய கவாஸாகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் தொடர்ந்து போட்டியிடும். புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் டெலிவரி தொடர்பாக தற்போதைக்கு எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. எனினும் டெலிவரி பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Ninja 300 BS6 Launched In India - Here Are All The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X