ஹோண்டா என்எக்ஸ்200 இந்தியாவில் அறிமுகமாகவுள்ள தேதி இதுதானா? இந்த அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய அம்சங்கள்

ஜப்பானிய 2 வீலர்ஸ் பிராண்டான ஹோண்டா, இந்திய சந்தையில் அடுத்ததாக அறிமுகப்படுத்தவுள்ள அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் தான் என்எக்ஸ்200 ஆகும். இந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா என்எக்ஸ்200 இந்தியாவில் அறிமுகமாகவுள்ள தேதி இதுதானா? இந்த அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய அம்சங்கள்

இதற்கிடையில் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுவதற்காக அவ்வப்போது என்எக்ஸ்200 பைக்கின் டீசர் வீடியோக்களை ஹோண்டா 2 வீலர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்திய சந்தையில் தற்சமயம் அட்வென்ச்சர் பைக்குகளுக்கான வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் என்எக்ஸ்200-இன் மீதும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஹோண்டா என்எக்ஸ்200 இந்தியாவில் அறிமுகமாகவுள்ள தேதி இதுதானா? இந்த அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய அம்சங்கள்

ஹார்னெட் அடிப்படையில் உருவாக்கப்படுவதால் புதிய என்எக்ஸ்200 பெரும்பான்மையான பாகங்களை விற்பனையில் இருக்கும் அதன் நாக்டு வெர்சனில் இருந்து பெற்றுவரவுள்ளது. ஹோண்டா என்எக்ஸ்200 பைக்கின் முக்கிய அம்சங்கள் என்னவாக இருக்கும்? இந்த கேள்விக்கான பதிலை தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

ஹோண்டா என்எக்ஸ்200 இந்தியாவில் அறிமுகமாகவுள்ள தேதி இதுதானா? இந்த அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய அம்சங்கள்

தோற்றம்

ஹோண்டா சமீபத்தில் வெளியிட்டுள்ள டீசர் வீடியோவினை கீழே பதிவிட்டுள்ளோம். அதில் மோட்டார்சைக்கிளின் தோற்றத்தை ஓரளவிற்கு காணலாம். குறிப்பாக பைக்கின் முன்பகுதியை பார்க்கலாம். ஹார்னெட் 2.0 பைக்கில் உள்ளதை போன்றதான எல்இடி ஹெட்லேம்ப்பை என்எக்ஸ்200 பெற்றுவரவுள்ளது.

ஆனால் ஹெட்லேம்பை சுற்றிய பேனல்கள் சிபி500எக்ஸ் பைக்கில் இருந்து பெறப்பட்டது போன்று உள்ளன. இவற்றுடன் இந்த அட்வென்ச்சர் பைக் ஸ்போக் சக்கர தேர்வையும் பெற்றுவரும் என எதிர்பார்க்கிறோம். அட்வென்ச்சர் பைக்கிற்கான அத்தனை அம்சங்களும் என்எக்ஸ்200-இல் இருக்கும் என்பது உறுதி.

ஹோண்டா என்எக்ஸ்200 இந்தியாவில் அறிமுகமாகவுள்ள தேதி இதுதானா? இந்த அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய அம்சங்கள்

என்ஜின்

புதிய என்எக்ஸ்200 அட்வென்ச்சர் பைக்கில் தற்போதைய ஹார்னெட் 2.0 பைக்கில் வழங்கப்படும் அதே 184.44சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 17.26 பிஎஸ் மற்றும் 16.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது.

ஹோண்டா என்எக்ஸ்200 இந்தியாவில் அறிமுகமாகவுள்ள தேதி இதுதானா? இந்த அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய அம்சங்கள்

ஆனால் இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கில் இந்த என்ஜின் சற்று திருத்தியமைக்கப்பட்டு பொருத்தப்படலாம். இதனால் ஆற்றல் அளவுகள் சற்று மாறலாம். இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளது.

ஹோண்டா என்எக்ஸ்200 இந்தியாவில் அறிமுகமாகவுள்ள தேதி இதுதானா? இந்த அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய அம்சங்கள்

சஸ்பென்ஷன்

என்எக்ஸ்200 மோட்டார்சைக்கிள் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் தங்க நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட தலைக்கீழான ஃபோர்க்குகளையும், பின்பக்கத்தில் மோனோஷாக்கையும் பெற்றுவரவுள்ளதை டீசர் வீடியோக்களின் மூலம் அறிய முடிகிறது.

