யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல

இந்தியாவில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் மோட்டார்சைக்கிள்களுள் ஒன்று மஹிந்திரா மோஜோ. வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போதுவரையில் இந்த பைக்கிற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதில்லை.

யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல

ஆனால் நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள மோஜோ பைக் பார்க்கும் அனைவரையும் ஓட்ட தூண்டக்கூடியதாக இருக்கும். அட்வென்ச்சர் தோற்றத்தில் உள்ள இந்த மோஜோ பைக்கை புனேவை சேர்ந்த அனலாக் டிசைன் என்ற கஸ்டமைசேஷன் நிறுவனம் மாடிஃபை செய்துள்ளது.

Image Courtesy: Autologue Design

இந்த மோஜோ பைக்கில் கொண்டுவரப்பட்ட முக்கியமான மாற்றமே, அதன் இரட்டை-ஹெல்லேம்ப் அமைப்பு தான். இதுவே இந்த மோஜோ பைக்கை அட்வென்ச்சர் ரகத்தை சேர்ந்ததாக நம் முன்னிறுத்துகிறது.

யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல

இரட்டை ஹெட்லேம்ப் அமைப்பு உள்பட புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள உடற்பாகங்கள் அனைத்தும் மஹிந்திரா மோஜோ பைக்கிற்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. கூடுதல் பேனல்கள் அனைத்தும் மோஜோ பைக்கின் மீதுதான் பொருத்தப்பட்டுள்ளன என்பது உறுதி.

யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல

இரட்டை ஹெட்லேம்பிற்கு மேலே கருப்பு நிறத்தில் எதிர்காற்று தடுப்பு கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ‘mojo' கிராஃபிக்ஸ் எழுத்துகள் பெரியதாக பெட்ரோல் டேங்கின் அடிப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. இதற்காகவே பெட்ரோல் டேங்கின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது.

யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல

ஹேண்டில்பார் நன்கு உயரத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துடன் 17 இன்ச்சில் அலாய் சக்கரங்களை பெற்றுள்ள இந்த மாடிஃபை பைக்கில் முன்பக்க ஃபோர்க்குகள், துணை-ஃப்ரேம் மற்றும் ஸ்விங்கார்ம் உள்ளிட்டவை சில்வர் நிறத்தில் உள்ளன.

யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல

மோஜோவின் 294.72சிசி சிங்கிள்-சிலிண்டர், ஃப்யுல்-இன்ஜெக்டட், லிக்யுடு-கூல்டு என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே தொடரப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 25.37 பிஎச்பி மற்றும் 25.96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல

இந்த அட்வென்ச்சர் மஹிந்திரா மோஜோ பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் வாயு-நிரப்பி மோனோ-ஷாக்கும் உள்ளன. ப்ரேக் பணியை கவனிக்க முன் மற்றும் பின் சக்கரங்களில் முறையே 320மிமீ மற்றும் 240மிமீ ரோட்டார்கள் உடன் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல

செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்இடி டிஆர்எல்களுடன் இரட்டை-பேட் ஹலோஜன் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் உள்ளிட்டவை மஹிந்திரா மோஜோவில் வழங்கப்படும் சிறப்பம்சங்களாகும்.

யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல

இவற்றுடன் இந்த மஹிந்திரா பைக்கில் ட்யுல்-சேனல் ஏபிஎஸ்-உம் உள்ளது. மஹிந்திரா மோஜோவின் எக்ஸ்ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.99 லட்சம் மற்றும் ரூ.2.11 லட்சம் என உள்ளன.

Most Read Articles
English summary
Mahindra Mojo Aero Tested, Bolt-On Adv Body Kit By Autologue Design.
Story first published: Sunday, April 18, 2021, 3:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X