மேட்-இன்-இந்தியா ஹோண்டா டியோ வெளிநாட்டுக்கு ஏற்றுமதி... எந்த நாட்டுக்கு போகுது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டியோ ஸ்கூட்டரை வெளி நாடு ஒன்றிற்கு ஹோண்டா நிறுவனம் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது எந்த நாடு என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

மேட்-இன்-இந்தியா ஹோண்டா டியோ வெளிநாட்டுக்கு ஏற்றுமதி... எந்த நாட்டுக்கு போகுது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்தியாவின் மிக அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஹோண்டா டியோ மாடலும் ஒன்று. இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இருசக்கர வாகனமாக இருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக டியோவே அதிகம் விற்பனையாகி வருகின்றது.

மேட்-இன்-இந்தியா ஹோண்டா டியோ வெளிநாட்டுக்கு ஏற்றுமதி... எந்த நாட்டுக்கு போகுது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்கூட்டரையே வெளி நாடு ஒன்றிற்காக ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டிற்காகவே இது ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

மேட்-இன்-இந்தியா ஹோண்டா டியோ வெளிநாட்டுக்கு ஏற்றுமதி... எந்த நாட்டுக்கு போகுது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அந்நாட்டு பிஎச்பி மதிப்பில் 49,900 என்ற விலையில் அங்கு விற்கப்பட இருக்கின்றது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 76,499 ஆகும். ஆனால், இந்தியாவிலோ இந்த ஸ்கூட்டர் ரூ. 63,273க்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்தியாவை விட 13 ஆயிரம் ரூபாய் அதிக விலையில் பிலிப்பைன்ஸில் விற்பனைக் களமிறங்கியிருக்கின்றது டியோ.

மேட்-இன்-இந்தியா ஹோண்டா டியோ வெளிநாட்டுக்கு ஏற்றுமதி... எந்த நாட்டுக்கு போகுது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

எந்தவொரு மாற்றமும் இன்றி தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் என்ன ஸ்டைலில் விற்பனைக்குக் கிடைக்கின்றதோ அதோ தோற்றத்திலேயே பிலிப்பைன்சுக்கும் டியோ சென்றிருக்கின்றது. எஞ்ஜின் விஷயத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மேட்-இன்-இந்தியா ஹோண்டா டியோ வெளிநாட்டுக்கு ஏற்றுமதி... எந்த நாட்டுக்கு போகுது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆகையால், 109சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே இவ்வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது 8 பிஎச்பி மற்றும் 8.91 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. எல்இடி டிஆர்எல் மற்றும் எல்இடி ஹெட்லேம்புகளை ஹோண்டா டியோ கொண்டிருக்கின்றது.

மேட்-இன்-இந்தியா ஹோண்டா டியோ வெளிநாட்டுக்கு ஏற்றுமதி... எந்த நாட்டுக்கு போகுது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

நீலம்/வெள்ளை, சிவப்பு/சாம்பல் மற்றும் ஆரஞ்சு/சாம்பல் ஆகிய நிற தேர்வுகளில் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹோண்டா டியோ விற்பனைக்குக் கிடைக்கும். இதே நிறங்களில்தான் இந்தியாவிலும் ஹோண்டா டியோ விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மேட்-இன்-இந்தியா ஹோண்டா டியோ வெளிநாட்டுக்கு ஏற்றுமதி... எந்த நாட்டுக்கு போகுது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கூடுதலாக ரெப்சோல் மாடலில் டியோ இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவும், இரு நிற தேர்விலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், சிவப்பு/கருப்பு, நீலம்/கருப்பு, மற்றும் தங்கம்/கருப்பு ஆகிய நிறங்களில் டியோ ரெப்சோல் வெர்ஷன் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மேட்-இன்-இந்தியா ஹோண்டா டியோ வெளிநாட்டுக்கு ஏற்றுமதி... எந்த நாட்டுக்கு போகுது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. மிக சமீபத்தில் தனது இருசக்கர வாகனங்களின் பக்கம் மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக ரூ. 1,100 முன் தொகையில் டூ வீலர், 6.5 சதவீதம் என்ற குறைந்த வட்டி மற்றும் பூஜ்ஜியம் பிராசஸிங் கட்டணம் என பல்வேறு சிறப்பு சலுகளை அறிவித்தது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Made-In-India Honda Dio Introduced In Philippines Two Wheeler Market. Read In Tamil.
Story first published: Saturday, May 8, 2021, 18:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X