கழுகுபோல் காந்திருந்து புக் செய்த வாடிக்கையாளர்கள்! 1 மணி நேரம்கூட ஆகல அனைத்து யூனிட் பைக்கும் காலியாயிடுச்சு!

விற்பனைக்கு அறிமுகமான ஒரு மணி நேரத்தில் அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கேடிஎம் நிறுவனமே இந்த விநோத சம்பவத்தைச் சந்தித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஒரு மணி நேரம் கூட ஆகல... விற்பனைக்கு வந்த அனைத்து யூனிட் பைக்குகளையும் வாங்கிட்டாங்க... கழுகு போல் காந்திருந்து புக் செய்த வாடிக்கையாளர்...

கேடிஎம் நிறுவனம் மிக சமீபத்தில் அதன் சூப்பர்-நேக்கட் ரோட்ஸ்டர் மாடல் மோட்டார்சைக்கிளான 1290 சூப்பர் ட்யூக் பைக்கில் ஆர்ஆர் எனும் புதிய வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 1290 சூப்பர் ட்யூக் ஆர்ஆர் எனும் பெயரில் விற்பனைக்கு வந்த இப்பைக்கை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே களமிறக்கியது.

ஒரு மணி நேரம் கூட ஆகல... விற்பனைக்கு வந்த அனைத்து யூனிட் பைக்குகளையும் வாங்கிட்டாங்க... கழுகு போல் காந்திருந்து புக் செய்த வாடிக்கையாளர்...

அதாவது 500 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்தது. அதன்படி, 500 யூனிட்டுகள் 1290 சூப்பர் ட்யூக் ஆர்ஆர் மாடலையும் கேடிஎம் விற்பனைக்குக் கொண்டு வந்தது. டிஜிட்டல் விற்பனையகம் (ஆன்லைன்) வாயிலாகவே இப்பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.

ஒரு மணி நேரம் கூட ஆகல... விற்பனைக்கு வந்த அனைத்து யூனிட் பைக்குகளையும் வாங்கிட்டாங்க... கழுகு போல் காந்திருந்து புக் செய்த வாடிக்கையாளர்...

இந்த பைக்கே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, டிஜிட்டல் விற்பனை வாயிலாக இப்பைக் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட 48 நிமிடங்களில் அனைத்து 500 யூனிட் 1290 சூப்பர் ட்யூக் ஆர்ஆர் வெர்ஷன் பைக்குகளும் விற்று தீர்ந்துள்ளன.

ஒரு மணி நேரம் கூட ஆகல... விற்பனைக்கு வந்த அனைத்து யூனிட் பைக்குகளையும் வாங்கிட்டாங்க... கழுகு போல் காந்திருந்து புக் செய்த வாடிக்கையாளர்...

இதனால், இப்பைக்கை புக் செய்ய காத்திருந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். அவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பளிக்கும் விதமாக ஓர் வாய்ப்பை கேடிஎம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதாவது, தற்போது கேடிஎம் 1290 சூப்பர் ட்யூர் ஆர்ஆர் வெர்ஷன் பைக்கை புக் செய்துள்ள வாடிக்கையாளர் யாரேனும் கேன்சல் செய்தால் அந்த யூனிட்டை வேறொருவருக்கு புக் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது.

ஒரு மணி நேரம் கூட ஆகல... விற்பனைக்கு வந்த அனைத்து யூனிட் பைக்குகளையும் வாங்கிட்டாங்க... கழுகு போல் காந்திருந்து புக் செய்த வாடிக்கையாளர்...

இந்த ஆர்ஆர் வெர்ஷன் 1290 சூப்பர் ட்யூக் பைக்கை முற்றிலும் எடைக் குறைந்த பைக்காக கேடிஎம் உருவாக்கியுள்ளது. இதற்காக இலகுரக எடையுள்ள கார்பன்-ஃபைர் பாடி பேனல்களையும், சப் ஃப்ரேம்களையும் நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, இதன் வீல்கள் மற்றும் பேட்டரி உள்ளிட்டவற்றையும் எடைக்குறைந்ததாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஒரு மணி நேரம் கூட ஆகல... விற்பனைக்கு வந்த அனைத்து யூனிட் பைக்குகளையும் வாங்கிட்டாங்க... கழுகு போல் காந்திருந்து புக் செய்த வாடிக்கையாளர்...

ஆகையால், வழக்கமான 1290 சூப்பர் ட்யூக் பைக்கைக் காட்டிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்திருக்கும் ஆர்ஆர் வெர்ஷன் 1290 சூப்பர் ட்யூக் பைக் 9 கிலோ எடைக் குறைவானதாக காட்சியளிக்கின்றது. இப்பைக்கின் ஒட்டுமொத்த எடையே 180கிலோ ஆகும்.

ஒரு மணி நேரம் கூட ஆகல... விற்பனைக்கு வந்த அனைத்து யூனிட் பைக்குகளையும் வாங்கிட்டாங்க... கழுகு போல் காந்திருந்து புக் செய்த வாடிக்கையாளர்...

கேடிஎம் நிறுவனம் இப்பைக்கில் 1,301 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை பயன்படுத்தியுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 180பிஎச்பி மற்றும் 140 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைந்தே இயங்குகின்றது.

ஒரு மணி நேரம் கூட ஆகல... விற்பனைக்கு வந்த அனைத்து யூனிட் பைக்குகளையும் வாங்கிட்டாங்க... கழுகு போல் காந்திருந்து புக் செய்த வாடிக்கையாளர்...

இப்பைக்கில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக முன் பக்கத்தில் உயர்-ரக டபிள்யூ அபெக்ஸ் ப்ரோ 7548 கார்ட்ரிட்ஜ் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் அபெக்ஸ் ப்ரோ 7746 ஷாக்கும் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதில், முன்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஃபோர்க் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் வசதியைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு மணி நேரம் கூட ஆகல... விற்பனைக்கு வந்த அனைத்து யூனிட் பைக்குகளையும் வாங்கிட்டாங்க... கழுகு போல் காந்திருந்து புக் செய்த வாடிக்கையாளர்...

கேடிஎம் நிறுவனம் 1290 சூப்பர் ட்யூக் பைக்கை இன்னும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரவில்லை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். விரைவில், இந்தியர்களை அதகளப்படுத்தும் வகையில் ஆர்சி390 பைக்கை விற்பனைக்குக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஒரு மணி நேரம் கூட ஆகல... விற்பனைக்கு வந்த அனைத்து யூனிட் பைக்குகளையும் வாங்கிட்டாங்க... கழுகு போல் காந்திருந்து புக் செய்த வாடிக்கையாளர்...

இதற்காக பழைய தலைமுறை வெர்ஷன் ஆர்சி390 சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றது. ஆகையால், மிக விரைவில் புதிய ஆர்சி390 இந்தியாவில் அறிமுகமாகும் என்ற நம்பிக்கையில் இப்பைக்கின் ரசிகர்கள் பலர் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 1290 Super Duke RR All 500 Units Sold Out In Just 48 Minutes. Read In Tamil.
Story first published: Wednesday, April 14, 2021, 10:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X