சாகசத்தை விரும்பும் கேடிஎம் பைக் உரிமையாளரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்தி!

சவாலை விரும்பும் கேடிஎம் பைக் உரிமையாளர்களுக்கு ஒரு சிறப்பு சாகசப் பயணத்திற்கான வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்பட உலக அளவில் இந்த பயண திட்டத்தை கேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாகசத்தை விரும்பும் கேடிஎம் பைக் உரிமையாளரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்தி!

The World Adventure Week என்ற பெயரில் இந்த திட்டத்தை கேடிஎம் அறிவித்துள்ளது. கேடிஎம் வைத்திருக்கும் பைக் உரிமையாளர்கள் இந்த சாகசப் பயணத்தில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது.

சாகசத்தை விரும்பும் கேடிஎம் பைக் உரிமையாளரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்தி!

இந்த சாகசப் பயணத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் The World Adventure Week என்ற பிரத்யேக இணையதளத்திற்கு சென்று விபரங்களை பெற முடியும். மொத்தம் 7 நாட்கள் கொண்டதாக இந்த சாகசப் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சாகசத்தை விரும்பும் கேடிஎம் பைக் உரிமையாளரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்தி!

இந்த பயணத்தில் கலந்து கொள்ள விரும்பும் கேடிஎம் பைக் உரிமையாளர்கள் RISER என்ற செயலியை ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து பதிவு செய்ய வேண்டும்.

சாகசத்தை விரும்பும் கேடிஎம் பைக் உரிமையாளரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்தி!

பின்னர், 7 நாட்களும் தங்களது பயணத்தின்போது எடுக்கப்படும் வீடியோக்களை குறிப்பிட்ட நிபந்தனைகளின்படி ரைசர் அப்ளிகேஷனில் பதிவு செய்ய வேண்டும். இந்த சாகசப் பயணத் திட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கேடிஎம் பைக் உரிமையாளர்கள் சிறப்பு பரிசுகளை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது.

சாகசத்தை விரும்பும் கேடிஎம் பைக் உரிமையாளரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்தி!

மேலும், The World Adventure Week இணையதளம் மற்றும் கேடிஎம் நிறுவனத்தின் சமூக வலைத்தளப் பக்கங்களிலும் அவர்களது பதிவுகள் இடம்பெறும்.

சாகசத்தை விரும்பும் கேடிஎம் பைக் உரிமையாளரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்தி!

மொத்தம் 7 நாட்களில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயணிக்கும் வகையில் இந்த சாகசப் பயண திட்டத்தை கேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, 7 நாட்களில் 1,000 கிமீ தூரம் அல்லது அதற்கு மேலாக பயணிக்கும் பைக் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்க உள்ளதாக கேடிஎம் தெரிவித்துள்ளது.

சாகசத்தை விரும்பும் கேடிஎம் பைக் உரிமையாளரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்தி!

வரும் ஜூலை 5ந் தேதி முதல் 11ந் தேதி வரை இந்த சாகசப் பயணத் திட்டம் இந்தியா உள்பட உலக அளவில் பல்வேறு நாடுகளில் நடைபெற இருக்கிறது. கூடுதல் விபரங்களை மேலே குறிப்பிட்ட பிரத்யேக இணையதளம் அல்லது மொபைல் செயலிகளை தரவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM has announced the World Adventure Week' to be held from July 5-11.
Story first published: Tuesday, June 15, 2021, 14:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X