கேடிஎம்-இன் இந்திய வெப்சைட்டில் 2022 ஆர்சி390 பைக்!! அறிமுகம் எப்போது?

புதிய தலைமுறை ஆர்சி390 மோட்டார்சைக்கிள் கேடிஎம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்தும், புதிய கேடிஎம் ஆர்சி390 பைக் குறித்தும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம்-இன் இந்திய வெப்சைட்டில் 2022 ஆர்சி390 பைக்!! அறிமுகம் எப்போது?

கேடிஎம் நிறுவனம் புதிய இரண்டாம் தலைமுறை ஆர்சி பைக்குகளை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உலகளவில் வெளியீடு செய்திருந்தது. அதனை தொடர்ந்து, முதலாவதாக புதிய தலைமுறை ஆர்சி125 மற்றும் ஆர்சி200 மோட்டார்சைக்கிள்கள் சில தினங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

கேடிஎம்-இன் இந்திய வெப்சைட்டில் 2022 ஆர்சி390 பைக்!! அறிமுகம் எப்போது?

இந்த புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி பைக்குகளை பெற்ற முதல் நாடு இந்தியா ஆகும். புதிய ஆர்சி125 & ஆர்சி200 பைக்குகளை தொடர்ந்து இரண்டாம் தலைமுறை ஆர்சி390 பைக்கையும் இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்ய கேடிஎம் நிறுவனம் தயாராகி வருகிறது.

கேடிஎம்-இன் இந்திய வெப்சைட்டில் 2022 ஆர்சி390 பைக்!! அறிமுகம் எப்போது?

இந்த நிலையில் தான் தற்போது புதிய ஆர்சி390 பைக்கின் பெயர் கேடிஎம் இந்தியா நிறுவனத்தின் வெப்சைட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி390 மோட்டார்சைக்கிள் தோற்றத்தில் மற்ற ஆர்சி-வரிசை மோட்டார்சைக்கிள்களை பெரிதும் ஒத்து காணப்படுகிறது.

கேடிஎம்-இன் இந்திய வெப்சைட்டில் 2022 ஆர்சி390 பைக்!! அறிமுகம் எப்போது?

முந்தைய தலைமுறை கேடிஎம் ஆர்சி390 உடன் ஒப்பிடுகையில், புதிய ஆர்சி390 மாடல் டிசைனில் முற்றிலுமாக வித்தியாசப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மோட்டார்சைக்கிளின் எடையும் கிட்டத்தட்ட 7 கிலோ வரையில் குறைந்துள்ளது. முன்பக்கத்தில் இந்த புதிய ஆர்சி பைக் ஹெட்லேம்ப்பிற்கு முழு-எல்இடி செட் உடன் புதிய லேஅவுட்டை பெற்றுள்ளது.

கேடிஎம்-இன் இந்திய வெப்சைட்டில் 2022 ஆர்சி390 பைக்!! அறிமுகம் எப்போது?

இந்த ஹெட்லேம்ப் அமைப்பில் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் டிஆர்எல்களும் உள்ளன. இவற்றுடன் எதிர்காற்று தடுப்பிற்காக புதிய விஸரும் அடுத்த-தலைமுறை ஆர்சி390 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இது பயணத்தின்போது எதிர்வரும் காற்றை தடுப்பது மட்டுமின்றி, மோட்டார்சைக்கிள்களின் காற்று இயக்கவியல் பண்பையும் மேம்படுத்தக்கூடியது.

கேடிஎம்-இன் இந்திய வெப்சைட்டில் 2022 ஆர்சி390 பைக்!! அறிமுகம் எப்போது?

புதிய ஆர்சி390 பைக் முற்றிலும் ரீ-டிசைனிலான உடற்வேலைப்பாடுகளை பெற்றுள்ளது. இதனால் இந்த சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த தோற்றமும் மெருக்கேறியுள்ளது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், இரண்டாம் தலைமுறை ஆர்சி390, கேடிஎம்-இன் மை ரைடு செயல்பாட்டை ஏற்கக்கூடிய ப்ளூடூத்திற்கு இணக்கமான டிஎஃப்டி திரையினை பெற்றுள்ளது.

