சைக்கிளை திருடிய சிறுவன்... வீடு தேடி வந்த போலீஸ் என்ன செய்தார்கள் தெரியுமா?.. இணைய உலகமே பாராட்டுது!!

சைக்கிளை திருடிய சிறுவனின் வீட்டிற்கு நேராக சென்ற காவலர்கள் யாரும் எதிர்பார்த்திராத செயலை செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

சைக்கிளை திருடிய சிறுவன்... வீடு தேடி வந்து போலீஸ் செய்த நடவடிக்கை என்ன தெரியுமா?.. இணைய உலகமே பாராட்டுது!!

குற்றங்களுக்கு தீர்வு தண்டனை என்பதே பெரும்பாலானோரின் மனதில் இருக்கக் கூடிய எண்ணமாக இருக்கின்றது. நாட்டில் உள்ள சட்டங்கள் பலவும் இதைதான் நமக்கு உணர்த்துகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில், பக்கத்து வீட்டுக்கு சொந்தமான சைக்கிளை திருடிய சிறுவனுக்கு வித்தியாசமான அணுகு முறையால் புதிய பாடத்தைக் கற்பித்திருக்கின்றது கேரளா காவல்துறை.

சைக்கிளை திருடிய சிறுவன்... வீடு தேடி வந்து போலீஸ் செய்த நடவடிக்கை என்ன தெரியுமா?.. இணைய உலகமே பாராட்டுது!!

கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள ஷோலையூர் பகுதியைச் சேர்ந்தவர் லத்தீஃப் அட்டபாடி. இவர், மிக சமீபத்தில் முகப்புத்தகத்தில் ஓர் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், இரு போலீஸார் புத்தம் புதிய சைக்கிளுடன் நிற்பதைப் போன்றும், இந்த சைக்கிள் மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுவனக்காக வாங்கப்பட்டது என்றும் அதில் கூறியிருந்தார்.

சைக்கிளை திருடிய சிறுவன்... வீடு தேடி வந்து போலீஸ் செய்த நடவடிக்கை என்ன தெரியுமா?.. இணைய உலகமே பாராட்டுது!!

ஆனால், அந்த சிறுவன் யார் என்பதுதான் இங்கு சுவாரஷ்யமே. தனது பக்கவீட்டு சிறுவனுக்கு சொந்தமான சைக்கிளை தனக்கு வேண்டும் என எடுத்துக் கொண்டு அடிம்பிடித்தவரே அச்சிறுவன். உரிமையாளர்கள் வந்து கேட்ட பின்னரும் தனக்கு இந்த சைக்கிள் வேண்டும் என அடம்பிடித்ததால் இவ்விவகாரம் காவல்நிலையம் வரை சென்றிருக்கின்றது.

சைக்கிளை திருடிய சிறுவன்... வீடு தேடி வந்து போலீஸ் செய்த நடவடிக்கை என்ன தெரியுமா?.. இணைய உலகமே பாராட்டுது!!

தொடர்ந்து, சிறுவன் சைக்கிளை திருடியதாக உரிமையாளர் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் யாரை அதிகம் பாதித்ததோ, இல்லையோ, வழக்கை கையாண்ட ஷோலயூர் கவால் நிலைய அதிகாரி விநோத் கிரிஷ்ணாவை பெரிதும் பாதித்திருக்கின்றது.

சைக்கிளை திருடிய சிறுவன்... வீடு தேடி வந்து போலீஸ் செய்த நடவடிக்கை என்ன தெரியுமா?.. இணைய உலகமே பாராட்டுது!!

சிறுவன், தான் தவறு செய்திருக்கின்றோம் என்பதைக்கூட உணர முடியாமல், விளையாட்டு பிள்ளையாக, தான் சைக்கில் ஓட்ட வேண்டும், அதற்கு அந்த சைக்கிள் வேண்டும் என அழுது அடம் பிடித்திருக்கின்றார். இருப்பினும், சைக்கிளை மீட்டு உரிமையாளரிடத்தில் காவலர்கள் ஒப்படைத்திருக்கின்றனர்.

சைக்கிளை திருடிய சிறுவன்... வீடு தேடி வந்து போலீஸ் செய்த நடவடிக்கை என்ன தெரியுமா?.. இணைய உலகமே பாராட்டுது!!

இந்த சம்பவமே தன்னை பெரிதும் பாதித்தாக விநோத் கிரிஷ்ணா கூறியிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து, சம்பவம் நடைபெற்ற மறுநாள் சிறுவனுக்காக தானே முன் சென்று ஓர் சைக்கிளையும் அவர் வாங்கியிருக்கின்றார். அந்த சைக்கிளின் புகைப்படத்தையே லத்தீஃப் என்பவர் தற்போது அவரது முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார்.

சைக்கிளை திருடிய சிறுவன்... வீடு தேடி வந்து போலீஸ் செய்த நடவடிக்கை என்ன தெரியுமா?.. இணைய உலகமே பாராட்டுது!!

காவலர்கள் சைக்கிள் வாங்கிய கடையின் உரிமையாளரே இந்த லத்தீஃப். இச்சைக்கிளை எதற்காக வாங்குகின்றோம் என காவலர்கள் கூறியதை அடுத்தே, இந்த நெகிழ்ச்சியான சம்பவம்குறித்த தகவலை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கின்றார்.

சைக்கிளை திருடிய சிறுவன்... வீடு தேடி வந்து போலீஸ் செய்த நடவடிக்கை என்ன தெரியுமா?.. இணைய உலகமே பாராட்டுது!!

சிறுவன் தனக்கு இதுவரை சொந்தமாக ஒரு சைக்கிள்கூட இல்லை என கூறி அழுது புலம்பியிருக்கின்றான். சிறுவனின் இந்த கதறல் காவலரின் அவரது சிறு வயது நினைவுகளை தட்டி எழுப்பியிருக்கின்றது. என்னுடைய சிறுவயதில் நானும் வாடகை சைக்கிளில்தான் அதிகம் பயணித்தேன். மேலும், தற்போது கூட என்னிடத்தில் சொந்தமாக ஒரு சைக்கிள்கூட இல்லை என காவலர் கூறியிருக்கின்றார்.

சைக்கிளை திருடிய சிறுவன்... வீடு தேடி வந்து போலீஸ் செய்த நடவடிக்கை என்ன தெரியுமா?.. இணைய உலகமே பாராட்டுது!!

இந்தநிலையை போக்கும் நோக்கிலேயே சிறுவனக்கு தன்னுடைய சொந்த பணத்தில் அவர் சைக்கிளை வாங்கிக் கொடுத்திருக்கின்றார். இந்த தகவல் நெட்டிசன்களின் பலரின் மனதை பெருமளவில் பாதித்திருக்கின்றது. தற்போது இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகியும் வருகின்றது. இதுவரை, 46 ஆயிரம் லைக்குகள் மற்றும் 13 ஆயிரம் ஷேர்களை இந்த பதிவு பெற்றிருக்கின்றது.

சைக்கிளை திருடிய சிறுவன்... வீடு தேடி வந்து போலீஸ் செய்த நடவடிக்கை என்ன தெரியுமா?.. இணைய உலகமே பாராட்டுது!!

குற்றங்களுக்கு எதிராக போலீஸார் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும்நிலையில் மாற்று சிந்தனையுடன் கேரளத்தைச் சேர்ந்த போலீஸார் செயல்பட்டிருப்பது நெட்டிசன்களின் மனதை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மேலும், பலர் காவலர்களின் இச்செயலுக்கு பாராட்டு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala Police Gifts Bicycle To Little Boy Who Steals His Neighbour's Cycle. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X