250கிமீ ரேஞ்ஜ்! இந்தியாவின் முதல் க்ரூஸர் இ-பைக்கின் அறிமுக விபரம் வெளியானது! ஜனவரி ரொம்ப ஸ்பெஷலா மாற போகுது!

இந்தியாவின் முதல் மின்சார க்ரூஸர் ரக பைக்கான கோமகி ரேஞ்ஜர் (Komaki Ranger)-இன் அறிமுகம் எப்போது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

250 கிமீ ரேஞ்ஜ்! இந்தியாவின் முதல் க்ரூஸர் இ-பைக்கின் அறிமுக விபரம் வெளியானது... ஜனவரி ரொம்ப ஸ்பெஷலா மாற போகுது!

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இருசக்கர வாகன மாடல்களில் கோமகி (Komaki) நிறுவனத்தின் ரேஞ்ஜர் (Ranger) பைக்கும் ஒன்று. இது ஓர் க்ரூஸர் ரக மின்சார மோட்டார்சைக்கிள் ஆகும். இந்திய மின்சார வாகன சந்தையில் விற்பனைக்கு வர இருக்கும் முதல் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் இதுவே ஆகும்.

250 கிமீ ரேஞ்ஜ்! இந்தியாவின் முதல் க்ரூஸர் இ-பைக்கின் அறிமுக விபரம் வெளியானது... ஜனவரி ரொம்ப ஸ்பெஷலா மாற போகுது!

ஆகையால், இந்த வாகனத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரியளவில் நீடித்த வண்ணம் இருக்கின்றது. இதுமட்டுமின்றி, இப்பைக் மிக அதிக ரேஞ்ஜை வழங்கும் வகையிலும் கோமகி நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இது உச்சபட்சமாக ஒற்றை முழுமையான சார்ஜில் 250 கிமீ தூரம் வரை பயணிக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

250 கிமீ ரேஞ்ஜ்! இந்தியாவின் முதல் க்ரூஸர் இ-பைக்கின் அறிமுக விபரம் வெளியானது... ஜனவரி ரொம்ப ஸ்பெஷலா மாற போகுது!

இதுபோன்று அனைத்து தகவல்களும் கோமகி ரேஞ்ஜர் மின்சார பைக்கின் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில், எலெக்ட்ரிக் பைக்கை பெரிதும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மின்சார பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

250 கிமீ ரேஞ்ஜ்! இந்தியாவின் முதல் க்ரூஸர் இ-பைக்கின் அறிமுக விபரம் வெளியானது... ஜனவரி ரொம்ப ஸ்பெஷலா மாற போகுது!

2022 ஜனவரி மாதத்தில் மின்சார பைக்கை அறிமுகம் செய்ய கோமகி நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவர்கள் தெரிவிக்கின்றன. ஆனால், துள்ளியமான தேதி பற்றிய விபரத்தை நிறுவனம் வெளியிடவில்லை. மிக விரைவில் தேதி பற்றிய விபரத்தை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல் க்ரூஸர் ரக மின்சார பைக்கை பெரும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு குஷியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

250 கிமீ ரேஞ்ஜ்! இந்தியாவின் முதல் க்ரூஸர் இ-பைக்கின் அறிமுக விபரம் வெளியானது... ஜனவரி ரொம்ப ஸ்பெஷலா மாற போகுது!

கோமகி ரேஞ்ஜர் மின்சார பைக்கில் 4 kW பேட்டரி பேக் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இத்தகைய அதிக திறன் கொண்ட பேட்டரி பேக்கை இதுவரை எந்தவொரு மின்சார இருசக்கர வாகனமும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, 5 ஆயிரம் வாட் திறன் கொண்ட மின் மோட்டாரும் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

250 கிமீ ரேஞ்ஜ்! இந்தியாவின் முதல் க்ரூஸர் இ-பைக்கின் அறிமுக விபரம் வெளியானது... ஜனவரி ரொம்ப ஸ்பெஷலா மாற போகுது!

