சாமானியர்களை மட்டுமல்ல புள்ளிகளையும் கவரும் இ-வாகனங்கள்! பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டரை வாங்கிய பிரபலம்! யார் அவர்?

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிரபலமான ஓர் நபர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த இன்னும் விரிவான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

சாமானியர்களை மட்டுமல்ல புள்ளிகளையும் கவரும் இ-வாகனங்கள்! பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டரை வாங்கிய பிரபலம்! யார் அவர் தெரியுமா?

இந்தியார்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமடையை தொடங்கியிருக்கின்றன. அதிலும், அண்மைக் காலங்களாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நாட்டில் பேராதரவு கிடைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இந்திய சாலைகளில் நாளுக்கு நாள் மின் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. சமீப காலமாக விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

சாமானியர்களை மட்டுமல்ல புள்ளிகளையும் கவரும் இ-வாகனங்கள்! பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டரை வாங்கிய பிரபலம்! யார் அவர் தெரியுமா?

நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து தப்பிக்க மக்கள் மாற்று எரிபொருள் மற்றும் மாற்ற திறனால் இயங்கும் வாகனங்களின் இயக்கத்திற்கு மாற தொடங்கியிருக்கின்றனர். அந்தவகையில், மின் மற்றும் சிஎன்ஜியால் இயங்கக் கூடிய வாகனங்களின் பக்கம் மக்கள் மாற தொடங்கியிருக்கின்றனர்.

சாமானியர்களை மட்டுமல்ல புள்ளிகளையும் கவரும் இ-வாகனங்கள்! பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டரை வாங்கிய பிரபலம்! யார் அவர் தெரியுமா?

இதன் விளைவாக சாலையில் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜியால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. முன்னதாக அரிதினும் அரிதாகவே தென்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள்கூட தற்போது மிக அதிகளவில் காட்சியளிக்கத் தொடங்கியிருக்கின்றன. சாமானியர்களை பெருமளவில் மின்சார வாகனங்கள் கவர்ந்து வருகின்றன.

சாமானியர்களை மட்டுமல்ல புள்ளிகளையும் கவரும் இ-வாகனங்கள்! பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டரை வாங்கிய பிரபலம்! யார் அவர் தெரியுமா?

அதேவேலையில், சாமானியர்களை மட்டுமின்றி பெரும் புள்ளிகளையும் மின்சார வாகனங்கள் கவர தொடங்கியிருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரபல பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பெண் இயக்குநர் மின்சார ஸ்கூட்டர் ஒன்றை புதிதாக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாமானியர்களை மட்டுமல்ல புள்ளிகளையும் கவரும் இ-வாகனங்கள்! பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டரை வாங்கிய பிரபலம்! யார் அவர் தெரியுமா?

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என இரு விதமான ரோல்களைக் கொண்டிருக்கும் கிரன் ராவ், இவரே அண்மையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியவர் ஆவார். பிரபல இந்தி திரைப்பட நடிகர் ஆமிர்கானின் முன்னாள் மனைவி இவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனான பஜாஜ்-இன், சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே அவர் வாங்கியிருக்கின்றார். டோபஸ் நீல நிறத்திலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அவர் வாங்கியுள்ளார்.

சாமானியர்களை மட்டுமல்ல புள்ளிகளையும் கவரும் இ-வாகனங்கள்! பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டரை வாங்கிய பிரபலம்! யார் அவர் தெரியுமா?

இது ஓர் ஸ்பெஷல் நிற தீம் ஆகும். கிரன் ராவோ இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியிருப்பது, பிரபலங்கள் மத்தியிலும் மின்சார வாகனங்கள் கவனத்தைப் பெற்று வருவதை உறுதிப்படுத்தியிருக்கின்றது. இதேபோல், ஆசியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சாமானியர்களை மட்டுமல்ல புள்ளிகளையும் கவரும் இ-வாகனங்கள்! பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டரை வாங்கிய பிரபலம்! யார் அவர் தெரியுமா?

இதுபோன்று இன்னும் பல பிரபலங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பஜாஜ் சேத்தக் இந்தியாவில் டிவிஎஸ் ஐக்யூப், ஏத்தர் 450, சிம்பிள் எனர்ஜி ஒன் மற்றும் ஓலா எஸ்1 ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியளிக்கும் வகையில் விற்பனையில் இருக்கின்றது. பஜாஜ் நிறுவனம் சரியாக 14 வருடங்களுக்கு பின்னர் விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் ஸ்கூட்டராக சேத்தக் இருக்கின்றது.

சாமானியர்களை மட்டுமல்ல புள்ளிகளையும் கவரும் இ-வாகனங்கள்! பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டரை வாங்கிய பிரபலம்! யார் அவர் தெரியுமா?

ஆகையால், இந்தியர்களின் கவனத்தை தனித்துவமாக இது ஈர்த்து வருகின்றது. இது பிரீமியம் தர எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். பிரீமியம் மற்றும் அர்பன் எனும் இரு விதமான ட்ரிம்களில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதில், பிரீமியம் ட்ரிம்மின் விலை ரூ. 1.44 லட்சம் ஆகும். இதன் அர்பன் ட்ரிம்மின் விலை ரூ. 1.42 லட்சமாக இருக்கின்றது.

சாமானியர்களை மட்டுமல்ல புள்ளிகளையும் கவரும் இ-வாகனங்கள்! பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டரை வாங்கிய பிரபலம்! யார் அவர் தெரியுமா?

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. ஈகோ மற்றும் ஸ்போர்ட் அவை ஆகும். இதில், ஈகோ மோடில் பயணித்தால் உச்சபட்ச ரேஞ்ஜை அதன் பயனர்களால் பெற முடியும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழுமையான சார்ஜில் 90 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சாமானியர்களை மட்டுமல்ல புள்ளிகளையும் கவரும் இ-வாகனங்கள்! பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டரை வாங்கிய பிரபலம்! யார் அவர் தெரியுமா?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5 பிஎச்பி மற்றும் 16.2 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய 3.8 kW மின் மோட்டார், ஐபி67 தூசி மற்றும் தண்ணீரால் பாதிக்காத திறன் கொண்ட பேட்டரி ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ வேகம் ஆகும். தினசரி பயன்பாட்டாளர்களைக் கருத்தில் கொண்டு இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Kiran rao buys a bajaj chetak electric scooter
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X