இந்தியாவில் பைக்குகளின் விலைகளை உயர்த்த தயாராகும் கவாஸாகி!! புதிய விலைகள் வெளியீடு!

கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் அதன் குறிப்பிட்ட மாடல்களின் விலைகளை கணிசமாக உயர்த்த உள்ளதாக அறிவித்து, புதிய விலை நிலவரங்களை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் பைக்குகளின் விலைகளை உயர்த்த தயாராகும் கவாஸாகி!! புதிய விலைகள் வெளியீடு!

வாகன தயாரிப்பிற்கு தேவையான பாகங்களின் தொடர் விலை உயர்வினாலும், ஆண்டுத்தோறும் புதியது புதியதாக கொண்டுவரப்படும் அப்டேட்களினாலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவற்றின் விற்பனை மாடல்களின் விலைகளை அவ்வப்போது அதிகரிப்பது வழக்கம்.

இந்தியாவில் பைக்குகளின் விலைகளை உயர்த்த தயாராகும் கவாஸாகி!! புதிய விலைகள் வெளியீடு!

அதிலும் தற்போது சிப்கள் உள்ளிட்ட குறைக்கடத்திகளுக்கான உலகளாவிய பற்றாக்குறை வேறு ஒருபக்கம் வாகனங்களின் விலைகளை உயர்த்தவும், அவற்றை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவை அதிகரிக்கவும் தயாரிப்பு நிறுவனங்களை கட்டாயப்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் பைக்குகளின் விலைகளை உயர்த்த தயாராகும் கவாஸாகி!! புதிய விலைகள் வெளியீடு!

இந்த வகையில் ஜப்பானை சேர்ந்த பிரபல மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் அதன் குறிப்பிட்ட சில பைக்குகளின் விலைகளை கணிசமாக உயர்த்த உள்ளது. வருகிற 2022 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அமலுக்குவர உள்ள இந்த விலை அதிகரிப்பில், இசட்650, வெர்ஸஸ் 650, இசட் எச்2 மற்றும் இசட் எச்2 எஸ்இ என்ற 4 கவாஸாகி பைக்குகள் மட்டுமே அடங்கவில்லை.

இந்தியாவில் பைக்குகளின் விலைகளை உயர்த்த தயாராகும் கவாஸாகி!! புதிய விலைகள் வெளியீடு!

மற்றவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் குறைந்தப்பட்சமாக ரூ.6,000இல் இருந்து அதிகப்பட்சமாக ரூ.23,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவில் விலை குறைவான கவாஸாகி பைக்கான நிஞ்சா 300 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையும், அதற்கடுத்த நிலையில் விலை கொண்ட கவாஸாகி வல்கன் எஸ் மோட்டார்சைக்கிளின் விலையும் தலா ரூ.6,000 அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பைக்குகளின் விலைகளை உயர்த்த தயாராகும் கவாஸாகி!! புதிய விலைகள் வெளியீடு!

இதனால் முன்பு ரூ.3.18 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிஞ்சா 300 பைக்கின் விலை ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து ரூ.3.24 லட்சமாகவும், க்ரூஸர் ரக கவாஸாகி பைக்கான வல்கன் எஸ்-இன் விலை ரூ.6.10 லட்சத்தில் இருந்து ரூ.6.16 லட்சமாகவும் உயர உள்ளது. இவற்றிற்கு அடுத்த கட்ட விலையில் (ரூ.6.24 லட்சம்) விற்பனை செய்யப்படும் இசட்650 பைக்கின் விலையில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை என்பதை முன்பே கூறிவிட்டோம்.

இந்தியாவில் பைக்குகளின் விலைகளை உயர்த்த தயாராகும் கவாஸாகி!! புதிய விலைகள் வெளியீடு!

