மலிவான 1000சிசி கவாஸாகி பைக்... இசட்எக்ஸ்-10ஆர்!! இந்திய ஷோரூம்களுக்கு வந்தது!

மலிவான 1000சிசி பைக்காக கவாஸாகி இசட்எக்ஸ்-10ஆர் இந்திய டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த 1000சிசி கவாஸாகி பைக்கை பற்றிய விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

மலிவான 1000சிசி கவாஸாகி பைக்... இசட்எக்ஸ்-10ஆர்!! இந்திய ஷோரூம்களுக்கு வந்தது!

இந்திய சந்தையில் 2021 கவாஸாகி இசட்எக்ஸ்-10ஆர் மோட்டார்சைக்கிள் கடந்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்த பைக் சில இந்திய ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜிக்வீல்ஸ் செய்திதளம் சில படங்களை பதிவிட்டுள்ளது.

மலிவான 1000சிசி கவாஸாகி பைக்... இசட்எக்ஸ்-10ஆர்!! இந்திய ஷோரூம்களுக்கு வந்தது!

இதனால் மிக விரைவில் இந்த பைக்கின் டெலிவிரிகள் ஆரம்பமாகிவிடும். புதிய கவாஸாகி இசட்எக்ஸ்-10ஆர் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே ரூ.50,000 என்கிற டோக்கன் தொகையில் முழு வீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மலிவான 1000சிசி கவாஸாகி பைக்... இசட்எக்ஸ்-10ஆர்!! இந்திய ஷோரூம்களுக்கு வந்தது!

இந்த கவாஸாகி பைக்கின் விலை மற்ற டுகாட்டி பனிகளே வி2 மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள அப்ரில்லா 660 பைக்குகளை காட்டிலும் குறைவாக ரூ.14.99 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட உள்ளது. தோற்றத்தில், முந்தைய தலைமுறையில் இருந்து புதிய தலைமுறை முன்பக்கத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றங்களை ஏற்றுள்ளது.

மலிவான 1000சிசி கவாஸாகி பைக்... இசட்எக்ஸ்-10ஆர்!! இந்திய ஷோரூம்களுக்கு வந்தது!

இதன் முன்பக்கத்தை பார்க்கும்போது ரூ.35 லட்சத்தில் விற்கப்பட்டு வரும் கவாஸாகி எச்2 பைக்கின் ஞாபகம் தான் வருகிறது. புதிய இசட்எக்ஸ்-10ஆர்-இன் முன்பக்கத்தில் ஹலோஜன் யூனிட்டிற்கு பதிலாக முழு-எல்இடி விளக்குகள் இரண்டாக கொடுக்கப்பட்டுள்ளன.

மலிவான 1000சிசி கவாஸாகி பைக்... இசட்எக்ஸ்-10ஆர்!! இந்திய ஷோரூம்களுக்கு வந்தது!

அதேபோல் இந்த பைக்கின் முன்பகுதி காற்று இயக்கவியலுக்கு இணக்கமான 17 சதவீதம் தரை நோக்கி தாழ்த்தப்பட்டுள்ளதாக கவாஸாகி நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்பக்கத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை, புதியதாக ஸ்பாய்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மலிவான 1000சிசி கவாஸாகி பைக்... இசட்எக்ஸ்-10ஆர்!! இந்திய ஷோரூம்களுக்கு வந்தது!

லைம் பச்சை மற்றும் ஃப்ளாட் எபோனி என்கிற இரு விதமான நிறங்களில் விற்பனை செய்யப்படவுள்ள 2021 இசட்எக்ஸ்-10ஆர் பைக்கில் புதிய 4.3 இன்ச் டிஎஃப்டி திரை மற்றும் ஸ்விட்ச்கியர் வழங்கப்பட்டுள்ளது.

மலிவான 1000சிசி கவாஸாகி பைக்... இசட்எக்ஸ்-10ஆர்!! இந்திய ஷோரூம்களுக்கு வந்தது!

இவற்றுடன் கார்னரிங் ஏபிஎஸ், என்ஜின் ப்ரேக் கண்ட்ரோல், லாஞ்ச் கண்ட்ரோல், குயிக்‌ஷிஃப்டர், ஏழு ரைடிங் மோட்கள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 5-நிலை ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட வழக்கமான தொழிற்நுட்ப அம்சங்கள் அனைத்தும் இந்த 2021 பைக்கிலும் தொடரப்பட்டுள்ளன.

மலிவான 1000சிசி கவாஸாகி பைக்... இசட்எக்ஸ்-10ஆர்!! இந்திய ஷோரூம்களுக்கு வந்தது!

இந்த 10ஆர் பைக்கில் 998சிசி, இன்லைன்-4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ள இந்த என்ஜின் அமைப்பில் புதிய டைட்டானியம் எக்ஸாஸ்ட் அமைப்பு மற்றும் திருத்தப்பட்ட கேட்டலிடிக் கன்வெர்டர் இணைக்கப்பட்டுள்ளது.

மலிவான 1000சிசி கவாஸாகி பைக்... இசட்எக்ஸ்-10ஆர்!! இந்திய ஷோரூம்களுக்கு வந்தது!

அதிகப்பட்சமாக 213பிஎஸ் மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த 10ஆர் பைக்கின் முதல் 3 கியர்கள் முன்பை காட்டிலும் குறைவான கியர்-விகிதத்தை பெற்றுள்ளன.

மலிவான 1000சிசி கவாஸாகி பைக்... இசட்எக்ஸ்-10ஆர்!! இந்திய ஷோரூம்களுக்கு வந்தது!

அதுமட்டுமில்லாமல் சற்று வித்தியாசமான சஸ்பென்ஷன் ட்யூனிங்-ஐ பெற்றுள்ளதால் ரைடிங் பொசிஷன் சற்று மேம்பட்டிருக்கும். இருப்பினும் சஸ்பென்ஷன் & ப்ரேக் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
India’s Most Affordable Litre-class Bike Has Reached Dealerships.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X