போலீஸ்காரங்க எதிரிலேயே பைக்கை ஓட்டி சென்ற சிறுவன்... அதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு தெரியுமா? வைரல் வீடியோ!!

போலீஸ்காரர்கள் எதிரிலேயே சிறுவன் ஒருவன் தைரியமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம்.வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

போலீஸ்காரர்கள் எதிரிலேயே பைக்கை ஸ்டார்ட் செய்து ஓட்டி சென்ற சிறுவன்... அதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு தெரியுமா?

இந்தியாவில் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் வாகனங்களை இயக்க அனுமதியில்லை. 18 வயது பூர்த்தியடைந்த நபராக இருந்தாலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கக் கூடாது என்பதே மோட்டார் வாகன சட்டத்தின் விதியாகும். இருப்பினும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த விதிமீறல் அவ்வப்போது அரங்கேறிய வண்ணமே உள்ளது.

போலீஸ்காரர்கள் எதிரிலேயே பைக்கை ஸ்டார்ட் செய்து ஓட்டி சென்ற சிறுவன்... அதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு தெரியுமா?

அந்தவகையிலான ஓர் சம்பவம் பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. தற்போது மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு விதிகள் லேசான தளர்வுகளுடன் அமலில் இருக்கின்றது.

போலீஸ்காரர்கள் எதிரிலேயே பைக்கை ஸ்டார்ட் செய்து ஓட்டி சென்ற சிறுவன்... அதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு தெரியுமா?

இந்த நிலையில், ஊரடங்கு விதியை மக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என்பது குறித்த ஆய்வை அம்மாநில போலீஸார் ரோந்து பணிகளின் வாயிலாக மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு, ரோந்து பணியை மேற்கொண்டிருந்த போலீஸாரின் கண்களிலேயே சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது சிக்கியிருக்கின்றான்.

போலீஸ்காரர்கள் எதிரிலேயே பைக்கை ஸ்டார்ட் செய்து ஓட்டி சென்ற சிறுவன்... அதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு தெரியுமா?

அவனுக்கு 8 அல்லது 10 வயதே இருக்கும் என போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். எந்தவொரு மோட்டார் வாகனத்தையும் இயக்க அனுமதியில்லா வயது இது. இந்த நிலையில், முகக்கவசம் கூட அணியாத நிலையில் சிறுவன் இருப்பதை காண முடிகின்றது. மேலும், சிறுவன் போலீஸாரிடத்தில் என்னை விட்டு விடுங்கள் என அழுது புலும்பும் காட்சிகளும் அதில் அடங்கியுள்ளன.

போலீஸ்காரர்கள் எதிரிலேயே பைக்கை ஸ்டார்ட் செய்து ஓட்டி சென்ற சிறுவன்... அதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு தெரியுமா?

சிறுவனின் கெஞ்சல்கள் அதிகமானதை அடுத்து போலீஸார்கள் சிறுவனை எந்தவித அபராதமும் இன்றி செல்ல அனுமதித்திருக்கின்றனர். செல்ஃப்-ஸ்டார்ட் வாயிலாக பைக்கை ஸ்டார்ட் செய்த சிறுவன் சில நிமிடங்களில் அந்த பகுதியை விட்டு சென்றான். போலீஸார் முன்னிலையிலேயே செல்ஃப் ஸ்டார்ட் செய்த அச்சிறுவன் மிக தைரியமாக பைக்கை ஓட்டிச் சென்றிருக்கின்றார்.

போலீஸ்காரர்கள் எதிரிலேயே பைக்கை ஸ்டார்ட் செய்து ஓட்டி சென்ற சிறுவன்... அதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு தெரியுமா?

இந்த சம்பவம் அனைத்தையும் மற்றொரு போலீஸார் அவரது செல்போனில் படம் பிடித்து அதனை வெளியிட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு ஓர் புதிய விதி அமல்படுத்தப்பட்டது. சிறுவனர்கள் மோட்டார்சைக்கிளை இயக்கினால் அவர்களுடைய பெற்றோர்களுக்கு அல்லது மோட்டார்வாகனத்தை இயக்க அனுமதித்த நபருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

போலீஸ்காரர்கள் எதிரிலேயே பைக்கை ஸ்டார்ட் செய்து ஓட்டி சென்ற சிறுவன்... அதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு தெரியுமா?

இருப்பினும், பலர் இந்த விதிமீறலில் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றனர். ஆகையால், இச்சம்பவத்தை தவிர்க்கும் பொருட்டு காவலர்கள் அதிகபட்சம் வாகனங்களை இயக்கும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு உச்சபட்ச அபராத செல்லாணை பாராபட்சம் இன்றி வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், இதுவரை பலர் இவ்விதிமீறலுக்காக தண்டனையைப் பெற்றிருக்கின்றனர். ஆனால், மஹாராஷ்டிராவில் நடைபெற்ற சம்பவத்தில் சிறுவன் அதிர்ஷ்டம் செய்திருக்கின்றார் என்றே கூற வேண்டும். ஏனெனில், போலீஸார்கள் அவர்களுக்கு எந்தவித அபராதத்தையும் வழங்கவில்லை. எனவேதான் பலர் சிறுவனை அதிர்ஷ்டசாலிகள் என கூறுகின்றேன்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Minor Drives Bike And Breaks Lockdown. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X