நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய பெண்... உதவிக்கு யாருமே வரல.. கடைசியில் என்ன நடந்தது?

அடிப்பட்ட நாய் குட்டியை காப்பாற்ற போய் இளம்பெண் ஒருவர் குடிகார இளைஞர்கள் மத்தியில் சிக்கியிருக்கின்றார். அப்போது என்னவானது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய இளம்பெண்... உதவிக்கு யாருமே வரல... கடைசியில் என்ன நடந்தது?

இந்தியாவில், குறிப்பாக நெடுஞ்சாலைகளில் தனியாக சவாரி செய்வது நல்லது அல்ல என சொல்வதை நாம் கேட்டிருப்போம். பெரும்பாலான நெடுஞ்சாலைகள் மக்கள் வாழ்விடத்தில் இருந்து சற்று விலகி இருப்பதால் அங்கு எதிர்பார்த்திராத அசாதாரண சூழ்நிலைகளைச் சந்திக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.

நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய இளம்பெண்... உதவிக்கு யாருமே வரல... கடைசியில் என்ன நடந்தது?

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் ஓர் சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். 'ரைடர்கேர்ல் விஷாகா' எனும் யுட்யூப் தளத்தைச் சேர்ந்த விஷாகா எனும் இளம்பெண்ணே நெடுஞ்சாலையில் கடும் இன்னல்களுக்கு ஆளாகியவர் ஆவார்.

நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய இளம்பெண்... உதவிக்கு யாருமே வரல... கடைசியில் என்ன நடந்தது?

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் விஷாகா. இவர், அண்மையில் மும்பையில் இருந்து பெல்காமிற்கு கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் செல்ல சென்றுக் கொண்டிருந்தார். அப்போதே குடிகார இளைஞர்கள் சிலரால் அவர் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றார்.

நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய இளம்பெண்... உதவிக்கு யாருமே வரல... கடைசியில் என்ன நடந்தது?

தன்னுடைய பயணத்தின்போது சாலையோர நாய்களுக்கு உணவளிக்க விஷாகா திட்டமிட்டார். இதன்படி, நெடுஞ்சாலையில் அமைந்திருந்த ஓர் கடையில் பிஸ்கட் பேக்குககளை வாங்கி நாய்களுக்கு உணவளிக்க ஆரம்பித்தார். ஒரு சில பாக்கேட்டுகளை பிரித்து அங்கிருந்த மின் கம்பங்களுக்கு அடியில் அவர் வைத்தார்.

நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய இளம்பெண்... உதவிக்கு யாருமே வரல... கடைசியில் என்ன நடந்தது?

சில நேரங்கள் கழித்து நாய்கள் வந்து உண்ணுவதற்காக இவ்வாறு செய்தார். இவ்வாறு நாய்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்த வேலையில் ஓர் நபர் மதுக்கடை பக்கத்தில்தான் இருக்கின்றது என கூறினார். அவள் மதுக்கடை தேடுவதாக எண்ணிக் கொண்டு அந்த நபர் அவ்வாறு கூறினார்.

நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய இளம்பெண்... உதவிக்கு யாருமே வரல... கடைசியில் என்ன நடந்தது?

ஆனால், அதனைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் விஷாகா அங்கிருந்து புறப்பட தயாரானாள். அப்போது, குட்டி நாய் ஒன்று கத்துவது போன்ற சத்தம் அவரது காதில் வந்து விழுந்தது. பைக்கை அப்படியே சாலையோரத்தில் நிறுத்திய விஷாக நாய் கத்தும் இடத்தை நோக்கி நகர தொடங்கினாள்.

நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய இளம்பெண்... உதவிக்கு யாருமே வரல... கடைசியில் என்ன நடந்தது?

குறிப்பிட்ட தூர இடைவெளியில் நாய் குட்டி ஒன்று படுத்திருக்க, அதனை இளைஞர்கள் சிலர் சூழ்ந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இதனைப் பொருட்படுத்தாது அடிப்பட்டிருந்த நாய் குட்டியிடம் விஷாக சென்றார்.

நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய இளம்பெண்... உதவிக்கு யாருமே வரல... கடைசியில் என்ன நடந்தது?

அங்கிருந்த இளைஞர்களில் சிலர் நாயை கார் ஒன்று மோதிவிட்டு சென்றுவிட்டதாக கூறினார். ஏற்கனவே ஓர் நாய் குட்டி இவ்விபத்தின் காரணமாக உயிரிழந்துவிட்டதாகவும் அவர்கள் கூறினர். இதனையடுத்து, மீண்டும் தனது பைக் இருக்கும் இடத்திற்கு வந்த விஷாகா சில டிஷ்யூ பேப்பர்களை எடுத்து வந்தார்.

நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய இளம்பெண்... உதவிக்கு யாருமே வரல... கடைசியில் என்ன நடந்தது?