ஹோண்டா என்எக்ஸ்200 இந்தியாவில் அறிமுகமாகவுள்ள தேதி இதுதானா? இந்த அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய அம்சங்கள்

அட்வென்ச்சர் பைக் என்பதால் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் ஹார்னெட் 2.0 பைக்கை காட்டிலும் சற்று அதிகமாக வழங்கப்படும். அதற்கு ஏற்ப சஸ்பென்ஷன் டிராவலும் பெரியதாக்கப்படலாம். அதேநேரம் சஸ்பென்ஷன் சுருள்கள் மென்மையானவைகளாக கொடுக்கப்படலாம்.

ஹோண்டா என்எக்ஸ்200 இந்தியாவில் அறிமுகமாகவுள்ள தேதி இதுதானா? இந்த அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய அம்சங்கள்

விலை & போட்டிகள்

ஹோண்டா பிராண்டில் இருந்து விரைவில் வரவுள்ள என்எக்ஸ்200 மலிவான அட்வென்ச்சர் பைக்குகளுள் ஒன்றாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.1.5 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம். இதனால் இந்த ஹோண்டா பைக்கிற்கு ஹீரோ மோட்டோகார்பின் எக்ஸ்பல்ஸ் 200 நேரடி போட்டியாக விளங்கும்.

ஹோண்டா என்எக்ஸ்200 இந்தியாவில் அறிமுகமாகவுள்ள தேதி இதுதானா? இந்த அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய அம்சங்கள்

ஏனெனில் இந்த ஹீரோ பைக்கின் விலையும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சத்திற்குள் தான் உள்ளது. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மட்டுமின்றி ராயல் என்பீல்டு ஹிமாலயன் மற்றும் கேடிஎம் 250 அட்வென்ச்சர் உள்ளிட்ட இந்தியாவில் விற்பனையில் மற்ற அட்வென்ச்சர் பைக்குகளின் போட்டியினையும் ஹோண்டா என்எக்ஸ்200 சமாளிக்க வேண்டியதாக இருக்கும்.

ஹோண்டா என்எக்ஸ்200 இந்தியாவில் அறிமுகமாகவுள்ள தேதி இதுதானா? இந்த அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய அம்சங்கள்

ஹோண்டா என்எக்ஸ்200 வருகிற ஆகஸ்ட் 19ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அன்றைய தினத்தில் இந்த அட்வென்ச்சர் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்கள் நமக்கு தெரிய வரும். ஆனால் இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கின் பெயரை கூட தயாரிப்பு நிறுவனம் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

ஹோண்டா என்எக்ஸ்200 இந்தியாவில் அறிமுகமாகவுள்ள தேதி இதுதானா? இந்த அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய அம்சங்கள்

இத்தகைய பெயரை ஹோண்டா மோட்டார் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் பதிவு செய்து கொண்டதாக ஒரு ஆவண படம் மட்டுமே வெளியாகி இருந்தது. ஆகஸ்ட்டில் இரு புதிய மோட்டார்சைக்கிளை இந்திய சந்தைக்கு கொண்டுவர உள்ளதாக ஹோண்டா 2 வீலர்ஸ் நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் கூறியிருந்தது.

ஹோண்டா என்எக்ஸ்200 இந்தியாவில் அறிமுகமாகவுள்ள தேதி இதுதானா? இந்த அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய அம்சங்கள்

எனவே அதில் ஒன்றாக என்எக்ஸ்200 இருக்கலாம். நமது இந்த நம்பிக்கைக்கு ஏற்ப அவ்வப்போது இவ்வாறு இந்த புதிய ஹோண்டா அட்வென்ச்சர் பைக் தொடர்பான டீசர் வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த ஹோண்டா பைக் குறித்த அப்டேட்களுக்கு நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்ந்து இணைப்பில் இருங்கள்.

Most Read Articles
English summary
Honda NX200 India Launch On 19th August, Top 5 Things To Know.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X