கேடிஎம்-இன் இந்திய வெப்சைட்டில் 2022 ஆர்சி390 பைக்!! அறிமுகம் எப்போது?

இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் இசை மற்றும் மொபைல் போன் அழைப்புகளை பைக்கின் புதிய ஸ்விட்ச் கியரில் கண்ட்ரோல் செய்யலாம். இவற்றுடன் கேடிஎம் நிறுவனத்தின் சூப்பர்மோட்டோ ஏபிஎஸ் மோட், கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் பை-நேரடி விரைவு-மாற்றி உடன் கார்னரிங் டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட எலக்ட்ரானிக் தொகுப்புகளும் நிரப்பப்பட்டுள்ளன.

கேடிஎம்-இன் இந்திய வெப்சைட்டில் 2022 ஆர்சி390 பைக்!! அறிமுகம் எப்போது?

புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி390 பைக்கிலும் வழக்கமான அதே என்ஜின் தான் சில சிறிய திருத்தியமைப்புகளுடன் வழங்கப்பட்டுள்ளது. ஆர்சி390-இல் 373.2சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது. புதிய ஆர்சி390-இல் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 43.5 பிஎஸ் மற்றும் 37 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக வழங்கப்பட்டுள்ளது.

கேடிஎம்-இன் இந்திய வெப்சைட்டில் 2022 ஆர்சி390 பைக்!! அறிமுகம் எப்போது?

என்ஜின் அதிகப்பட்சமாக வழங்கக்கூடிய குதிரையாற்றல் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் டார்க் திறன் 1 என்எம் அதிகரித்துள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி390 பைக் இந்திய சந்தையில் வருகிற 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம்-இன் இந்திய வெப்சைட்டில் 2022 ஆர்சி390 பைக்!! அறிமுகம் எப்போது?

அதேபோல், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3 லட்சத்திற்குள்ளாக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் கேடிஎம் ஆர்சி390 பைக்கின் ஆரம்ப இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.77 லட்சமாக உள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி200 பைக்குகள் டீலர்ஷிப் ஷோரூம்களை சமீபத்தில் இருந்து வந்தடைய துவங்கியுள்ளன.

கேடிஎம்-இன் இந்திய வெப்சைட்டில் 2022 ஆர்சி390 பைக்!! அறிமுகம் எப்போது?

புதிய கேடிஎம் ஆர்சி125 & ஆர்சி200 பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.82 லட்சம் மற்றும் ரூ.2.09 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவற்றின் முந்தைய வெர்சன்களின் விலைகளும் கிட்டத்தட்ட இதே அளவில் தான் இருந்தன. வாடிக்கையாளர்கள் பலரை பெரிதும் கவர்ந்திருக்கும் இந்த விஷயத்தினால்தான் புதிய ஆர்சி390-இன் விலையையும் ரூ.3 லட்சத்திற்குள் எதிர்பார்க்கிறோம்.

கேடிஎம்-இன் இந்திய வெப்சைட்டில் 2022 ஆர்சி390 பைக்!! அறிமுகம் எப்போது?

ஷோரூம்களுக்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருப்பதால், புதிய தலைமுறை ஆர்சி200 பைக்கின் டெலிவிரிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். கேடிஎம் ஆர்சி200 மாடலுக்கு விற்பனையில், அளவில் சிறிய என்ஜினை பெற்றாலும் யமஹா ஆர்15 போட்டியாக விளங்குகிறது. யமஹா நிறுவனமும் சமீபத்தில் தான் அதன் ஆர்15 பைக்கை வெர்சன் 4க்கு அப்டேட் செய்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். மேலும் ஆர்15 வி.4 உடன் புதிய ஆர்15 வி4 எம் பைக்கும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
2022 KTM RC 390 listed on India website Launch early next year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X