அதைக் கொண்டு நாயின் காயங்களை துடைக்க ஆரம்பித்தார். தொடர்ந்து, நாய் குட்டிக்கு தண்ணீர் மற்றும் உணவளிக்க முயற்சித்தார். ஆனால், காயம் அதிகமாக இருந்த காரணத்தினால் குட்டி அதிக வேதனையில் கத்திக் கொண்டே இருந்தது. ஆகையால், நாய் குட்டியை மருத்துவமனை எடுத்துச் செல்ல விஷாகா திட்டமிட்டார்.

நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய இளம்பெண்... உதவிக்கு யாருமே வரல... கடைசியில் என்ன நடந்தது?

இதற்காக விலங்கு நல ஆர்வளர்களான பீட்டாவின் உதவியை நாடினார். ஆனால், செல்போன் அழைப்பு ஏற்கப்படவில்லை. இதனால், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. உதவி கிடைக்கவில்லை என தெரிந்தும் மனம் தளராமல் நாயை தன்னுடனே எடுத்துச் செல்ல விஷாகா எண்ணினார்.

நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய இளம்பெண்... உதவிக்கு யாருமே வரல... கடைசியில் என்ன நடந்தது?

இளைஞர்கள் சிலர் பெல்காமில் கால்நடை மருத்துவர்கள் இருப்பதாகக் கூறியதை அடுத்து இதனை அவர் செய்தார். அப்போதுதான் இருந்த இளைஞர்களில் சிலர் விஷாகாவிடம் பிரச்னையில் ஈடுபட ஆரம்பித்தனர். மது போதையில் பேசக்கூட முடியாத நிலையில், நாய் குட்டியை அங்கேயே விட்டு செல்லும்படி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய இளம்பெண்... உதவிக்கு யாருமே வரல... கடைசியில் என்ன நடந்தது?

இதற்கிடையில், விஷாகிவிடம் இருந்து நாயை பறிக்க வேண்டும் என்பதற்காக கத்தியைக் காட்டியதாகவும் கூறப்படுகின்றது. இதனை விஷாகா வீடியோவில் உறுதிப்படுத்திள்ளார். இதனால் அச்சமடைந்த இளம்பெண் அவசர உதவி எண் 100ஐ அழைத்தார். ஆனால், போலீஸார் உதவிக்கு வரவில்லை.

நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய இளம்பெண்... உதவிக்கு யாருமே வரல... கடைசியில் என்ன நடந்தது?

இதனால் பெரிதும் பதற்றமாகிய விஷாக, சாலையில் சென்றவர்கள் சிலரை உதவிக்கு அழைத்தார். ஆனால், ஒருவரும் அவருக்கு உதவி புரிய வரவில்லை. இதனால் மேலும் அச்சமடைந்த விஷாகா எப்படியாவது அங்கிருந்து தப்பியே ஆக வேண்டும் என்ற நினைத்தார்.

Image Courtesy: RiderGirl Vishakha

அதேசமயம், நாய் குட்டியையும் அவர்களிடத்தில் விட்டுச் செல்லக் கூடாது என்ற எண்ணித்திலும் அவர் நிலையாக இருந்தார். இதற்கிடையிலேயே இளம்பெண்ணின் கூப்பாட்டைக் கேட்டு இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்தார். உதவிக்காக வந்த அந்த இளைஞரையும் அங்கு சூழ்ந்திருந்த குடிகார ஆசாமிகள் மிரட்டி விரட்டியடித்தனர். இதனால், அச்சமடைந்த இளைஞர் அங்கு நிற்காமல் நழுவினார்.

நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய இளம்பெண்... உதவிக்கு யாருமே வரல... கடைசியில் என்ன நடந்தது?

இருப்பினும், நிலைமையை தந்திரமாக சமாளித்து குடிகாரர்களிடத்தில் இருந்து தன்னையும், நாயையும் காப்பாற்றி அங்கிருந்து அவர் புறப்பட்டார். விஷாகாவிற்கு டோல்கேட் ஊழியர்கள் இருவர் உதவியிருக்கின்றார். இவர்களே உள்ளூர் விலங்கு நல ஆர்வலர் ஒருவரிடத்திலும் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய இளம்பெண்... உதவிக்கு யாருமே வரல... கடைசியில் என்ன நடந்தது?

நாய் குட்டியை அவர்களிடத்தில் பத்திரமாக ஒப்படைத்த பின்னரே விஷாகா அங்கிருந்து புறப்பட்டார். இளம்பெண் விஷாகா சந்தித்திருப்பது மிகவும் ஆபத்தான மற்றும் கடுமையான நிலையாகும். இதுபோன்ற சூழ்நிலைகள் நெடுஞ்சாலைகளில் நிலவுகின்ற காரணத்தினாலேயே தனியாக பயணம் மேற்கொள்வது மிகவும் ஆபத்தானது என கூறப்படுகின்றது. ஆபத்தில் இருந்து மீட்கப்பட்ட நாய் குட்டி பத்திரமாக நாய்கள் காப்பகத்தில் இருக்கும் வீடியோவையும் விஷாக வெளியிட்டிருக்கின்றார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
KTM Girl Rider Harassed By Drunk Men while Saving An Injured Pup. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X