மிக சிறந்த மற்றும் அதிக திறன் வெளிப்பாட்டை வழங்கும் நோக்கில் இத்தகைய அதிக வாட் திறன் கொண்ட மின் மோட்டார் பைக்கில் வழங்கப்பட இருக்கின்றது. இத்துடன், கூடுதல் சிறப்பு வசதியாக க்ரூஸர் கன்ட்ரோல் (Cruise Control), ரிபெயர் ஸ்விட்ச் (Repair Switch), ரிவர்ஸ் ஸ்விட்ச் (Reverse Switch) மற்றும் ப்ளூடூத் இணைப்பு (Bluetooth Connectivity) உள்ளிட்ட வசதிகளும் இந்த இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட இருக்கின்றன.

250 கிமீ ரேஞ்ஜ்! இந்தியாவின் முதல் க்ரூஸர் இ-பைக்கின் அறிமுக விபரம் வெளியானது... ஜனவரி ரொம்ப ஸ்பெஷலா மாற போகுது!

கோமகி நிறுவனம் ஏற்கனவே பன்முக தேர்வுகளில் மின்சார இருசக்கர வாகனத்தை இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களாக டிஎன்95 மற்றும் எஸ்இ ஆகிய மின்சார இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. இவை மலிவு விலை கொண்ட மின்சார இருசக்கர வாகனங்கள் ஆகும்.

250 கிமீ ரேஞ்ஜ்! இந்தியாவின் முதல் க்ரூஸர் இ-பைக்கின் அறிமுக விபரம் வெளியானது... ஜனவரி ரொம்ப ஸ்பெஷலா மாற போகுது!

இவற்றைப் போலவே விரைவில் அறிமுகம் காண இருக்கும் ரேஞ்ஜர் எலெக்டர்க் க்ரூஸர் பைக்கும் குறைவான விலையில் சந்தையை அலங்கரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோமகி நிறுவனம் இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் ஸ்கூட்டர்களை மட்டுமின்றி எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களையும் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. நான்கு விதமான இ-பைக்குகளை நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

250 கிமீ ரேஞ்ஜ்! இந்தியாவின் முதல் க்ரூஸர் இ-பைக்கின் அறிமுக விபரம் வெளியானது... ஜனவரி ரொம்ப ஸ்பெஷலா மாற போகுது!

இவற்றின் வரிசையில் மிக விரைவில் ரேஞ்ஜர் இணைய இருக்கின்றது. இது நிறுவனத்தின் கேம்-சேஞ்ஜராக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறைவான விலை, அதிக சிறப்பம்சங்கள் என அனைத்திலும் மிக சிறந்த தயாரிப்பாக இது விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

250 கிமீ ரேஞ்ஜ்! இந்தியாவின் முதல் க்ரூஸர் இ-பைக்கின் அறிமுக விபரம் வெளியானது... ஜனவரி ரொம்ப ஸ்பெஷலா மாற போகுது!

ஆகையால், கோமகி ரேஞ்ஜர் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மைக் காலமாக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை மக்களை மின் வாகனங்களை நகர்த்தத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலை நிச்சயம் கோமகி ரேஞ்ஜரின் விற்பனைக்கு உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

250 கிமீ ரேஞ்ஜ்! இந்தியாவின் முதல் க்ரூஸர் இ-பைக்கின் அறிமுக விபரம் வெளியானது... ஜனவரி ரொம்ப ஸ்பெஷலா மாற போகுது!

தலைநகர் டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமே இந்த கோமகி (Komaki) நிறுவனம். இது மின் வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு நாட்டில் இயங்கி வருகின்றது. இது ஓர் ஆரம்ப-நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனம். நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மின்சார இருசக்கர வாகனமாக எக்ஸ்ஜிடி கேம் (XGT KM) இருக்கின்றது. ட்ரெண்டியான ஸ்டைல், இலகுவான எடை, நடைமுறைக்கு ஏற்ற அம்சங்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இந்த வாகனத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

குறிப்பு: கடைசி ஆறு படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
Komaki reveals ranger e cruiser bike launch details
Story first published: Thursday, December 2, 2021, 18:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X