அரசியல்வாதிகளும் இதுபோலிருந்தா எப்படி இருக்கும்? புதிய தலைமுறைக்காக சந்தையை விட்டு வெளியேறிய கேடிஎம் ஆர்சி390!

புதிய தலைமுறை பைக்கிற்காக பழைய தலைமுறை கேடிஎம் ஆர்சி 390 பைக் சந்தையை விட்டு வெளியேறி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இதுமாதிரி அரசியல் வாதிகளும் இருந்த நல்லா இருக்கும்... புதிய தலைமுறைக்காக சந்தையை விட்டு வெளியேறும் கேடிஎம் ஆர்சி390...

2021 மாடல் கேடிஎம் ஆர்சி 390 பைக்கை நிறுவனம் விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த புதுப்பிக்கப்பட்ட பைக் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு பழைய தலைமுறை ஆர்சி390 சந்தையை விட்டு வெளியேறியிருக்கின்றது.

இதுமாதிரி அரசியல் வாதிகளும் இருந்த நல்லா இருக்கும்... புதிய தலைமுறைக்காக சந்தையை விட்டு வெளியேறும் கேடிஎம் ஆர்சி390...

இதனை உறுதிப்படுத்தும் வகையில் 2020 கேடிஎம் ஆர்சி 390 பைக் பற்றிய அனைத்து தகவல்களும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலை தளப்பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது, 2021 வெர்ஷன் ஆர்சி390 பைக்கின் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதுமாதிரி அரசியல் வாதிகளும் இருந்த நல்லா இருக்கும்... புதிய தலைமுறைக்காக சந்தையை விட்டு வெளியேறும் கேடிஎம் ஆர்சி390...

இப்பைக்கை கடந்த சில மாதங்களாக கேடிஎம் நிறுவனம் தீவிர பல பரீட்சையில் ஈடுபடுத்தி வந்ததது. அனைத்து சோதனைகளும் முடிவடைந்தநிலையில் தற்போது இப்பைக் அறிமுகத்திற்கு தயாராகி உள்ளது. இதனைத் தொடர்ந்தே பழைய வெர்ஷனை நிறுவனம் அதிரடியாக விற்பனை பட்டியலில் இருந்து நீக்கியிருக்கின்றது.

இதுமாதிரி அரசியல் வாதிகளும் இருந்த நல்லா இருக்கும்... புதிய தலைமுறைக்காக சந்தையை விட்டு வெளியேறும் கேடிஎம் ஆர்சி390...

ஆரம்பத்தில் இப்பைக்கின் நீக்கம் அதன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், 2021 வெர்ஷன் ஆர்சி390 வருகை புரிய இருப்பது அவர்களின் கலக்கத்தை போக்கி, சந்தோஷமடைய செய்திருக்கின்றது.

இதுமாதிரி அரசியல் வாதிகளும் இருந்த நல்லா இருக்கும்... புதிய தலைமுறைக்காக சந்தையை விட்டு வெளியேறும் கேடிஎம் ஆர்சி390...

மாற்றங்கள் என்ன?

2021 வெர்ஷன் கேடிஎம் ஆர்சி 390 பைக்கில் நிறுவனம் கணிசமான மாற்றங்களைச் செய்திருக்கின்றது. அந்தவகையில், தற்போது இப்பைக்கில் செய்யப்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றமாக இதன் எர்கோனாமிக்ஸ் உள்ளது. பொதுவாகவே, கேடிஎம் பைக்குகள் அனைத்தும் முரட்டுத்தனமான இயக்கத்திற்கு ஏற்ப ரைடிங் பொசிஷன் வழங்கப்படுவது வழக்கம்.

இதுமாதிரி அரசியல் வாதிகளும் இருந்த நல்லா இருக்கும்... புதிய தலைமுறைக்காக சந்தையை விட்டு வெளியேறும் கேடிஎம் ஆர்சி390...

ஆனால், இம்முறை புதிய தலைமுறை ஆர்சி390 பைக்கில் டிவஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் தென்படுவதைப் போன்று அப்ரைட் ரைடிங் பொசிஷன் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், இதன் ஸ்டைல் மற்றும் தோற்றம் முன்பை விட அதிக கவர்ச்சியானதாக மற்றும் முரட்டுத்தனமானதாக மாற்றப்பட்டிருக்கின்றது.

இதுமாதிரி அரசியல் வாதிகளும் இருந்த நல்லா இருக்கும்... புதிய தலைமுறைக்காக சந்தையை விட்டு வெளியேறும் கேடிஎம் ஆர்சி390...

முன்னதாக சந்தையைவிட்டு வெளியேற்றப்பட்ட ஆர்சி8 சூப்பர் பைக்கில் இடம்பெற்றிருந்ததைப் போன்ற எல்இடி ஹெட்லேம்புகள் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, பைக்கின் ஃப்ரேம், சப் ஃப்ரேம் மற்றும் வீல்கள் உள்ளிட்டவையும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இதுமாதிரி அரசியல் வாதிகளும் இருந்த நல்லா இருக்கும்... புதிய தலைமுறைக்காக சந்தையை விட்டு வெளியேறும் கேடிஎம் ஆர்சி390...

இதேபோன்று, பைக்கின் இருக்கை மற்றும் எக்சாஸ்ட் சிஸ்டத்திலும் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சிறப்பு வசதிகளுடன் உருவாகியிருக்கும் புதிய தலைமுறை பைக்கிற்காகவே பழைய தலைமுறை ஆர்சி390 பைக் தற்போது சந்தையை விட்டு வெளியேறியிருக்கின்றது.

இதுமாதிரி அரசியல் வாதிகளும் இருந்த நல்லா இருக்கும்... புதிய தலைமுறைக்காக சந்தையை விட்டு வெளியேறும் கேடிஎம் ஆர்சி390...

இப்பைக்கில் 373சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே எஞ்ஜின்தான் புதிய தலைமுறை ஆர்சி 390 பைக்கில் இடம்பெற உள்ளது. தொடர்ந்து, டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் குயுக் ஷிஃப்டர் போன்றவையும் இப்பைக்கில் இடம்பெற இருக்கின்றன. இப்பைக்கின் விலை பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், ரூ. 2.80 லட்சத்திற்கும் அதிகமான விலையில் இப்பைக் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM RC 390 Removed From Official Site; Here Is Why?.. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X