இது என்ன பைக் என்று யாராலும் கண்டேபிடிக்க முடியாது!! அசத்திகாட்டிய பெண் பைக் பிரியர்...

யாராலும் நம்பவே முடியாத தோற்றத்திற்கு கேடிஎம் 200 ட்யூக் பைக் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் கேடிஎம் பைக்கை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டேபிடிக்க முடியாது!! அசத்திகாட்டிய பெண் பைக் பிரியர்...

இந்திய இளைஞர்களின் கனவு பைக்குகளுள் எப்போதும் ஒரு கேடிஎம் பைக்காவது இருக்கும். அதிலும் பெரும்பான்மையானவர்களின் தேர்வு பேனல்கள் இல்லாத நாக்டு கேடிஎம் பைக்குகளின் மீதுதான் உள்ளன.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டேபிடிக்க முடியாது!! அசத்திகாட்டிய பெண் பைக் பிரியர்...

இதற்கு காரணம், கேடிஎம் பைக்குகள் இளம் தலைமுறையினருக்கு பிடித்ததாக மட்டுமில்லாமல் சந்தைக்கு பிறகான பாகங்களுடன் மாடிஃபிகேஷன் பணிகளை அவற்றில் மேற்கொள்வதும் எளிமையானதாக உள்ளது.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டேபிடிக்க முடியாது!! அசத்திகாட்டிய பெண் பைக் பிரியர்...

இந்த வகையில் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட கேடிஎம் 200 ட்யூக் பைக்கை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். கிட்டத்தட்ட 80 சதவீதம் முப்பரிமாணத்தில் வடிவமைக்கப்பட்ட பேனல்களை கொண்டிருக்கும் இந்த 200 ட்யூக் கஸ்டமைஸ்ட் பைக் தொடர்பான வீடியோ ப்ரியங்கா கோச்சர் என்பவர் தனது பைவித்கேர்ள் யுடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

இந்த கஸ்டமைஸ்டேஷன் செயல்பாடுகள் அனைத்தும் ஆட்டோலாக் டிசைன் என்ற நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்த வீடியோவில் கூறும் ப்ரியங்கா, இந்த மாடிஃபை கேடிஎம் 200 ட்யூக் பைக்கிற்கு பி.டபிள்யூ.ஜி 200 என பெயர் வைத்துள்ளார்.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டேபிடிக்க முடியாது!! அசத்திகாட்டிய பெண் பைக் பிரியர்...

இந்த பெயரில் லோகோவை பைக்கின் பெட்ரோல் டேங்கில் பார்க்க முடிகிறது. மேலும் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பான்மையான பாகங்கள் மற்றொரு கஸ்டமைஸ்ட் ட்யூக் 200 ஸ்க்ரம்ப்ளர் பைக்கில் இருந்து பெறப்பட்டதாக மாடிஃபை செய்தவர் கூறுகிறார்.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டேபிடிக்க முடியாது!! அசத்திகாட்டிய பெண் பைக் பிரியர்...

வீடியோவில் பைக்கை பார்த்தவுடன் நமது கவனம் முதலாவதாக உயரம் அதிகரிக்கப்பட்ட ஓட்டுனர் இருக்கையின் மீதுதான் செல்கிறது. இதன் காரணமாக பின் இருக்கையின் உயரமும் உயர்த்தப்பட்டுள்ளது. பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு இந்த மாடிஃபை ட்யூக் 200-ல் ஒரே துண்டாக வழங்கப்பட்டுள்ளது.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டேபிடிக்க முடியாது!! அசத்திகாட்டிய பெண் பைக் பிரியர்...

பைக்கின் பின்பக்க வால்பகுதி பெரிய அளவில் நறுக்கப்பட்டுள்ளது, இதுதான் பைக்கிற்கு ஸ்க்ரம்ப்ளர் தோற்றத்தை வழங்குகிறது. முன்பக்கத்தில் ரெட்ரோ தோற்றத்திலான எல்இடி ஹெட்லைட் விளக்கு கருப்பு க்ரில்-ஆல் மூடப்பட்டுள்ளது.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டேபிடிக்க முடியாது!! அசத்திகாட்டிய பெண் பைக் பிரியர்...

ஹெட்லைட்டிற்கு மேலே கஸ்டம் விஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை பைக்கில் உள்ள மற்றொரு ஹைலைட் எதுவென்று பார்த்தால் பெட்டகம் வடிவில் வழங்கப்பட்டுள்ள பெட்ரோல் டேங்கை சொல்லலாம்.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டேபிடிக்க முடியாது!! அசத்திகாட்டிய பெண் பைக் பிரியர்...

முப்பரிமாண தோற்றத்தில் நேர்த்தியாக காட்சியளித்தாலும் பெட்ரோல் டேங்க் வடிவமைப்பில் இன்னும் வேலைப்பாடுகள் முடியவில்லை என வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சிங்கிள் பேரல் எக்ஸாஸ்ட் வழக்கமான 200 ட்யூக்கின் எக்ஸாஸ்ட்டை காட்டிலும் அதிக சத்தத்தை வெளிப்படுத்துகிறது.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டேபிடிக்க முடியாது!! அசத்திகாட்டிய பெண் பைக் பிரியர்...

இதற்காக எக்ஸாஸ்ட் அமைப்பில் என்னென்ன பாகங்கள் பொருத்தப்ப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை. இவற்றுடன் மோட்டோகெட்ஜெட்டின் சிங்கிள் மோனோ-ப்ளாக் டைமண்ட்-கட் அலுமினியம் கண்ணாடிகள் மற்றும் இரு சக்கரங்களிலும் ப்ளாஸ்டிக் கவர் உள்ளிட்டவற்றையும் இந்த மாடிஃபை பைக்கில் பார்க்க முடிகிறது.

இது என்ன பைக் என்று யாராலும் கண்டேபிடிக்க முடியாது!! அசத்திகாட்டிய பெண் பைக் பிரியர்...

இவை மட்டுமின்றி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை சுற்றிலும் கார்பன் ஃபைபர் தொடுதல்களையும் கஸ்டமைஸ்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. மற்றப்படி பைக்கின் 199.5 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் அமைப்பில் கை வைக்கப்படவில்லை. கேடிஎம் 200 ட்யூக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.81 லட்சமாக உள்ளது.

English summary
KTM 200 Duke Customised With 3D Printed Parts By Autologue Design
Story first published: Friday, January 8, 2021, 21:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X