ஆனால் நிஞ்சா 650 & இசட்650 ஆர்எஸ் என்ற மற்ற இரு 650சிசி பைக்குகளின் விலைகளை தலா ரூ.7,000 என்ற அளவில் உயர்த்த கவாஸாகி நிறுவனம் தயாராகி வருகிறது. இவை இரண்டின் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.61 லட்சம் மற்றும் ரூ.6.65 லட்சமாக உள்ளன. ஜனவரி 1ஆம் தேதிக்கு பின் இவை முறையே ரூ.6.68 லட்சம் மற்றும் ரூ.6.72 லட்சம் என அதிகரிக்கப்பட உள்ளன.

இந்தியாவில் பைக்குகளின் விலைகளை உயர்த்த தயாராகும் கவாஸாகி!! புதிய விலைகள் வெளியீடு!

கவாஸாகியின் ரெட்ரோ-ஸ்டைல் மோட்டார்சைக்கிளான டபிள்யூ800-இன் விலையும் அடுத்த ஆண்டில் இருந்து ரூ.7,000 உயர்த்தப்பட உள்ளது. இதன்படி தற்சமயம் ரூ.7.26 லட்சமாக உள்ள கவாஸாகி டபிள்யூ800 பைக்கின் விலை ஜனவரி 1இல் இருந்து ரூ.7.33 லட்சமாக உயர்கிறது. சூப்பர் செமி-நாக்டு கவாஸாகி பைக்காக விளங்கும் இசட்900 ரூ.8,000ஐ விலை அதிகரிப்பாக பெற உள்ளது.

இந்தியாவில் பைக்குகளின் விலைகளை உயர்த்த தயாராகும் கவாஸாகி!! புதிய விலைகள் வெளியீடு!

இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.42 லட்சமாக இருக்க, அடுத்த ஆண்டு முதல் இது முழுமையாக ரூ.8.50 லட்சமாக மாற உள்ளது. இதற்கடுத்து உள்ளவை அனைத்து 1000சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட சிசி கொண்ட கவாஸாகி பைக்குகளாகும். இதில் தற்சமயம் ரூ.11.40 லட்சங்கள் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டுவரும் நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பைக் ரூ.11,000 விலை அதிகரிப்பை காண உள்ளது.

இந்தியாவில் பைக்குகளின் விலைகளை உயர்த்த தயாராகும் கவாஸாகி!! புதிய விலைகள் வெளியீடு!

இதன் மூலமாக இந்த எண்ட்ரீ-லெவல் 1000சிசி கவாஸாகி பைக்கின் விலை ரூ.11.51 லட்சமாக உயரவுள்ளது. இதனை காட்டிலும் தற்போதைக்கு ரூ.15,000 அதிகமாக ரூ.11.55 லட்சம் என்கிற விலையில் சந்தைப்படுத்தப்பட்டுவரும் வெர்ஸஸ் 1000-இன் விலை ரூ.17,000 அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் இதன் விலை அடுத்த 2022ஆம் ஆண்டில் இருந்து ரூ.11.72 லட்சமாக உயர உள்ளது.

இந்தியாவில் பைக்குகளின் விலைகளை உயர்த்த தயாராகும் கவாஸாகி!! புதிய விலைகள் வெளியீடு!

இருப்பதிலேயே அதிகப்பட்சமாக நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் பைக்கின் விலையை ரூ.23,000 அளவில் உயர்த்த இந்த ஜப்பானிய மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் இந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் பைக்கின் விலை ரூ.15.14 லட்சமாக உள்ளது. இது விரைவில் ரூ.15.37 லட்சமாக அதிகரிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் பைக்குகளின் விலைகளை உயர்த்த தயாராகும் கவாஸாகி!! புதிய விலைகள் வெளியீடு!

இதனை காட்டிலும் அதிக விலை கொண்ட இசட் எச்2 மற்றும் இசட் எச்2 எஸ்இ பைக்குகளையும் கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்பட போவதில்லை. இவற்றின் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.21.90 லட்சங்கள் மற்றும் ரூ.25.90 லட்சங்களாக உள்ளன.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Bikes New Price List
Story first published: Friday, December 24, 2021, 2:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X